Powered By Blogger

Wednesday, 31 August 2016

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு
பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி  

ஆன்லைன் கலந்தாய்வு  நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக
கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தால் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லையென்றாலும் கூட அருகாமை மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தில் தனக்கு மாறுதலைப் பெற்றுக் கொள்வார்.ஆனால் தற்போது Manual ஆக மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் நேரிடையாக கலந்துகொள்ள வேண்டும்.இதனால் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.

அங்கு காலிப் பணியிடம் இல்லையென்றால் வேறு வழி இல்லாமல் பழைய இடத்திலேயே பணிபுரிய வேண்டும்.இந்த வருடம் அருகாமை மாவட்டத்திற்காவது மாறுதல் பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச ஆறுதலான கனவும் பறிபோகும்.  காலிப் பணியிடங்களை மறைத்து பணம் பெற்றுக்கொண்டு மாறுதல் வழங்கத்தான்  இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கொதிக்கின்றன.

10 ம் வகுப்பு தவறில்லாமல் மதிப்பெண் சான்றிதழ் பெற வேண்டிய வழிமுறைகள் !

10 ம் வகுப்பு தவறில்லாமல் மதிப்பெண் சான்றிதழ் பெற வேண்டிய வழிமுறைகள் !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவறில்லாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க 
ஆசிரியர்கள்,பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்
விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

மேலும் அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட இரண்டு வருட போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தொழிலாளர் ஒப்பந்த சட்டம் மீதான புகார்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதஉள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜெட்லி கூறினார்.


7 வது சம்பள கமிஷன் அறிக்கை அடிப்படையில், அடிப்படை சம்பளம் ரூ. 18 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஸ்டிரைக்கிற்கு தொழில்ற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறும்

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறும்



மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணக்கு பயிற்சி கையேடு(2,3,4,5,6,7 &8 வகுப்புகள்)

மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணக்கு பயிற்சி கையேடு(2,3,4,5,6,7 &8 வகுப்புகள்) 



CLICK HERE...To Download  6,7th and 8th std Material 

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை
உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.


அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,செப்., 2ல், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில், அமைச்சகங்கள் இடையிலான குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Tuesday, 30 August 2016

Enhancement of calculation ceiling for the purpose of payment of PLB and Ad-hoc Bonus in case of Central Government Employees for the Accounting year 2014-15.

Enhancement of calculation ceiling for the purpose of payment of PLB and Ad-hoc Bonus in case of Central Government Employees for the Accounting year 2014-15.


தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல் !

தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல் !
ஆந்திர கடற்பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து ஆந்திர கடற்பகுதியில் நிலை


கொண்டுள்ளது.இதனால், தமிழக கடலோர மாவட்டங்களிலும், தென்மேற்கு பருவமழையால் மற்ற மாவட்டங்களிலும், மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரியலுார், சென்னை, கோவை, கடலுார், புதுச்சேரி, காரைக்கால், சேலம், நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ,காத்திருப்பு!

பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ,காத்திருப்பு!

பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், வாய்ப்பின்றி காத்திருக்கின்றனர்.

  தமிழகம் தவிர,மற்ற மாநிலங்களில்,ஆறாம் வகுப்பு முதல்,கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு, கணினிஅறிவியல் பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில்,கணினி அறிவியல் கல்விக்கென, பி.எட்., படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் மட்டும், 2,000ம் ஆண்டில் இருந்து, 45ஆயிரம் பேர்,பி.எட் முடித்துள்ளனர். இதுதவிர, காமராஜர், பாரதியார் பல்கலைகழகத்தில்  இருந்தும் பி.எட்., படித்து காத்திருப்போர்   உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 55ஆயிரம்,கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.

இதை நிரப்பாததால், தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது. மேலும், நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இருந்தே, கணினி கல்வி கட்டாயமாக்கினால், அரசால் வழங்கப்படும் இலவச லேப்-டாப்களை கல்விசார்பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பி.எட் கணினி ஆசிரியர் நலசங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் கூறுகையில், சமச்சீர் கல்வி அறிமுகமான போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கி, புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

பின், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கணினி கல்வி முடக்கப்பட்டது. இதை மீண்டும் துவங்கினால், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பட்டதாரிகள் பலனடைவர். கல்வி பணி அல்லாமல், அலுவலகப்பணியிலும் கணினி பட்டதாரிகளை நிரப்பலாம். வேலைவாய்ப்பு அறிவிக்காததால், பி.எட்., படிக்கும் கணினி பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கணினிஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார் மேலும் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில் மத்திய அரசு பணியாளர்கள் 33 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘7வது ஊதிய கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 2014-15 மற்றும் 2015-2016ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட 2 ஆண்டு போனஸ் வழங்கப்படும்’ என்றார். இதனிடையே அரசு வழங்கும் திருத்தியமைக்கப்பட்ட போனஸ் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

இதினிடையே விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.246 லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெட்லி; ‘விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.350 என நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ...வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு.பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்


வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு.பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களை அளிக்கலாம்.        வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது.          

  இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:           அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருப்பது அவசியம்.    

 எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். 

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.     சிறப்பு முகாம்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.       

 இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும்.electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்கலைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.      

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்திரவு:-👇

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்திரவு:-👇



INSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

INSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை -
வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு


GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்
பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)
பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும்
. பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை தொகு

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]

இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு
அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம் கணக்கிடுதல் தொகு
ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடை கணக்கீடு தொகு
மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 10 இலட்சம்.

பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.

அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். 

ALL TRS TN... Siva.

தாய் (அ) தந்தை விபத்தில் இறந்தோ , நிரந்திர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஐ பெறுவதற்கான விண்ணப்பம்

தாய் (அ) தந்தை விபத்தில் இறந்தோ , நிரந்திர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஐ பெறுவதற்கான விண்ணப்பம்






Monday, 29 August 2016

பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி !

பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி !
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால்,பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்,வாய்ப்பின்றி,காத்திருக்கின்றனர். தமிழகம் தவிர,மற்ற மாநிலங்களில்,ஆறாம் வகுப்பு முதல்,கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு,கணினி அறிவியல்

பட்டப்படிப்புடன்,பி.எட்.,முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில்,கணினி அறிவியல் கல்விக்கென,பி.எட்.,படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் மட்டும், 2,000ம் ஆண்டில் இருந்து, 45ஆயிரம் பேர்,பி.எட் முடித்துள்ளனர். இதுதவிர,காமராஜர்,பாரதியார் பல்கலைகளில் இருந்தும்,பி.எட்.,படித்து காத்திருப்போர்உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறையில்,அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 55ஆயிரம்,கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.

இதை நிரப்பாததால்,தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது. மேலும்,நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இருந்தே,கணினி கல்வி கட்டாயமாக்கினால்,அரசால் வழங்கப்படும் இலவச லேப்-டாப்களை கல்விசார்பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.பி.எட் கணினி ஆசிரியர் நலசங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் கூறுகையில்,சமச்சீர் கல்வி அறிமுகமான போது,ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கி,புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

 பின்,அ.தி.மு.க.,அரசு பொறுப்பேற்றதும்,கணினி கல்வி முடக்கப்பட்டது. இதை மீண்டும் துவங்கினால்,வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பட்டதாரிகள் பலனடைவர்.கல்வி பணி அல்லாமல்,அலுவலகப்பணியிலும் கணினி பட்டதாரிகளை நிரப்பலாம். வேலைவாய்ப்பு அறிவிக்காததால்,பி.எட்.,படிக்கும் கணினி பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு,கணினிஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும்,என்றார்.

தாய் (அ) தந்தை விபத்தில் இறந்தோ , நிரந்திர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கியதற்கான அரசாணை

தாய் (அ) தந்தை விபத்தில் இறந்தோ , நிரந்திர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கியதற்கான அரசாணை




புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளஅரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளஅரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்
பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
ராணுவத் தினருக்கு மட்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்..இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும். இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் என அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதிய நிதி எண் கொடுக்கப்பட்டு அதில் இரு தொகைகளும் வரவு வைக்கப்படும்.இவ்வாறு சிபிஎப் கணக்கில் சேரும் தொகை, அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது மொத்த தொகையில் 60 சதவீதம் திருப்பிக்கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதிய மாக வழங்கப்படும். புதிய ஓய் வூதிய திட்டத்தில் குறிப்பிட்டதொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உத்தரவாதத்துடன் சொல்ல இயலாது. மேலும், இந்த திட்டத்தில் பழைய அரசு ஊழியர் களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை (கிராஜுவிட்டி), குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்களும் கிடையாது.தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத் திருக்கிறது.

இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர் களுக்கும் பணிக்கொடை வழங்க மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி ஓர் உத்தரவை பிறப்பித்துள் ளது. அதில், 1.1.2004-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையைப் பெற தகுதியுடையவர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், நிதித்துறை செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் நல அமைச்ச கத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூ தியதாரர் நலத்துறை இயக்குநர் கடந்த 26-ம் தேதி தகவல் அனுப்பி யுள்ளார்.பணிக்கொடை என்பது ஓர் ஊழியரின் பணிக்காலத்துக்கு ஒவ்வோர் ஆண்டுக்கும் அரை மாத சம்பளம் என்ற வீதத்தில் கணக் கிடப்படும். அதாவது, ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந் தால் தோராயமாக அவரின் 10 மாத சம்பளம் பணிக்கொடையாக கிடைக்கும். தற்போது பணிக் கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது.

அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிர மணியன்: ஏற்கெனவே மறுக்கப்பட்ட உரிமையை அரசு மீண்டும் வழங்கி யுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கும் முடிவை மேலோட்ட மாக பார்த்தால் வரவேற்கத்தக்கதாக தோன்றும். ஊழியர்களின் போராட் டத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே இதை பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரைமன்ட்: புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக் கும் பணிக்கொடை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். தமிழக அரசும் மத்திய அரசை பின்பற்றி இதுதொடர்பாக உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டிய வேகத்தைபணிக்கொடை வழங்கும் உத்தரவிலும் காட்ட வேண்டும்.

Minority Scholarship ஐ- online-ல் விண்ணப்பிக்க இணைப்புகளை SCAN செய்து Upload செய்வதிலிருந்து விலக்கு

Minority Scholarship ஐ- online-ல் விண்ணப்பிக்க இணைப்புகளை SCAN செய்து Upload செய்வதிலிருந்து விலக்கு 

Sunday, 28 August 2016

EMIS செய்தி:- அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 31-8-16 வரையில் மட்டுமே EMIS இணையதளம் OPEN ல் இருக்கும்.*

EMIS செய்தி:- அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 31-8-16 வரையில் மட்டுமே EMIS இணையதளம் OPEN ல் இருக்கும்.*

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் *(2016-17) முதல் வகுப்பில்* பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் *EMIS* இணையதளத்தில் பதிவு செய்து EMIS ABSTRACT FIRST PAGE XEROX எடுத்து வைத்துக் கொள்ளவும் *31-8-16 வரையில் மட்டுமே EMIS இணையதளம் OPEN ல் இருக்கும்.*


*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*

👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்...._*
👉 *_2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்..._*
👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று தற்போது 2016-17  கல்வியாண்டில் வேறு பள்ளியில் படிப்பவர்களின்  தரவுகளை Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட வேண்டும்._*
👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் தற்போது COMMON STUDENT POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்..._*
👉 *_புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை சரி செய்யவும்...._*
👉 *_தங்கள் பள்ளியில் தற்போது உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ அதை சரிசெய்து UPDATE செய்யவும்_*

அன்புடன்
*ALL TRS TN.. Siva*

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் தற்போதைய நிலை* :

*பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் தற்போதைய நிலை* :

🔷 பாடவாரியாக பணி நிரவல் பட்டியல் *பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியை* அடிப்படையாக கொண்டு தயாரிக்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.

🔷 பாடவாரியாக மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை பணியிடங்கள் கணக்கெடுக்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.

🔷 காலி பணியிடம் மற்றும் கூடுதல் தேவை பணியிடம் (Need post)  எண்ணிக்கைக்குட்பட்டு மாவட்டத்திற்குள் மட்டும் பணி நிரவல் செய்ய *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.

🔷 பணி நிரவல் செய்ய இயலாத மீதமுள்ள பணியிடங்கள் அப்பள்ளியிலேயே  *தக்க வைக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.

🔷 பணி நிரவல் பட்டியலில் மூதுரிமையில் (பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படை) இளையோரையே (Junior most) பணி நிரவல் செய்ய *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.

🔷 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலில் *ஆசிரியர் நலன் காக்க தற்போது (இரவு 10.30 மணி) வரை மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

🔷 அனைத்து மாவட்டங்களின் பணி நிரவல் பட்டியல் *பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நேரடி ஆய்விற்கு பிறகே இறுதி செய்யப்பட்டுள்ளது*.

🔷 ஆகவே எந்த ஆசிரியரும் இடை தரகர்கள் மூலமாகவோ வேறு சில அனுகூலங்களின் மூலமாகவோ *பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்*என உறுதியாக *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* தெரிவிக்கிறது.

🔷 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் *ஏதேனும் முறைகேடுகள்* நிகழ்ந்தால் அதனை உடனே மாநில *தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*.

🔷 சுமார் 3500 பணி நிரவல் பணியிடங்களை மறு ஆய்வு செய்து 1500 பணியிடங்களாக குறைக்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.

👑 *கு.தியாகராஜன்*,மாநில தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

ALL TRS TN.. Siva.

பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை

பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது. 
இதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி தலைமை வகித்தார்.இதில், காலிப் பணியிடங்களான தமிழாசிரியர் 9, ஆங்கில ஆசிரியர் 7, சமூக அறிவியல் ஆசிரியர் 5-க்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் 30 பேர் கலந்துகொண்டனர்.அப்போது, காலியிடங்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனக் கூறி, பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தியை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் கூறுகையில், பணிநிரவல் என்ற பெயரில் தமிழாசிரியர்கள் இடம் மாற்றப்படுகிறார்கள். பணிநிரவல் முறையில் ஒருமுறை அடுத்த பள்ளிக்குச் சென்றுவிட்டால், அவர் இளநிலையாளராகவே கருதப்படுகிறார். இதனால், அடுத்தடுத்த பணிநிரவல் கலந்தாய்வுகளிலும் அவரே இடமாற்றம் செய்யப்படுகிறார்.சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்றார்..

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -


:பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் செப்டம்பர் 3அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்....

முக்கிய அறிவிப்பு:பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் செப்டம்பர் 3அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்....

 பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் புதிய பணியிடத்தில் சேராமல் செப்டம்பர் 3அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?
கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.


தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப்அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை.

 எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்:

Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.

இருந்தாலும் ஃபேஸ்புக்கின் இந்த நிலை பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்

ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்
அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர். தமிழக அரசின் பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். 


இவர்களை, பணி நிரவல் என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.


l பள்ளியில், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.


l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.


கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர் மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும், அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்?

வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்?


கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy-ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது.இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?





1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே! எனவே வாட்ஸ் அப் குறித்த முடிவுகளையும், அதன் parent company-யான பேஸ்புக்தான் எடுக்கும். குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, பேஸ்புக்கில் இனி உங்களுக்கு மிகவும் தொடர்புள்ள, நீங்கள் விருப்பம் காட்டும் வணிக  விளம்பரங்கள் வரவிருக்கின்றன. அவற்றை சந்திக்கத் தயாராக இருங்கள்!

2.நீங்கள் தாரளாமாக இந்த மொபைல் எண் பரிமாற்றத்தை தடுக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, வாட்ஸ்அப்பை அன்-இன்ஸ்டால் செய்வது மட்டுமே! ஆம். இந்த புதிய நிபந்தனைக்கு நீங்கள் அனுமதி தரவில்லையெனில், இன்னும் 28 நாட்களுக்குப் பிறகு நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

3.உங்களது மொபைல் எண்ணை பேஸ்புக்கிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப் போவதாக வாட்ஸ்அப் மூலம், பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் எண், விளம்பர நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படாது எனக் கூறியுள்ளது.

4.பேஸ்புக்கின், தரத்தை மேம்படுத்தி உங்களுக்குத் தேவையான விளம்பரங்களை காட்டுவது,  சரியான Friend suggestions கொடுப்பது போன்றவற்றிற்காக மட்டுமே, இந்த ‘ஷேரிங்’ என்கிறது வாட்ஸ்அப். அத்துடன் போலியான விளம்பரங்கள் நிச்சயம் வராது என உறுதியளித்துள்ளது.



 

5.அப்போ, இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் வருமா என சந்தேகம் வரலாம். ஆனால் “இந்த முடிவு பேஸ்புக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. வழக்கம் போலவே வாட்ஸ் அப்பில் விளம்பரங்கள் காட்டப்படாது” என்கிறது அந்நிறுவனம்.



6.நமது பல பெர்சனல் தகவல்கள் வாட்ஸ்அப்பில்தான் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் வாட்ஸ்அப் பகிர்ந்து கொள்ளாதாம். உங்களது வாட்ஸ்அப் மொபைல் எண், உங்கள் மொபைலின் OS விவரம் மற்றும் கடைசியாக வாட்ஸ்அப் பயன்படுத்திய விவரம் ஆகியவை மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சொந்த விஷயங்கள் வழக்கம் போலவே யாராலும் பார்க்க முடியாத படி encrypt செய்யப்பட்டிருக்கும்.

7.வாட்ஸ் அப்பில் இருக்கும் நீங்கள், பேஸ்புக்கில் இல்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களை பேஸ்புக் இன்ஸ்டால் செய்யசொல்லி, வாட்ஸ்அப் கட்டாயப்படுத்தாது. ஆனால் ஒரே மொபைல் எண் கொடுத்து, இரண்டையும் ஒரே போனில் பயன்படுத்தி வந்தால், இரண்டும் தானாக இணைக்கப்பட்டு விடும்.

8.வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.

 

 

9.இதை ஓரளவு தடுக்க, வாட்ஸ் அப்பிற்கென ஒரு மொபைல் நம்பரையும், ஃபேஸ்புக்கிற்கென மற்றொரு மொபைல் நம்பரையும் தர வேண்டும். இப்படி செய்யும் போது, அந்த மொபைல் நம்பரின் மூலம் எடுக்கப்படும்  விவரங்கள், ஃபேஸ்புக்கிற்கு பயன்படாது. 

சரி..நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? முதலில் உங்களுக்கு கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போன்ற செய்தி உங்கள் வாட்ஸ்அப்பில் காட்டப்படும். நீங்கள் உடனே ‘Agree’ கொடுத்துவிட்டால், உங்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஏற்கனவே நீங்கள் ‘Agree’ கொடுத்திருந்தால் பிரச்னை இல்லை. மீண்டும் உங்கள் வாட்ஸ் அப்பை திறந்து, ‘settings’-ல் இருக்கும், ‘Account’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் காட்டப்படும் ‘Share my account info’ என்னும் ஆப்ஷனின் அருகில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்து விடுங்கள். இப்போதைக்கு உங்கள் அக்கவுன்ட் தகவல் பேஸ்புக்கிடம் பகிரப்படாமல் இருக்கும். இல்லை இந்த மொபைல் எண் பரிமாற்றம் உங்களுக்கு, வேண்டாம் என்றால் தற்போது விட்டுவிடுங்கள்.



ஆனால் இன்னும் 28  நாட்களுக்குள் இதே அறிவிப்பு மீண்டும் உங்களுக்கு காட்டப்பட்டு, வாட்ஸ் அப் உங்களிடம் அனுமதி கேட்கும். அப்போதும் நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லையெனில்... மேலே இருக்கும் 2-வது பாய்ன்ட்டை படிக்கவும்!அவ்வளவுதான்! வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் உங்கள் தகவல் பறிபோகும் என நினைத்தால் மற்ற உடனடி தகவல் ஆப்ஸ்களாக ஹைக், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Saturday, 27 August 2016

CPS - தன் பங்கேற்பு ஓய்வூதியத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்கலாம் !

CPS - தன் பங்கேற்பு ஓய்வூதியத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்கலாம் !



திருப்பத்தூர் ஒன்றியத்தில்* *தொடக்க, உயர் தொடக்க பள்ளிகளுக்க ஆன ஒன்றிய அளவில் *செஸ் போட்டி* நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் வாழ்த்துவோம்.

வெற்றி பெற்றவர்களை
வெற்றி பெற வாழ்த்துகிறோம்.



 *திருப்பத்தூர் ஒன்றியத்தில்* 24/8/16அன்று *தொடக்க, உயர் தொடக்க பள்ளிகளுக்க ஆன *சி.ஆர்.சி* அளவில் *செஸ் போட்டி* நடைபெற்று  வெற்றி பெற்ற மாணவர்கள் 27/8/16 ல் *ஒன்றிய அளவில்* போட்டி அறிஞர் அண்ணா நகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்றது.  இப்போட்டியினை ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.தென்னவன், அவர்கள் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் நடுநிலையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உடன் இருந்து சிறப்பான முறையில் நடைபெற்றது. 12 ச.ஆர்.சி..யில் இருந்து தொடக்க,உயர்தொடக்க  118 பள்ளியில் இருந்து வெற்றி பெற்று 88 மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் இறுதியில் *ஒன்றிய அளவில் 8 மாணவர்கள்(ஆண் 2,பெண் 2)* தொடக்க மற்றும் உயர் தொடக்க வீதம் பள்ளிகளில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

*உயர் தொடக்க அளவில்*(6std to 8std)
1.எஸ்.தணிகாசலம்,(8std)..பழைய அத்திகுப்பம் நடுநிலை பள்ளி,
2.எஸ்.விக்ரம்(8std)...ஓமகுப்பம் நடுநிலை பள்ளி.

1.எஸ்.கீர்த்தீகா(8std)..பசிலிகுட்டை நடுநிலை பள்ளி.
2.டி.ஜோதிலட்சுமி(7std) ...டி.கிருஷ்ணாபுரம் நடுநிலை பள்ளி.

*தொடக்க அளவில்* (1std to 5std)
1.ஜே.சாவியோ(5 std) ..தோமினிக் சாவியோ தொடக்க பள்ளி
2.எஸ்.பூபதி(5 std)...பசிலிகுட்டை தொடக்க பள்ளி

1.எஸ்.பத்மபிரியா.(5 std) வடுகம்முத்தம்பட்டி தொடக்க பள்ளி
2.எ.சந்தியா(5 std)...RCM கோவிலூர் தொடக்க பள்ளி.

மேற்க்கண்ட *8 மாணவர்கள் ஒன்றிய அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவில்* கலந்துகொள்ள இருக்கிறார்கள். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பரிசு வழங்கி கௌரவித்தார்.

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...

 *அனைவரையும் வாழ்த்துகிறோம்.* மேலும் மாவட்ட அளவில் 
*வெற்றி பெற*  வாழ்த்தும்

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*  மற்றும்

மாநில,மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாகவும்,
அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும் *வெற்றி பெற* மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*அன்புடன்*

*கு.தியாகராஜன்,* மாநில தலைவர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

*ஜி.டி.பாபு,* மாவட்ட செயலர், வேலூர் மாவட்டம்.

*மு.சிவக்குமார், ப.ஆ*
தலைவர்,திருப்பத்தூர்.

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.* 

ALL TRS TN... Siva.

Friday, 26 August 2016

மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்_*.

DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்_*.


புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் துணைவியருக்கு சந்தா தொகை பிடிக்காமலிருக்க வழங்க வேண்டிய விண்ணப்பம் !

புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் துணைவியருக்கு சந்தா தொகை பிடிக்காமலிருக்க வழங்க வேண்டிய விண்ணப்பம் !


ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது குறித்து -.இயக்குனர் உத்தரவு.



தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / தொடக்கப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் -.இயக்குனர் உத்தரவு.  


Thursday, 25 August 2016

அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான பதிவுகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களை தொகுத்து வழங்க வேண்டும், ஆதார் பதிவு ெசய்யும் மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடக்க கல்வித்துறையில் ஆதார் விவரங்களை ஒன்றியம் வாரியாக தொடக்க கல்வித்துறை இயக்ககத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

NMMS என்.எம்.எம்.எஸ்., தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?

என்.எம்.எம்.எஸ்., தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?
'ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படும்.
ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வுக்கான பாடத்திட்டம், வினாக்களின் வகை, மாதிரி வினாக்கள் போன்றவற்றை, அரசு தேர்வுத்துறை தற்போதே அறிவித்தால், கிராமப்புற மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, 24 August 2016

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம் 

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.


அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

எப்படியாவது... : அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

3 rd incentive பெறத்தகுதியானவர்கள் யார் என்பதற்கான விளக்கம் all in pdf

3 rd incentive பெறத்தகுதியானவர்கள் யார் என்பதற்கான விளக்கம் all in pdf 

CLICK HERE TO DOWNLOAD 3RD INCENTIVE IS ELIGIBLE ..FOR TEACHING STAFF ....... 

அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015

வெற்றி பெற்றவரை வாழ்த்துகிறோம்! வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

வெற்றி பெற்றவரை வாழ்த்துகிறோம்!
வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

இன்று *திருப்பத்தூர் ஒன்றியத்தில்* 24/8/16 நடைபெறும் *தொடக்க, உயர் தொடக்க பள்ளிகளுக்க ஆன* *சி.ஆர்.சி அளவில் *செஸ் போட்டியில*் கலந்து கொண்டு வெற்றி பெற்று 27/8/16 ல் *ஒன்றிய அளவில்* விளையாட இருக்கும் அனைத்து பள்ளி *மாணவர்கள் * அனைவரையும் வாழ்த்துகிறோம். மேலும் ஒன்றிய அளவில் 
*வெற்றி பெற*  வாழ்த்தும்

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*  மற்றும்

மாநில,மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாகவும்,
அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும் *வெற்றி பெற* மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*அன்புடன்*

*கு.தியாகராஜன்,* மாநில தலைவர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

*ஜி.டி.பாபு,* மாவட்ட செயலர், வேலூர் மாவட்டம்.

*மு.சிவக்குமார், ப.ஆ*
தலைவர்,திருப்பத்தூர்.

*கிருஷ்ணன்,* செயலர்

*புண்ணியமூர்த்தி,* பொருளர் .
திருப்பத்தூர் வட்டம்.
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

வெளி மாவட்டங்களுக்கு 83 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்

வெளி மாவட்டங்களுக்கு 83 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்
திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 83 இடைநிலை ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.

தமிழக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) நிறைவடைந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடைபெற்றது.


திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இணையதளம் வாயிலான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 292 இடைநிலை ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல விரும்பி கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இவர்களில் 83 பேருக்கு மட்டுமே தாங்கள் விரும்பிய மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இதையடுத்து, 83 பேரும் இடமாறுதல் பெற்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் புதுக்கோட்டை, கடலூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் இடமாறுதல் ஆணைகளை வழங்கினார்.

22 பேர் திருவண்ணாமலை வருகை: இதேபோல, இதர மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 22 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இவர்கள் ஓரிரு நாளில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் பணியில் சேர்வார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்பாசிரியர் தங்கராஜ்!!..உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்.

அன்பாசிரியர் தங்கராஜ்!!


திரு. தங்கராஜ்- உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்.


மாணவர்களுடன் அன்பாசிரியர் தங்கராஜ் நல்ல ஆசிரியர் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறார். சிறந்த ஆசிரியரோ செல்ல வேண்டிய பாதையை நோக்கிப் பயணிக்கிறார்.

கற்றலில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஓர் ஆசிரியரை நியமித்து ஒன்பது ஆண்டுகளாக அவருக்கு தன் சொந்த செலவில் சம்பளம் கொடுத்து வருகிறார் நாமக்கல் நாமகிரிப் பேட்டை, ஊத்துப்புளிக்காடு அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் தங்கராஜ். பள்ளியின் கட்டமைப்பு வசதிகளுக்கு அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகம் தேவைப்படும்போது தன் சம்பளத்தைக் கொடுத்து, அவற்றைக் கட்டி முடித்திருக்கிறார். தன் அயராத உழைப்பால் 34 மாணவர்களாக இருந்த ஆரம்பப்பள்ளி மாணவர் எண்ணிக்கையை 214 ஆக மாற்றியிருக்கிறார்.



இந்த ஆசானின் ஆசிரியப்பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''சின்ன வயதில் நண்பர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பழக்கம் கற்பித்தலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. நாட்கள் செல்லச்செல்ல சமூகத்தில் மாற்றத்தின் விதையை ஊன்றும் எண்ணம் அதிகமானதால், ஆசிரியர் ஆனேன். ஆரம்பத்தில் ஆசிரியப்பயிற்சி முடித்து 1990-களின் தொடக்கத்தில் தனியார் பள்ளியில் 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். மாலை நேரப்பணியாக மாணவர்களுக்கு அதே 150 ரூபாயில் ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய 12 மணி நேர உழைப்புக்கு ஊதியமாக ரூ. 300 சம்பளம் வாங்கினேன்.

சில வருடங்கள் ஓடின. நான்காயிரம் ரூபாயில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அப்படியென்றால் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று தோன்றியது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சிறப்பு வழிமுறைகள் எதையும் வகுத்து வேலை பார்ப்பதில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி, ஒழுக்கத்தை வளர்க்க எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் சொல்லிக்கொடுக்க முடியும்.

1999-ல் ஊத்துப்புளிக்காட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதைய தலைமை ஆசிரியர் முழு சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தார். காலையில் 8.15 மணிக்கு பள்ளிக்குச் செல்வேன். 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.45 முதல் 9.15 மணி வரை தினமும் ஆங்கிலம் சொல்லித்தருகிறேன். வினைச்சொல் புத்தகம் (Verb book) மூலம் அடிப்படை இலக்கணத்தைக் கற்பிக்கிறோம். ஒவ்வொரு வருடமும் இப்பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுவதால் ஐந்தாம் வகுப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர், 3 வருட அனுபவத்தோடு செல்கிறார்.  
தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பள்ளியில் அளிக்கப்படும் சீருடைகள் பெற்றோர்கள் மூலம் சீரிய முறையில் தைக்கப்படுகின்றன. மாணவர்கள் டைரி, பெல்ட், ஐடி கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தினமும் குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அதைச்சொல்லிக்கொடுத்து டைரியில் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் குழந்தைகளை சத்தம் போட்டுப் படிக்கச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.



கையெழுத்தை மேம்படுத்த தினமும் வீட்டுப்பாடம் கொடுக்கிறோம். தமிழ்ப் பயிற்சிக்கு ஒரு நோட்டில் பொன்மொழிகளை இரண்டு வரிகளிலும், ஒற்றை வரியிலும், வரியே இல்லாமலும் 3 முறை எழுத வேண்டும். ஆங்கிலப் பயிற்சிக்கு நான்கு வரிகளிலும், ஒரு வரியிலும், வரியில்லாமலும் எழுதவேண்டும். தினசரிப் பயிற்சி என்பதால் சலிப்பு தட்டாமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சிறந்த கையெழுத்துக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் தருகிறோம்.

ஆங்கில நாடகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறோம். பள்ளியைச் சுற்றிலும் 40 மரங்கள், 250 செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய நிதியால் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு நீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 2007-ல் பள்ளியில் +2 முடித்தவரை ஆசிரியராக அமர்த்தினோம். அப்போது அவரின் சம்பளம் ரூ. 400. இதோ இப்போது ஒன்பதாவது ஆண்டில் அவர் நான்காயிரம் சம்பளம் பெறுகிறார். இப்போது வரை அவருக்கு என் சொந்தப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கிறேன். இப்போது ஐந்து வகுப்புகளுக்கும் ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். ஆறாவதாக அவர் மற்ற ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும், மற்ற நாட்களில் கற்றலில் பின் தங்கியவர்களுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.

2003-ல் சத்துணவு மேற்பார்வையாளர் எங்களின் பள்ளிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். பள்ளியைக் கண்டு வியந்தவர், உங்கள் பள்ளிக்கு விருதுகள் எதுவும் கொடுக்கவில்லையா என்று கேட்டார். அந்த வார்த்தைகள்தான் முதன்முதலில் என்னை ஊக்கமடைய வைத்தன. ஒருமுறை மாவட்ட திட்ட அலுவலக கண்காணிப்பாளர், எங்களின் பள்ளிக்கு வருகை தந்தார். செய்தித்தாள் வாசிப்பு, பொம்மலாட்டம், கதை, கவிதை சொல்வதில் மாணவர்களின் திறனைப் பார்த்த அதிகாரி இந்தப்பள்ளிக்கு நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் என்று கூறிச்சென்றார். சொன்னபடியே பள்ளிக்கு சில மாதங்களிலேயே மூன்று கணினிகள் வழங்கப்பட்டன. (நடுநிலைப்பள்ளிக்கு மட்டுமே கணினி வழங்கப்பட்ட காலம் அது)

ஒருமுறை காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. அத்தோடு என் சம்பளப் பணத்தில் இருந்து 15 ஆயிரம் எடுத்து 40 ஆயிரத்துக்கு இரண்டு வகுப்புகளும், ஒரு கிடங்கையும் கட்டிமுடித்தோம். தண்ணீர்த்தொட்டி அமைக்க ரூ.28 ஆயிரம் வழங்கப்பட்டது. 10 அடி ஆழம், 7 அடி அகலத்தோடு உயர்தர டைல்ஸ் கொண்டு தொட்டி அமைத்தோம். கட்டி முடிக்க ரூ.50 ஆயிரம் செலவானது. குடிநீர் உயிர்நாடி என்பதால் மீதிப்பணத்தை நானே கொடுத்துவிட்டேன்.

பள்ளியில் அடிக்கடி விழாக்கள் நடைபெறுவதால் அவை சிரமமின்றி நடக்க கலையரங்கம் தேவை. ஆனால் தொடக்கப்பள்ளிக்கு அதைக் கேட்பது முறையாகாது எனத் தோன்றியது. அதனால் 20 அடி அகலம், 26 அடி நீளத்தில் தற்காலிக மேடை ஒன்றை என்னுடைய செலவிலேயே (12 ஆயிரம்) அமைத்திருக்கிறேன். விழாவுக்கு வந்த அதிகாரிகள் அதைப் பார்த்துவிட்டு கலையரங்கம் கட்டுவதற்காக 5 லட்சம் ஒதுக்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்துவிட்டார்கள்'' என்று மகிழ்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.  

பொதுமக்களிடம் நன்கொடைகள் வாங்கி அவற்றைப் பயன்படுத்தலாமே என்று கேட்டால், '' ஊத்துப்புளிக்காடு 349 பேரை மட்டுமே கொண்ட சின்ன கிராமம். இங்குள்ள விவசாய மக்கள் உணவுக்கே சிரமப்படுகிறார்கள். அவர்களிடம் பணம் கேட்கவே கூசுகிறது. பணமாகக் கொடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் தங்களின் உடல் உழைப்பை அளிக்கின்றனர்.

கட்டிட வேலைகளின்போது ட்ராக்டர் மூலம் மண் கொண்டுவந்து கொட்டிவிட்டுக் காசே வாங்காமல் சென்றார் ஒருவர். எங்கள் பள்ளிக்கான மின்சாரம்கூட பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது. அதற்கான தொகையை அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதனாலேயே நாங்களும் மின்சாரத்தைச் சிக்கனமாகவே பயன்படுத்துகிறோம்.



34 மாணவர்கள் இருந்த அதே ஆரம்பப்பள்ளியில் இன்று 214 பேர் படிக்கின்றனர். எங்கள் ஒன்றியத்தில் உள்ள 17 நடுநிலைப் பள்ளிகளில் இரண்டில் மட்டுமே எங்கள் மாணவர்களை விட அதிகம்பேர் படிக்கின்றனர். பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்தாகிவிட்டது. கல்வியும் தரமாகக் கற்பிக்கப்படுகிறது. குறைவான விலையில் அல்லது பயன்படுத்திய நிலையில் இருக்கும் கணினிகள் கிடைத்தால் அவற்றைக் கொண்டு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க முடியும். அவற்றை வாங்கும் முயற்சியில்தான் இருக்கிறேன். ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். பள்ளிச்சூழலும் மாறும்; மாணவர்களும் மாறுவார்கள்'' என்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.

TET தேர்வு நடக்காத பின்னணி என்ன? மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்!

TET தேர்வு நடக்காத பின்னணி என்ன? மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்! 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது.

2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்திவிரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்:

23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.

சிக்கலுக்கு தீர்வு என்ன:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணைபிறப்பிக்க வேண்டும், என்றார்

பிளஸ் 2 துணைத்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

பிளஸ் 2 துணைத்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் 

சென்னை: பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள,
அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Tuesday, 23 August 2016

நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: முதல்வருக்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு



நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: முதல்வருக்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு

மாநில நல்லாசிரியர்களை கௌரவிப்பது குறித்து சில கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு சங்கம் சார்பில் கொண்டு சென்றதன் பேரில் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், அரசுப் பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஆ.காமராஜ் நன்றியும், பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:



அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சங்கம் சார்பில் நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்களை கௌரவிப்பது குறித்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அம் மனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஆசிரியர்கள் தினத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆசிரியர்களிடம் மேலோங்கியுள்ளது.தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்று பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வு பெறும் வயதை இரு ஆண்டுகள் கூடுதலாக்க வேண்டும்.

மேலும் அவர்களின் பணி நிலைக்கு ஏற்ப ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும். (இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி).  ஒரு ஊக்க ஊதியம் (இரு ஊதிய உயர்வு) வழங்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் குடும்பத்துடன் பணிக்க பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

இந்த ஆசிரியர்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு தமிழகத்தில் சுங்கச் சாவடிக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இதுபோன்ற அங்கீகாரங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்து தந்து நல்லாசிரியர் விருது பெற்றவர்களை மேலும் வாழ்நாள் முழுவதும் கௌரவிக்கும் வகையில் செய்ய வேண்டும்.

இதுபோன்ற அங்கீகாரத்தை நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு அளிப்பதால், அரசிற்கு மிக அதிகமான நிதிச் சுமை ஏதும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் குறைந்த அளவிலே இதுபோன்ற ஆசிரியர்கள் உள்ளார்கள் என்றும் அவர் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில் தற்போது தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் நல்லாசிரியர்களுக்கான பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம் என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.10 ஆயிரம் என அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

மேலும் ஆசிரியர் தினத்தன்று குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு



பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி போட முடிவு செய்துவிட்டது தமிழக அரசு. அதற்கான அறிவிப்பையும் இன்று 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார் முதல்வர்.









தமிழகத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்து போகாத பல கிராமங்களில் கூட அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தோடு அரசு துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசியர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.



அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலர் நகர்ப்புற பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். பெரும்பாலான துவக்கப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலையில், நகர் பகுதியில் இருந்து ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குச் சென்று வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பல கிராமங்களில் இருக்கும் தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக தான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்கு வரும் அவல நிலைகள் தமிழக கிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.



அதே போல் இரண்டு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தால், இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவது என்பது பல அரசு ஆசிரியர்களிடம் வழக்கொழிந்த விஷயமாக மாறிவிட்டது. ஏற்கனவே அரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும், அவநம்பிக்கையை இது மேலும் அதிகரிப்பதாக உள்ளது. தென் மாவட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் பள்ளி ஒன்றிற்கு பாடவேளை துவங்குவதே காலை பன்னிரெண்டு மணிக்குதான். காரணம் அந்த பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அருகில் இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறார்கள். அந்த கிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே உள்ளன.



அதில் ஒரு பேருந்து அவர்கள் வசிக்கும் நகரில் எட்டு மணிக்கு புறப்பட்டு ஒன்பது மணிக்கு அந்த கிராமத்திற்கு வந்தடையும். அதை தவிர்த்து விட்டு பத்து மணி பேருந்தில் தான், இவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். இதனால் இந்த பள்ளியின் வேலை நேரம் பதினோரு மணிக்கு  மேல் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் தங்களது வருகை பதிவேட்டில் இவர்கள் ஒன்பது மணிக்கு வந்துவிட்டதாக கையெழுத்திடுகின்றார்கள். இதே நிலைதான் தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையாக உள்ளது. பல கிராமங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிரத்துவிட்டு, அந்த கிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம் கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.



அரசுப் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் குறைந்து இருப்பதும், மாணவர்கள் குறைவாக இருப்பதும் இதுபோன்ற காலம்தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வு காண அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இன்று முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறை குறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்கு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும் முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில் வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.



பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும் போது, குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளி முடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும் நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியை விட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டி வருகைப்பதிவேட்டில்  பதிவு செய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்பு இருப்பதால், கால தாமதத்தை இனி தொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.



கிராமத்து தொடக்கப் பள்ளிகளிலும், இனி ஒன்பது மணிக்கே ஆசிரியர்கள், ஆஜர் ஆகிவிடுவார்கள்  என எதிர்பார்க்கலாம்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு எந்த அரசாணைப்படி அனுமதிக்கப்படுகிறது - 3 வது ஊக்க ஊதியம் யார் யார் பெறலாம் - இயக்குனர் தெளிவுரை

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு எந்த அரசாணைப்படி அனுமதிக்கப்படுகிறது - 3 வது ஊக்க ஊதியம் யார் யார் பெறலாம் - இயக்குனர் தெளிவுரை.





Sunday, 21 August 2016

சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்

சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்
சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றார் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் அறிவொளி.

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சியில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியது: அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.


இதற்கு ஆசிரியர்களின் பங்கு அதிகமாகும். 100% தேர்ச்சி அடைவதில் நாம் அதிக அக்கறை எடுத்து கொள்வதுபோல், தலைமை ஆசிரியராக நீங்கள் உங்கள் பள்ளியில் சக ஆசிரியர்களோடு கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வகுப்பறையில் நீங்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்.சமுதாயத்தில் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டால்தான், ஒரு பள்ளி சிறந்த பள்ளியென பெயர் எடுக்க முடியும் என்றார் அவர்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந. மாரிமுத்து தலைமை வகித்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி துணை இயக்குநர் குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஜம்புலிங்கம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கமணி, செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

.ஒரே மாதிரி இருக்கும் விலையில்லா காலணிகள் மாணவர்களிடையே மாறும் குழப்பத்தை தடுக்க 5 ம் வகுப்பு மாணவர்கள் கண்டுபிடித்த வழி - வீடியோ

ஒரே மாதிரி இருக்கும் விலையில்லா காலணிகள் மாணவர்களிடையே மாறும் குழப்பத்தை தடுக்க 5 ம் வகுப்பு மாணவர்கள் கண்டுபிடித்த வழி - வீடியோ 

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி  

ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிருஷ்ணகிரி, தரும்புரி,திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதல்கள் பெற்றவர்கள் பதிலி ஆசிரியர் வரும்வரை விடுவிக்கப்பட மாட்டார்கள் ???

கிருஷ்ணகிரி, தரும்புரி,திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதல்கள் பெற்றவர்கள் பதிலி ஆசிரியர் வரும்வரை விடுவிக்கப்பட மாட்டார்கள் ???


பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் !



பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் !



பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் மாநிலம் முவதும் காத்திருக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர், தையல்,

உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2012 ல், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

சிறப்பு ஆசிரியர்கள் என பெயரிடப்பட்ட, தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.வாரத்தின் மூன்று அரை நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்த இவர்கள், மூன்று முழுநாள் வேலை பார்க்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சம்பளம், 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.சிறப்பு ஆசிரியர்கள் கூறுகையில், "பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளும், சிறப்பு ஆசிரியர்கள் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்க வேண்டும்என நிர்ப்பந்திக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி புத்தகம், சீருடை வழங்குவது அவற்றின் கணக்கெடுப்பு பணிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு உடனடியாக இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் வாரத்தின் மூன்று அரைநாட்கள் மட்டுமே பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமின்றி, பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்,' என்றனர்.

SMS., மூலம் வருமான வரி விபரம் !*SMS., மூலம் வருமான வரி விபரம்*

SMS., மூலம் வருமான வரி விபரம் !*SMS., மூலம் வருமான வரி விபரம்*
வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரி தொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வரி செலுத்துவோர் மற்றும் வருமான
வரித்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு விடும் என மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை, வருமான வரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையா என தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகை செலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம் உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை

மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை  

மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் துணைத் தலைவர் பொன்.வீரசிவாஜி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் க.செல்வராஜூ, மாவட்டச் செயலர் ரா.செல்வக்குமார் பேசினர். 

 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தவுடன் ஏற்படும் காலி இடங்களில் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். 
 ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் ஒருவர் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார். 
 இச் செயல் இத்தகைய பள்ளிகளை மூடும் முயற்சியாகும். இதனால் ஒரு பள்ளிக்கு கட்டாயம் 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.
 பள்ளிக் குழந்தையின் பெற்றோர் விபத்தினால் இறந்தால் தமிழக அரசு ரூ.75,000 உதவித்தொகை வழங்குகிறது. விபத்து மட்டுமல்லாது, வேறு காரணத்தினால் வருவாய் ஈட்டும் பெற்றோர் இறந்தாலும் அத்தகைய குழந்தைக்கும் உதவித்தொகை கிடைத்திட அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் ஏற்படும் காலி இடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 
 வாக்காளர் சேர்க்கை, நீக்கல் பணி தொடர் பணியாக உள்ளதால், ஆசிரியர்களின் கல்விப் பணி பாதிப்படைகிறது. இதனால் இப் பணிக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஆசிரியரின் பெற்றோர் பலன் பெறும் வகையில் நடைமுறை இல்லை. இதனை மாற்றி பெற்றோருக்கும் பலன் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - வருங்காலத்தில் பாதுகாப்பு கிடைக்குமா?

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - வருங்காலத்தில் பாதுகாப்பு கிடைக்குமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

 திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

நன்றி : தினமணி
Labels: Article

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை  

பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்,
மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். 'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அதனால், 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரசின், 14 வகை நலத் திட்டங்களுக்கு ஆசிரியரை பயன்படுத்தாமல், தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை :-

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு:  பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை :- 


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்  கலந்தாய்வு 20/8/16 அன்று நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டுமே இடமாறுதலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழகம் முழுதும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்  முன்னிலையில் ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.

ஆனால், தாங்கள் விரும்பிய எந்த மாவட்டத்திலும் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில்  கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டும் இடமாறுதல் காட்டப்பட்டது. Zone.. ,2,3,4 ல் கணிதத்தில் காலி பணியிடங்கள் இல்லை எனவும்,zone.. 1 ல் மட்டும் ஒரே பணிடம் காட்டப்பட்டத்து. 

இது மூன்றாண்டுகள் தொடர்ந்து இதே போன்ற நிலை உள்ளது. 
கல்வி அதிகாரிகளால் இடங்கள் மறைக்கப்பட்டு வருகிறதா? 
அல்லது விலைபோக நிறுத்தி வைக்கப்பட்டதா? என  சந்தேகம் எழுகிறது.
வேறுமாவட்டத்தில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மகன்,மகள், கணவன் பெற்றோர்கள் இவர்கள் விடுத்து இங்கே படும் வேதனைகளுக்கு  இந்த அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது. சங்கங்கள் முனைப்போடு செயல்பட்டு இதற்கான ஒரு தீர்வை விரைவில் நடவடிக்கைகள். மேற்கொண்டு நல்ல முயற்சி எடுக்க வேண்டும்.

அரசாங்கம் கலந்தாய்வு ஆணையை சென்ற ஆண்டில் நடத்திய முறையை  மாற்றி அமைத்து கலந்தாய்வு நடத்த முடியும் எனில் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஒரு சலுகையை ஏன்உருவாக்க கூடாது.

கலந்தாய்வில்  முதலில் ஒன்றியத்திற்குள், பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம்  பணிநிரவல், பதவி உயர்வு நடைபெறுகிறது. கடைசியாக மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது.
ஒன்றியத்திற்குள் , பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம்  பதவி உயர்வு நடைபெற்றுவிடுவதால் மாவட்டத்தில் பணி இடங்கள் வாய்ப்பு குறைவு. மாவட்டத்தில் கடைசியாக மாறுதலும்,பதவி உயர்வு நடைபெறுகிறது.
மாறுதல் தனியாகவும், பதவி உயர்வு தனியாக நடத்த வேண்டும். இல்லையேல் முதலில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு  அப்போதுதான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை அரசாங்கம் நடைமுறை செய்யுமா? 

மாணவர்கள் நலன் கருதி கலந்தாய்வு விதிகளை மாற்றும்போது, தனிதனியாக நடத்த இது சாத்தியம் ஏன் இல்லை. அப்போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 
இந்த கருத்தை அரசாங்கம் மற்றும் சங்கங்கள் செவி சாய்க்குமா? 

அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேலை செய்யும்போது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ஏன் அடுத்த ஒன்றியத்திலும் வேறு மாவட்டத்தில் வேலை செய்ய கூடாது.

அரசு அலுவலர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி புரிந்தால் மாறுதல் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும். 

இல்லையேல் வேறு மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்தது மூன்று ஆண்டுகள் மாறுதல் கிடக்காத வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் தரவேண்டும்.  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி புரியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 

இதை ஏற்க்குமா? இந்த அரசாங்கம். இவர்களுக்கு குரல் தருவீர்களா? சங்க வாதிகள். 
இவர்களுக்கு இந்த சங்கங்கள் எந்த வகையில் உதவப்போகிறது.

நகரம் ஒட்டி வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து தனி ஊதியம் வழங்க வேண்டும்.

அரசாங்கம் முதலில் பணியில் அமர்த்தும்போது விருப்பத்தின் பேரில் பணி சில சமயங்களில் வழங்குகிறார்கள், சில சமயம் அவர்களாகவே பணி அணை  தேர்வு(ரேன்டம்) செய்து பணி வழங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? இனி வரும் காலங்களில் ஒரே மாதிரியான முறை கடைப்பிடித்து பணி வழங்கவேண்டும். 

ஆசிரியர்கள் நலனுக்காக சங்கம் என்றால் சங்கங்கள், இந்த வகையான ஆசிரியர்களுக்கு சங்கம் ஏதாவது செய்யாதா?  
அரசாங்கத்திடம்  ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தாதா? 
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் பணிஇடங்கள் இல்லை என்று கூறியே கடமைக்கு  கலந்தாய்வு  நடைபெறுகிறது. சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளது.

ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெறும் போதும்,பதவி உயர்வு நடைபெறும்போதும் அனைத்து சங்கங்களும்,AEEO க்கள் அனைவரும் இருந்து தவறு நடைபெறாமல் கலந்தாய்வு நடத்துகின்றனர்.ஆனால் மாவட்டம் கலந்தாய்வில் யாரும்  இருப்பதில்லை ஏன்?
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து தங்கள் ஒன்றியத்தில் பணி புரியும் இவர்கள்  ஆசிரியர்கள் அல்லவா?  இவர்களுக்கு யார் உதவி செய்வது சங்க பொறுப்பாளர்களே சிந்தியுங்கள். இதனால் இடங்கள் மறைக்கப்படுகிறது. 

எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற அவல நிலையை ஏற்படாத வண்ணம் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.சங்கங்கள் இதற்கான ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அரசிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேசியோ ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேதனையுடன் ஆசிரியர்கள் இவர்களின் புலம்பல் அரசாங்கம் செவி சாய்க்கமா?
ஏதாவது வழி செய்ய சங்கங்கள் முயற்சி செய்யுமா?

அன்புடன்
வேதனையுடன் ஆசிரியர்கள்.