CLICK HERE
Thursday, 30 June 2016
Wednesday, 29 June 2016
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
தமிழக அரசு 1.7.2012 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் ஒவ்வொரு மாதமும் 150 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும்தான் சிகிச்சை பெற முடியும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 657 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ 4 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் பெறலாம். இத்திட்;டம் 30.6.2016 உடன் நிறைவடைவதால் 1.7.2016 முதல் நீடிக்கப்பட இருக்கும் புதிய காப்பீட்டுத்திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்துவதுடன், இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரசேன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக தமிழக
அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது
புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 30.6.2016 உடன் முடிவடைய உள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 1.7.2016 முதல் 4 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளது. 2007ல் 2 லட்சமாக இருந்த சிகிச்சைத் தொகை ஏப்ரல் 2012ல் 4 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2016ல் விரிவு படுத்த இருக்கும் திட்டத்தில் ரூபாய் 7.5 லட்சம் வரை நாண்கு ஆண்டுகளுக்குள் சிகிச்சை பெற முடியும் என அரசு தற்பொழுது உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் தற்பொழுது மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மாநகரங்களை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. ஊழியர்கள் காசில்லாமல் சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கில் அமுல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் சில மருத்துவமனைகள் முன் பணம் செலுத்தினால்தான் சிகிச்சையளிக்க முடியும் என நிர்பந்தம் செய்கின்றனர். பல நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சையளிக்க இயலாது எனவும் மறுக்கின்றனர். இதனால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது.
எனவே புதிதாக விரிவுபடுத்த இருக்கும் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் பொது துறை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். காசில்லா சிகிச்சையை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்துவதுடன் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். மாவட்டத் தொடர்பாளர்கள் சிகிச்சை பற்றிய முழு விபரங்களை ஊழியர்களிடம் தெளிவாக தெரிவிப்பதை உறுதி படுத்த வேண்டும். மேலும் ஊழியர்களிடம் தற்பொழுது பிடித்தம் செய்யும் தொகையை உயர்த்த கூடாது.
மேலும் சில அவசர சிகிச்சைகளுக்கு சிகிச்சை முடிந்த பின்னால் திரும்ப பணம் பெறும் வகையில் விதிகளில் தளர்வு செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையான உடல் பரிசோதனை செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும். தொடர் சிகிச்சை பெறும் நோய்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு
பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு
பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பொது சேம நல நிதியை இடையிலேயே திரும்ப பெற அனுமதியளித்து. இதற்கு முன்பு சந்தாதார் வைப்பு திட்டக் கணக்கை இடைநிறுத்தம் செய்து கொண்டாலும் 5 ஆண்டு நிறைவுக்கு பிறகே வைப்பு நிதியை பெற முடியும்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பொது சேமநல நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் இடையில் கணக்கை நிறுத்திக் கொண்டால், உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பணத்தை திரும்ப பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALL TRS TN... Siva.
பத்து ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை தேவையில்லை.
பத்து ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சரின் தனிப்பிரிவு அளித்த பதில்.
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு
ALL TRS TN,. Siva.
ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்..அனைவரும் அறிந்துகொள்வோம்.
ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்..அனைவரும் அறிந்துகொள்வோம்.
1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,
பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. பணி நியமன முழு விபரம்.
3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.
4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.
5. GPF/TPF/CPS எண் விபரம்.6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.
7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification).
8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .
9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.
10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).
11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.
12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.
13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.
14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.
15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்
16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.
17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.
18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.
19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.
20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.
21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.
ALL TRS TN... Siva.
வாழை மரம்... இதன் பயன்பாடு மற்றும. மகத்துவத்தை நாம் அறிந்துகொள்வோம்
வாழை மரம்... இதன் பயன்பாடு மற்றும. மகத்துவத்தை நாம் அறிந்துகொள்வோம்
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.
வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.
வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.
மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன.
ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன
வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு வாழையடி வாழையாகத் தொடர்வது. இலை, தண்டு, பூ, காய் மற்றும் பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை.
இவை ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போமானால்.
வாழைப் பூ –
வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.
வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். செரிமானக் கோளாறு இருக்கும் போது வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாழைக் காய் –
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல் மற்றும் வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும்.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப் பழம் –
அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம் இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
சிலர் வாழைப் பழத்தை பால் தயிருடன் சேர்த்து மில்க்ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு. வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது.
ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.
வாழைத் தண்டு –
உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.
சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும் அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத் தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு அல்லது சீரகத்தூள் சேர்த்து வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம்.
உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழை இலை –
வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம்.
வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது.
எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது
ALL TRS TN... Siva.
சர்வதேச நாட்கள்...அறிந்துகொள்வோம். ஒவ்வொரு மாதம் ....முக்கிய நாட்கள்
சர்வதேச நாட்கள்...அறிந்துகொள்வோம். ஒவ்வொரு மாதம் ....முக்கிய நாட்கள்
ஜனவரி
10 உலக சிரிப்பு தினம்
12 தேசிய இளஞர் நாள்
15 இராணுவ தினம்
16 விக்கிபீடியா நாள்
19 மதங்கள் தினம்
20 சமூக நிதி தினம்
22 சாரணியர் தினம் .
26 சுங்கவரிதினம்
27 ஹோலோ காஸ்ட் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் தினம்
28 நோயாளர் தினம்
29 அரசியலமைப்பு நாள்
30 தொழுநோய் ஒழிப்பு தினம்&தியாகிகள் தினம்
பிப்ரவரி
02 புனித வாழ்வுக்கான தினம்&சதுப்புநிலதினம்
08 பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்
11 காதலர் தினம்
12 டார்வின் நாள்
21 தாய் மொழிகள் தினம்
24 கலால் வரி தினம்
28 அறிவியல் தினம்
மார்ச்
06 புத்தகங்கள் தினம்
08 பெண்கள் தினம்&எழுத்தறிவுதினம்
11 பொது நலவாய அமைப்பு தினம்
13 சிறுநீரக விழிப்புணர்வுதினம்
15 நுகர்வோர்தினம்
20 ஊனமுற்றோர்தினம்&சிட்டுக்குருவிகள் தினம்
21 காடுகள்தினம்&சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்&கவிதைகள் தினம்
22 தண்ணீர்தினம்
23 தட்பவெப்பநிலை தினம்
24 காசநோய் தினம்
28 கால் நடை மருத்துவ தினம்
ஏப்ரல்
01 முட்டாள்கள் தினம்
02 சிறுவர் நூல் நாள்
04 நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வுதினம்
05 சமுத்திரதினம்
07 சுகாதார தினம்
08 உரோமர் கலாச்சாரதினம்
12 வான் பயண தினம்&வீதியோர சிறுவர்களுக்கான தினம்
14 அமைதி தினம்
15 அரவாணிகள் தினம்&நூலகர்கள் தினம்
17 இரத்த உறையாமை தினம்.
18 மரபு தினம்
19 புகைப்பட தினம்
22 பூமி தினம்
23 புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
25 இறைச்சல் விழிப்புணர்வு தினம்
26 அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
30 குழந்தை தொழிலாளர்கள் தினம்
மே
01 உலக தொழிலாளர் தினம்
03 பத்திரிகை சுதந்திர தினம்&சக்தி தினம்
04 தீயணைக்கும் படையினர் நாள்
02 ஆவது ஞாயிறு அன்னையர் தினம்
08 செஞ்சிலுவை தினம்&விலங்குகள் பாதுகாப்பு தினம்
12 சர்வதேச செவிலியர் தினம்
15 குடும்பங்கள் தினம்
17 தொலைத்தொடர்பு தினம்
16 தொலைக்காட்சி தினம்
18 அருங்காட்சியக தினம்
19 கல்லீரல் நோய் தினம்&பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
21 உலக பண்பாட்டு தினம் &வன்முறை ஒழிப்பு தினம்
22 உயிரின பல்வகைமை தினம்
23 ஆமைகள் தினம்
24 காமன் வெல்த் தினம்
29 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதிக்காப்போர் தினம்&தம்பதியர் தினம்
31 புகையிலை எதிர்ப்புதினம்
ஜூன்
01 சர்வதேச சிறுவர் தினம்
05 சுற்றுபுறதினம்
08 சமுத்திர தினம்
03 வது ஞாயிறு தந்தைகள் தினம்
12 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம்
14 இரத்ததான தினம்&வலைப்பதிவர் நாள்
15 மேஜிக் வித்தை தினம்
20 அகதிகள் தினம்
21 உலக இசை நாள்
23 இறைவணக்க தினம்
26 போதை ஒழிப்பு தினம்&26 சித்திரவதைக்கு ஆளான்னோருக்கான ஆதரவு நாள்
27 நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
28 ஏழைகள் தினம்
ஜூலை
01 கேளிக்கை தினம்& மருத்துவர்கள் தினம்
01வது சனிக்கிழமை கூட்டுறவுதினம்
11 மக்கள் தொகை தினம்
15 கல்வி நாள்
3 வது ஞாயிற்று கிழமை தேசிய ஐஸ் கிரீம் தினம்
20 சதுரங்க தினம்
ஆகஸ்ட்
01 தாய்ப்பால் தினம்&சாரணர் தினம்
02 நட்பு தினம்
06 ஹிரோஷிமா தினம்
09 நாகசாகி தினம்&ஆதிவாசிகள் தினம்
12 இளஞர் தினம்
13 இடதுகை பழக்கமுடையோர் தினம்
14 கலாசார ஒற்றுமை நாள்
18 உள்நாட்டு மக்களின் சர்வதேசதினம்
30 காணாமற்போனோர் நாள்
செப்டம்பர்
05 இந்திய ஆசிரியர் தினம்
08 எழுத்தறிவு தினம்
18 அறிவாளர்கள் தினம்
15 மக்களாட்சி நாள்
16 ஓஷோன் தினம்
21 பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 ஊமை&காது கோளாதோர் தினம்
27 சுற்றுலா தினம்
அக்டோபர்
01 முதியோர் தினம்&இரத்ததான தினம்
02 சைவ உணவாளர் தினம்&அகிம்சை தினம்
03 குடியிருப்பு (உறைவிடம்) தினம்&வனவிலங்குகள் தினம்
04 விலங்குகள் நல தினம்
05 இயற்கை சூழல் தினம்
08 இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
10மரணதண்டனை எதிர்ப்பு தினம்
09 அஞ்சலக தினம்
12 உலக பார்வை தினம்
14 தர நிர்ணய நாள்
15 விழிப்புலனற்றோர் தினம்
16 உணவுதினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
18 இடப்பெயர்வாளர் தினம்
24 ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 சிந்தனைகள் தினம்
31 சிக்கன நாள்
நவம்பர்
11நினைவுறுத்தும் நாள்
14 நீரிழிவு நோய் தினம்
16 உலக சகிப்பு நாள்
17 அனைத்துலக மாணவர் நாள்
03 ஆவது வியாழக்கிழமை உலக தத்துவ நாள்
19 தேசிய ஒருமைப்பாட்டு தினம்
24 படிவளர்ச்சி நாள்
25 பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
26 சட்ட தினம்
29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்
டிசம்பர்
01 எயிட்ஸ் தினம்
02 அடிமைத்தனம் ஒழிப்பு தினம்&ஒளிபரப்பு தினம்
03 ஊனமுற்றோர் தினம்
05 பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
06 மத நல்லிணக்க தினம்
07 கொடிதினம்
08 தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம்
09 விமானபோக்குவரத்து தினம்&ஊழல் எதிர்ப்பு நாள்
10 மனித உரிமைகள் தினம்
11 சர்வதேச மலை நாள்
17 பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
18 சிறுபான்மையினர் உரிமை தினம
மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்....36 அம்ச கோரிக்கைகள்.
மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்....36 அம்ச கோரிக்கைகள்.
மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன. எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.
இந்த ஊழியர்கள் முன் வைப்பது மொத்தம், 36 அம்ச கோரிக்கைகள். அவற்றில், 18 முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
1. ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
2. கடந்த ஜனவரி, 1ம் தேதிக்கு பின், புதிதாக சேர்ந்த ஊழியர்களுக்கு, இந்த குறைந்தபட்ச ஊதியம் எத்தனை மடங்கு உயர்கிறதோ, அது போல ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும், அந்த அளவுக்கு உயர வேண்டும்
3. ஆண்டு ஊதிய உயர்வை, 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
4. பதவி உயர்வின்போது, ஒரு மடங்கு ஊதிய உயர்வுக்கு பதிலாக, ஆண்டு
ஊதிய உயர்வு போல, இரு மடங்கு வழங்க வேண்டும்
5. ஆண்டு ஊதிய உயர்வு என்பது, ஜனவரி, ஜூலை என, இரண்டு முறை இருக்க வேண்டும். தற்போது, ஜூலை மட்டுமே உள்ளது
6. ஒருவரது பணி காலத்தில், ஐந்து பதவி உயர்வு வழங்க வேண்டும்; தற்போது, மூன்று பதவி உயர்வு முறையே உள்ளது
7. ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்; தற்போது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது
8. புதிய ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 4.82 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத்தின் கீழ் வருகின்றனர்; மொத்தம் உள்ள ஊழியர் எண்ணிக்கை, 32 லட்சம்
9. ஏழாவது ஊதிய குழு வழங்கியபரிந்துரை படி, தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போதிய பதவி உயர்வு வழங்காததை, மாற்றி அமைக்க வேண்டும்
10. ஓய்வு ஊதியம் என்பது, சம்பளத்தில், 50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இதை, 60 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும்
11. ஓய்வு ஊதியத்தில், ஒரு பகுதி, 12 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு முன் பணமாக வழங்கப்படுகிறது. அதன் பின், 15 ஆண்டுகள் கழித்து தான் முழு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை, 10 ஆண்டுகள் முடிந்தவுடன், முழு ஓய்வு ஊதியம் வழங்கும் முறையாக்க வேண்டும்
12. ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது, இரண்டு வகையில் கணக்கிட்டு, அவர்களின் ஓய்வு ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பரிந்துரை உள்ளது. இரண்டில் எது லாபகரமானதோ அதை ஊழியருக்கு அமல்படுத்த வேண்டும்
13. போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டதை, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருத்தி, 2014 - 15ல் இருந்தே அமல்படுத்த வேண்டும்
14. கிராமிய அஞ்சல் ஊழியர்களை,
Advertisement
அரசு ஊழியராக கருத வேண்டும். அதன்படி, சலுகைகள் வழங்க வேண்டும்
15. ஆயுத தளவாடங்கள், ரயில்வேஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது
16. அஞ்சல் துறையை, 'கார்ப்பரேட்' மயமாக்க எடுத்த முடிவை கைவிட வேண்டும்
17. நிறுத்தப்பட்ட, 52 படிகளை திரும்ப தர வேண்டும்
18. மத்திய அரசு துறையில், 6.64 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இது குறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:தற்போது, ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின், அடிப்படை சம்பளமாக, 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை, 19 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி தர, மத்திய அரசு முன் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆக, 15 ஆயிரத்து, 750 ரூபாய் பெறப்படும் நிலையில், 10 ஆயிரத்து, 250 ரூபாய் மட்டுமே கூடுதலாக கேட்கிறோம்.
மற்ற எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.
அமைச்சரவை செயலர் மட்டுமே, இதுவரை தொழிற்சங்கத்தினரிடம் பேசி உள்ளார். ஆனால், பொறுப்பான அமைச்சர்கள் தலைமையிலான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டால் மட்டுமே, கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்.எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, இன்று, அமைச்சரவை கூடி கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதன் பின், பேச்சுக்கு அழைக்க வேண்டும். அழைத்து பேசி, முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலே, வேலை நிறுத்தம் வாபசாக வாய்ப்புள்ளது. இல்லையெனில், திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். எனினும், அரசு பேச்சு நடத்தும் என்ற முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர் என, ரயில்வே வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -
ALL TRS TN... Siva.
EMIS ENTRY: செய்முறை விளக்கம்...மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
EMIS ENTRY: செய்முறை விளக்கம்...மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
கல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.
1) மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).
3) Common pool (student pool)ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல்
மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்:-
முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.
Webpageல் உள்ள Students categery யை கிளிக் செய்யவும்.
Create child details - யை கிளிக் செய்யவும்.
1.First step TO 4.Fourth step வரை கேட்கப் பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்திச் செய்யவும்.
மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல் (Commen pool க்கு மாற்றுதல்)
முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.
Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.
Webpage ல் உள்ள Students categery யை கிளிக் செய்யவும்.
Child details list -கீழ் உள்ள அட்டவணையில் தேவையான வகுப்பு மாணவர் எண்ணிக்கை - யை கிளிக் செய்யவும்.
கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் இருந்து நாம்UPDATE அல்லது TRANSFERசெய்ய போகும் மாணவனின் பெயரை கிளிக் செய்யவும்.
மாணவனின் Profile openஆகும்.
கடைசியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள UPDATEஅல்லது TRANSFER கிளிக் செய்யவும்.
UPDATE செய்ய - UPDATE டை கிளிக் செய்யவும். ( மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் விடுபட்டு இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ UPDATEசெய்யவும் ).
சரியான விவரங்களை பூர்த்திச் செய்து Submitசெய்யவும்.
மாணவர்களின் விவரங்கள்UPDATE செய்யப்பட்டுவிட்டது.
TRANSFER செய்ய ( மாணவர்கள் தங்களது பள்ளியை விட்டு இடை நின்றாலோ அல்லது மாற்று சான்றிதழ்( TC) பெற்று வேறு பள்ளிக்குச் சென்றாலோ, இறந்தாலோ TRANSFERசெய்ய வேண்டும்.)
மாணவனின் Profile -கடைசியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளTRANSFER கிளிக் செய்யவும்.
Whether child was Transferred to another school – கீழே கொடுக்கப்பட்டுள்ள Yes யை கிளிக் செய்யவும்.
Date of Transfer(mandatory) –க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் மாற்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட தேதியை டைப் செய்து பின் Submitசெய்யவும்.
தற்போது மாணவனின் விவரங்கள் முறையாகCommon Pool (Student Pool) க்கு மாற்றப்பட்டு விட்டது.
Common pool (student pool ) ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல் :-
முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.Webpage ல் உள்ள Students categery யை கிளிக் செய்யவும்.Student Pool – லை கிளிக் செய்யவும்.
District name , Block name, School name , Class Last studiedஆகியவற்றை சரியாக பூர்த்திச் செய்த பின் Submitசெய்யவும்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் இருந்து தங்களுக்கு தேவையான மாணவரின் பெயரை க்ளிக் செய்யவும்.
மாணவனின் Profile -கடைசியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளTRANSFER கிளிக் செய்யவும்
.Unique id no :- , Class studyingடைப் செய்து பின் Admit டை க்ளிக் செய்யவும்.
மாணவரின் விவரங்கள் தங்கள் பள்ளிக்கு மாற்றப் பட்டுவிட்டது.பின்பு மேல்பகுதியில் வலது புறம் உள்ள UDISE no ரை க்ளிக் செய்து Logoutகொடுத்து வெளியே வரவும்.
ALL TRS TN... Siva
அறிந்துகொள்வோம்...நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகள்..!
நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகள்..!
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
ALL TRS TN.. Siva.
2016-17- PRIMARY/MIDDLE/HIGH/HSS-MONTHLY WISE WORKING DAY LIST...
2016-17- PRIMARY/MIDDLE/HIGH/HSS-
MONTHLY WISE WORKING DAY LIST...
7th Pay:சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை: விரைவில் காலவரையற்ற போராட்டம்..
7th Pay:சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை: விரைவில் காலவரையற்ற போராட்டம்..
சென்னை : 7 வது சம்பள கமிஷன் கமிட்டியின் பரிந்துரையைஏற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என மத்திய அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் கேட்ட அளவிற்கு மத்திய அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. விலைவாசி உயர்விற்கு ஏற்றவாறு சம்பளம் உயர்த்தப்படவில்லை. ஆரம்ப சம்பளம் ரூ.23,000 ஆக இருக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ. 18,000 ஆக மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இதனால் விரைவில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALL TRS TN.. Siva
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.
இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மு.சிவக்குமார்
ஆல் டீச்சர் டி என்.
தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் பணம் செலுத்தப்பட்டது என்பதை அறிதல்.
தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய
கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய
கீழே உள்ள link ஐ தொடவும்(VP)
CLICK HERE...YOUR SALARY DETAIL'S
Tuesday, 28 June 2016
7th pay commission latest news today | மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
7th pay commission latest news today
| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம்உயர்த்தப்படுகிறது.
7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் மூலம் சம்பளம் மற்றும் இதர படிகள் மாற்றி அமைக்கப்படுகிறது. 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள், 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன.இதையடுத்து அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த சிபாரிசுகளை ஆய்வு செய்வதற்காக, மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் செயலாளர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, தனது ஆய்வை முடித்துக்கொண்டு, மத்தியநிதி அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்தஅறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மந்திரிசபை ஆலோசனை செயலாளர்கள் குழுவின் அறிக்கை அடிப்படையில், மந்திரிசபை குறிப்பு ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் தயாரித்துள்ளது.
அக்குறிப்பு, நாளை (புதன்கிழமை) நடக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றுதெரிகிறது. அதையடுத்து, 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை மத்திய அரசு அமல்படுத்தும். ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமல்படுத்தப்படும் என்று நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா கூறினார். 23.5 சதவீத சம்பள உயர்வு சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியத்தில் ஒட்டுமொத்தமாக 23.5 சதவீத உயர்வுக்கு 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. இதில் அடிப்படை சம்பளத்தை மட்டும் 14.27 சதவீதம் உயர்த்த சிபாரிசு செய்திருந்தது. இது, கடந்த 70 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆரம்பநிலை சம்பளம், ரூ.7 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் (மந்திரிசபை செயலாளர் பெறுவது) ரூ.90 ஆயிரமாகவும் உள்ளது. இதை ஆரம்பநிலை சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. இருப்பினும், இந்த சிபாரிசுகளை ஆய்வு செய்த செயலாளர்கள் குழு, ஆரம்பநிலை சம்பளத்தை ரூ.23,500 ஆகவும், அதிகபட்ச சம்பளத்தை ரூ.3 லட்சத்து 25 ஆயிரமாகவும் உயர்த்த சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் சுமை இந்த சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் உயர்வால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். இதனால், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் சுமை ஏற்படும். 7-வது சம்பள கமிஷனை அமல்படுத்த நடப்பு 2016-2017-ம் நிதி ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், இடைக்கால ஒதுக்கீடு என்ற பெயரில் பல்வேறு அமைச்சகங்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ALL TRS TN.. Siva
TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.
TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.
தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
மொத்த இடங்கள்:272
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Lecturers-38
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,700
பணி: Lecturers - 166
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
பணி: Junior Lecturers - 68
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் துறையில் முதுகலை பட்டத்துடன் எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:அனைத்து பிரிவினருக்கும் ரூ.50
விண்ணப்பிக்கும் முறை:தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரி அலுவலகத்தில் (Chief Education Officer) விநியோகம் செய்யப்படும் விண்ணப்பங்களை வாங்கி, தெளிவாக பூர்த்தி செய்து, அந்தந்தமாவட்ட தலைமை கல்வி அதிகாரி அலுவலகங்களிலேயே அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர் பணியாளர் தேர்வாணய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி:15.07.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கானகடைசி தேதி:30.07.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:17.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அல்லது http://trb.tn.nic.in/DTERT2016/28062016/Noti.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ALL TRS TN.. Siva
7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு.
7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு.
மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இம்மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை இதன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள மற்றும் படிகள் உயர்வுஉயர்நிலைக்குழு செயலாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படியில் இந்த ஊதிய உயர்வு இருக்கும் என்றும் குறிப்பாக அடிப்படை சம்பளத்தில் 2.7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறதுகுறைந்த பட்ச ஊதியம் 18ஆயிரம் ரூபாயில் இருந்து 23ம் ஆயிரமாக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளித்தவுடன் கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுவழங்கப்படும்.இதன்மூலம் 47 லட்சம் அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள். சம்பள உயர்வு ஜூலை 1ம் தேதி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALL TRS TN.. Siva
மாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்
மாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது விரிவுபடுத்தப்பட்டு முறையான சேவையைத் தொடங்க உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கித் தீர்வு காணும் வகையில், நடமாடும் ஆலோசனை மையம் (ம்ர்க்ஷண்ப்ங் ஸ்ரீர்ன்ய்ள்ங்ப்ப்ண்ய்ஞ் ஸ்ரீங்ய்ற்ழ்ங்) பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, சுற்றுப்புறச்சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச் சோர்வு, மனக் குழப்பம், பாலியல் பிரச்னைகள், தேர்வு அச்சம், மதிப்பெண் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதும், உடல் மற்றும் மன ரீதியாக பாதித்து கல்வியைக் கைவிடும் நிலையும், தேர்வைப் புறக்கணிப்பதும், மதிப்பெண்களை இழப்பதும் நிகழ்கிறது.
10 மண்டலங்களில் சேவைத் தொடக்கம்: இந்தச் சூழலை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், நடமாடும் ஆலோசனை மையங்கள் 2013-14ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை 10 மண்டலங்களாகப் பிரித்து, முதல் கட்டமாக 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்பட்டன.
டெம்போ டிராவலர் வேனில் எல்சிடி டிவி, ஒலிபெருக்கிகள், சிடி பிளேயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், உளவியல் ஆலோசகரும் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் 2013-14-இல் இந்த நடமாடும் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. கடலூர் மண்டலத்துக்குள்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
உளவியல் ஆலோசகராக செந்தில் நியமிக்கப்பட்டு, அவர் கல்வித் துறை அதிகாரிகள் குறிப்பிடும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் பிரச்னைகளுக்கு உளவியல் ரீதியாக, ஒளிப்படக் காட்சியுடன் ஆலோசனை வழங்கி வந்தார். குறிப்பாக 9-முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் குடும்பச் சூழல் நெருக்கடி, தேர்வு நேர அச்சம், மாணவர்களிடையே குழு மோதல் போன்ற இடையூறுகளால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கப்படுவதுடன், உடல்பயிற்சி, சரிவிகித உணவு போன்ற உடல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று மாவட்டங்களுக்கு ஒரு சேவை மையம் என்பதால், அதிகளவில் இந்த சேவை மாணவர்களிடம் சேராத நிலை இருந்தது. பல மாவட்டங்களில் இதுகுறித்து வெளியே தெரியாமலும் போனது.
சேவை விரிவாக்கம்: நிகழாண்டில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு, கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதாவது, மேலும் 10 மண்டலங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதனால், 3 மாவட்டங்களுக்கு ஒரு மையம் என்பது குறைக்கப்பட்டு, 2 மாவட்டங்களுக்கு ஒரு மையம் என்ற வகையில் கூடுதல் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெரிய கல்வி மாவட்டங்களான விழுப்புரம், வேலூர் மாவட்டங்களுக்கு தற்போது நடமாடும் ஆலோசனை மையத்துக்கான வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சா.மார்ஸிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்திலிருந்துதான் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டப் பள்ளிகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களுக்கும் புதிதாக நடமாடும் ஆலோசனை மையத்துக்கான வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக, விரைவில் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டு, நிகழ் கல்வியாண்டு முதல் ஆலோசனை மையம் இயங்கும் என்றார் அவர்.
ALL TRS TN.. Siva
Monday, 27 June 2016
RTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
RTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை
3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை
4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை
5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.
6. நாமாக விளக்க மோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.
7. தெளிவுரை, விளக்கம், மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.
8. கோரிக்கை, புகார், யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.
மனுதாரர் தன் மீதான புகார் குறித்து நகல் கேட்டால் கொடுக்கலாம்.
9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால் தெரிவிக்க வேண்டியதில்லை.
10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை
11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின், விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.
12. ஏன் எப்படி, எங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும், ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை
13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது
14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)
15. மூன்றாம் நபர் குறித்த விபரம் , நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம், கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை)
மனைவி கூட மூன்றாம் நபர்
16. பட்டா ட்ரான்ஸ்பர், சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை
17.SR Copy தர வேண்டியதில்லை
18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை
19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக பணி தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம், தெரிவிக்க வேண்டியதில்லை
20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை
21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால், தெரிவிக்க வேண்டியதில்லை
22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.
பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்
23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது
24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரர் RTIல் மனு சமர்பித்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம்
25. பதிவேடுகளில் இல்லாதவை. தகவல் அல்ல. வழங்க வேண்டியதில்லை
26. பதில் செயல்முறை ஆணை குறிப்பாணை வடிவில் கூடாது
ALL TRS TN.. Siva
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்.
தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக,மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு, செயலர் சபிதா அளித்துள்ள விளக்கம் வருமாறு:
1,096 புதிய பள்ளிகளில், 845 பள்ளிகளுக்கு இன்னும் கட்டடப் பணிகள் முடியாதது ஏன்?
ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன; ஒரு ஆண்டில் முடித்து விடுவோம்.கடந்த, 2010 முதல், 2,031 பள்ளிகளை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
கழிப்பறை தவிர மற்ற பணிகளை மேற்கொள்ளவே இல்லையே?
கட்டுமான செலவு உயர்ந்து விட்டதால், 878பள்ளிகளுக்கான திட்ட அனுமதியை, திரும்ப ஒப்படைக்கிறோம். மீதமுள்ளவற்றுக்கு,தேவைப்பட்டால் மறு ஒப்புதல் பெற்றுக் கொள்கிறோம்.(மறு ஒப்புதல் அளித்தாலும், கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்காது என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்)தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34;காஞ்சிபுரம் - 58.57 சதவீதம் என முன்னணியில் உள்ளனவே?
சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள்,தொழிற்சாலை, வணிக பகுதிகள் நிறைந்தவை. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலும்,தொழில் திறன் சார்ந்த படிப்புகளுக்காக, 8ம்வகுப்பு முடித்ததும், ஐ.டி.ஐ.,யில் படிக்கச் செல்வதால், 9, 10ம் வகுப்பில் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.
பள்ளிப் படிப்பு இடைநிற்றலை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்?
அதற்காகத்தான், தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப், சைக்கிள்' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனரே?
விடுதிகள், வாடகை கட்டடத்தில் இயங்குவ தால்,இந்த நிலை உள்ளது. இனி, மத்திய அரசின் இலக்கை எட்டி விடுவோம்.
தமிழகத்தில், 10 சதவீத பகுதிகளில், 5 கிலோ மீட்டர் சுற்றளவில், உயர்நிலைப் பள்ளிகள் இல்லாதது ஏன்?
எதிர்காலத்தில் இந்த நிலை இல்லாமல், 5 கிலோ மீட்டருக்குள் பள்ளிகளை கொண்டு வருவோம்.
கடந்த, 2015ம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி,உயர்நிலைக் கல்வியின் தரம், தமிழகத்தில் பின்தங்கியுள்ளது ஏன்?
மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டப்படி,இந்த கணக்கெடுப்பு நடத்தியுள்ளதால், தமிழக பாடத்திட்ட மாணவர்களிடையே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம், ஆலோசனை நடத்த உள்ளோம்.
தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010 - 11ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டங்களை துவங்காதது ஏன்;இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் தூங்குகிறதே?
இந்த திட்டத்துக்கான, 'டெண்டர்' விடுவதில், சில பிரச்னைகள் ஏற்பட்டன. விரைவில், பணிகளை துவங்கி விடுவோம்.
அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லையே?
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை.
ஆதார் பதிவில், 34 சதவீத மாணவர்கள் இன்னும் சேர்க்கப்படாமல், தமிழகம் பின்தங்கியுள்ளது ஏன்?
இலக்கை எட்ட தேவையான முயற்சிகளை விரைவில் மேற்கொள்வோம்.
தமிழகத்தில் இதுவரை, 9, 10ம் வகுப்பு அளவிலான,தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் துவங்கவே இல்லை. மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியுள்ளதே?
நடவடிக்கை எடுக்கிறோம்; விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம். இவ்வாறு பள்ளிக் கல்வி செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளதாக, மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ALL TRS TN.. Siva
DTEd Course -Admission-SWS - 2016-17 STUDENT COUNSELLING RANK & CALL LETTER DOWNLOAD
DTEd Course -Admission-
SWS - 2016-17 STUDENT COUNSELLING RANK
CALL LETTER DOWNLOAD
By ALL TRS TN.. Siva
அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!
அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!
பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:
1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது.
2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம்.
அதைத் தீர்க்கவே இக்கட்டுரை. வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. கடன் வரம்பு:
அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும்.
ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். யாரெல்லாம் கடன் பெறலாம்?: சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். கடனின் பல்வேறு பிரிவுகள்:
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம்: வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.
* மனை வரைபடம்
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்
ALL TRS TN. Siva
Sunday, 26 June 2016
ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது
ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது
ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், இரு மடங்கு அளவுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் பலவித விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
'தேர்வு நிலை உத்தரவு வழங்கும் முன், ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை வருவதில் இழுபறி ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில், அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனால், 'சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை இல்லை' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Friday, 24 June 2016
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை !
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை !
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்)
செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:
பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையில் பங்களிப்புடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்புப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை !
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை !
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்)
செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:
பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையில் பங்களிப்புடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்புப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ALL TRANSFER APPLICATIONS
Wednesday, 22 June 2016
SLAS 2016 - SCHOOL WISE INVIDUAL RESULTS - ALL DISTRICTS (VELLORE, COIMBATORE, THENI, DHARMAPURI DISTRICTS UPDATED)
SLAS 2016 - SCHOOL WISE INVIDUAL RESULTS - ALL DISTRICTS (VELLORE, TIRUVALLORE DISTRICTS UPDATED)
ALL TRS TN,.. Siva
Monday, 13 June 2016
அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு.
அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு.
தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதில் கடைசியாக வழங்கப்பட்ட 6 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அதிகபட்ச சம்பள உயர்வை மத்திய மாநில அரசுஊழியர்களுக்கு அளித்தன.இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி கட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்தது.
அதன்படி இந்த பரிந்துரைகள் 2015ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கமிஷன் பரிந்துரைகளை ஆய்வு செய்ய கேபினட் செயலர் பி.கே.சின்கா தலைமையில் செயலர்கள் குழு கடந்த ஜனவரி மாதம் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி இன்று கூடி 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கிறது.இதை தொடர்ந்து செயலர் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆகஸ்ட் 1 முதல் சம்பள உயர்வு அமல்படுத்தப்படும். ஜனவரி 2016 முதல் ஆகஸ்ட் வரையிலான நிலுவை தொகை ஒரே தவணையில் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 21 ஆயிரம் ஆகவும், அதிக பட்ச சம்பளம் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரமாகவும் நிர்ணயித்து செயலர்கள் குழு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.
ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றதும் உடனுக்குடன் 5 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரின் பணிப் பதிவேட்டில் அவர்களின் ஈட்டிய விடுப்பு, மருத்துவவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு வரவு பதிவு, பணி சார்பார்த்தல் பதிவு ஆகிய விவரங்கள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். இப்பணிகளைச் செய்ய ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.
இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.
பள்ளி மாணவர்களுக்கான அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற, தனியாக மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கத் தலைவர் சிவா.தமிழ்மணி, அமைப்பு செயலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் கிருபாகரன், தலைமையிடச் செயலர் இஸ்மாயில் உள்ளிட்டோர், பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
* கல்வித்துறையில் அமல்படுத்தப்படும் இலவச திட்டங்களை முறையாக செயல்படுத்த, மாவட்டந்தோறும் தனியாக மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி போன்ற பணியிடங்களை நியமிக்க வேண்டும்
*அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்களை கலைக்காமல், அவற்றில் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்
*குறிப்பிட்ட நேரம் மட்டுமின்றி எந்த நேரமும் கல்விப் பணியாற்றும் கல்வி அதிகாரிகளுக்கு, 5,000 ரூபாய் தனி ஊதியம் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரிசையில் நிற்க வேண்டாம் பெற்றோர்கள்...இனி பாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும்!
வரிசையில் நிற்க வேண்டாம் பெற்றோர்கள்...இனி பாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும்!
இணையதளத்தில் பதிவு செய்தால் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களை வீடு தேடி அனுப்பிவைக்கும் வசதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2016–17 ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள், மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன. மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களைwww.textbookcorp.inஎன்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள இ–சேவை மையங்களில் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பதிவுசெய்த பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் அனுப்பிவைக்கப்படும்.'இ- சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்துதெரிந்து கொள்ளலாம்.
இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்' என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
மனமொத்த மாறுதல் ( MUTUAL TRANSFER )
மனமொத்த மாறுதல் ( MUTUAL TRANSFER )
ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
இப்பகுதி மனமொத்த மாறுதல் மூலம் வேறுமாவட்டங்களுக்கு விருப்ப மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
விவரங்களை பதிவு செய்ய...
மனமொத்த மாறுதல் ( Mutual Transfer ) B.T Asst (DEE)
பதிவு செய்த விவரங்களை பார்க்க
மனமொத்த மாறுதல் ( MUTUAL TRANSFER )
பதிவு செய்த விவரங்களை பார்க்க
மனமொத்த மாறுதல் ( MUTUAL TRANSFER )
மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்.(DATE OF EXAM : 19.06.2016)
மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்.(DATE OF EXAM : 19.06.2016)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) கீழ் ரும் கல்விச்செய்தி Link மூலமாக Download செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பானமேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)