Powered By Blogger

Friday, 19 August 2016

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:

பெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது. அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

ALL TRS TN... Siva

No comments:

Post a Comment