Powered By Blogger

Monday, 13 June 2016

வரிசையில் நிற்க வேண்டாம் பெற்றோர்கள்...இனி பாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும்!

வரிசையில் நிற்க வேண்டாம் பெற்றோர்கள்...இனி பாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும்!

இணையதளத்தில் பதிவு செய்தால் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களை வீடு தேடி அனுப்பிவைக்கும் வசதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2016–17 ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள், மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன. மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களைwww.textbookcorp.inஎன்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள இ–சேவை மையங்களில் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பதிவுசெய்த பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் அனுப்பிவைக்கப்படும்.'இ- சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்துதெரிந்து கொள்ளலாம்.

 இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்' என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment