Powered By Blogger

Sunday, 21 August 2016

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை :-

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு:  பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை :- 


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்  கலந்தாய்வு 20/8/16 அன்று நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டுமே இடமாறுதலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழகம் முழுதும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்  முன்னிலையில் ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.

ஆனால், தாங்கள் விரும்பிய எந்த மாவட்டத்திலும் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில்  கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டும் இடமாறுதல் காட்டப்பட்டது. Zone.. ,2,3,4 ல் கணிதத்தில் காலி பணியிடங்கள் இல்லை எனவும்,zone.. 1 ல் மட்டும் ஒரே பணிடம் காட்டப்பட்டத்து. 

இது மூன்றாண்டுகள் தொடர்ந்து இதே போன்ற நிலை உள்ளது. 
கல்வி அதிகாரிகளால் இடங்கள் மறைக்கப்பட்டு வருகிறதா? 
அல்லது விலைபோக நிறுத்தி வைக்கப்பட்டதா? என  சந்தேகம் எழுகிறது.
வேறுமாவட்டத்தில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மகன்,மகள், கணவன் பெற்றோர்கள் இவர்கள் விடுத்து இங்கே படும் வேதனைகளுக்கு  இந்த அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது. சங்கங்கள் முனைப்போடு செயல்பட்டு இதற்கான ஒரு தீர்வை விரைவில் நடவடிக்கைகள். மேற்கொண்டு நல்ல முயற்சி எடுக்க வேண்டும்.

அரசாங்கம் கலந்தாய்வு ஆணையை சென்ற ஆண்டில் நடத்திய முறையை  மாற்றி அமைத்து கலந்தாய்வு நடத்த முடியும் எனில் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஒரு சலுகையை ஏன்உருவாக்க கூடாது.

கலந்தாய்வில்  முதலில் ஒன்றியத்திற்குள், பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம்  பணிநிரவல், பதவி உயர்வு நடைபெறுகிறது. கடைசியாக மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது.
ஒன்றியத்திற்குள் , பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம்  பதவி உயர்வு நடைபெற்றுவிடுவதால் மாவட்டத்தில் பணி இடங்கள் வாய்ப்பு குறைவு. மாவட்டத்தில் கடைசியாக மாறுதலும்,பதவி உயர்வு நடைபெறுகிறது.
மாறுதல் தனியாகவும், பதவி உயர்வு தனியாக நடத்த வேண்டும். இல்லையேல் முதலில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு  அப்போதுதான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை அரசாங்கம் நடைமுறை செய்யுமா? 

மாணவர்கள் நலன் கருதி கலந்தாய்வு விதிகளை மாற்றும்போது, தனிதனியாக நடத்த இது சாத்தியம் ஏன் இல்லை. அப்போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 
இந்த கருத்தை அரசாங்கம் மற்றும் சங்கங்கள் செவி சாய்க்குமா? 

அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேலை செய்யும்போது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ஏன் அடுத்த ஒன்றியத்திலும் வேறு மாவட்டத்தில் வேலை செய்ய கூடாது.

அரசு அலுவலர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி புரிந்தால் மாறுதல் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும். 

இல்லையேல் வேறு மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்தது மூன்று ஆண்டுகள் மாறுதல் கிடக்காத வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் தரவேண்டும்.  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி புரியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 

இதை ஏற்க்குமா? இந்த அரசாங்கம். இவர்களுக்கு குரல் தருவீர்களா? சங்க வாதிகள். 
இவர்களுக்கு இந்த சங்கங்கள் எந்த வகையில் உதவப்போகிறது.

நகரம் ஒட்டி வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து தனி ஊதியம் வழங்க வேண்டும்.

அரசாங்கம் முதலில் பணியில் அமர்த்தும்போது விருப்பத்தின் பேரில் பணி சில சமயங்களில் வழங்குகிறார்கள், சில சமயம் அவர்களாகவே பணி அணை  தேர்வு(ரேன்டம்) செய்து பணி வழங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? இனி வரும் காலங்களில் ஒரே மாதிரியான முறை கடைப்பிடித்து பணி வழங்கவேண்டும். 

ஆசிரியர்கள் நலனுக்காக சங்கம் என்றால் சங்கங்கள், இந்த வகையான ஆசிரியர்களுக்கு சங்கம் ஏதாவது செய்யாதா?  
அரசாங்கத்திடம்  ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தாதா? 
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் பணிஇடங்கள் இல்லை என்று கூறியே கடமைக்கு  கலந்தாய்வு  நடைபெறுகிறது. சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளது.

ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெறும் போதும்,பதவி உயர்வு நடைபெறும்போதும் அனைத்து சங்கங்களும்,AEEO க்கள் அனைவரும் இருந்து தவறு நடைபெறாமல் கலந்தாய்வு நடத்துகின்றனர்.ஆனால் மாவட்டம் கலந்தாய்வில் யாரும்  இருப்பதில்லை ஏன்?
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து தங்கள் ஒன்றியத்தில் பணி புரியும் இவர்கள்  ஆசிரியர்கள் அல்லவா?  இவர்களுக்கு யார் உதவி செய்வது சங்க பொறுப்பாளர்களே சிந்தியுங்கள். இதனால் இடங்கள் மறைக்கப்படுகிறது. 

எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற அவல நிலையை ஏற்படாத வண்ணம் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.சங்கங்கள் இதற்கான ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அரசிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேசியோ ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேதனையுடன் ஆசிரியர்கள் இவர்களின் புலம்பல் அரசாங்கம் செவி சாய்க்கமா?
ஏதாவது வழி செய்ய சங்கங்கள் முயற்சி செய்யுமா?

அன்புடன்
வேதனையுடன் ஆசிரியர்கள்.

No comments:

Post a Comment