Powered By Blogger

Tuesday, 28 June 2016

7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு.

7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு. 


மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இம்மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை இதன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள மற்றும் படிகள் உயர்வுஉயர்நிலைக்குழு செயலாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படியில் இந்த ஊதிய உயர்வு இருக்கும் என்றும் குறிப்பாக அடிப்படை சம்பளத்தில் 2.7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறதுகுறைந்த பட்ச ஊதியம் 18ஆயிரம் ரூபாயில் இருந்து 23ம் ஆயிரமாக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளித்தவுடன் கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுவழங்கப்படும்.இதன்மூலம் 47 லட்சம் அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள். சம்பள உயர்வு ஜூலை 1ம் தேதி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALL TRS TN.. Siva

No comments:

Post a Comment