Powered By Blogger

Saturday, 7 September 2019

திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது

*திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது*



*24-09-2019,  உண்ணணாவிரதம்


*நெஞ்சில் கொஞ்சமும் அச்சமின்றி  24-9-19 அன்று நடைபெறும் உண்ணாாாவிரதம்  அனைவரும் கலந்து கொள்வோம். நம்முடன் களத்தில் இருந்த நண்பர்களின் 17பியை எண்ணி அணி வகுப்போம். கூடிய கூட்டம் கண்டு  உளவுத்துறை அதிகாரிகள் மேலே  அனுப்பும் செய்தியே நமக்கு நல்ல முடிவைத் தீர்மானிக்கும்.. நாம் போராடி இதுவரை தோற்றதில்லை என்பதே வரலாறு.. என்ன.. நமக்கான வெற்றி கொஞ்சம் தள்ளிப் போகிறது. அவ்வளவுதான்....*



போராட்டம் என்றால் சிறு சிறு இழப்பு இருக்கத்தான் செய்யும் இவையெல்லாம் தற்காலிகமே...

இன்று போராட வில்லை எனில் வருங்காலத்தில் நித்தம் நித்தம் வாழ்க்கை நரகமாகும் தோழர்களே...

பழைய பென்ஷன் திட்டத்தை பெற்றே தீருவோம் என சபதம் ஏற்போம் தோழர்களே..



*எந்தப் பணி இருப்பினும் அதை ஒத்தி வைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்.(மீண்டும் சொல்கிறோம். நமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நம்மைக் காக்க வேண்டும், என்பதில் ஜேக்டோஜியோ உறுதியாக உள்ளது.அதனால் தான் நடக்கும்  மூன்று கட்ட நடவடிக்கைகளுக்கும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது). எனவே அச்சமின்றி திரண்டு வாருங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்..*

*அலைகடலென ஆர்பரித்து வாரீர் வாரீர் வாரீர்*



இவன்

*திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ*

ஒருங்கிணைப்பாளர்கள்.



(செய்தி. மு.சிவக்குமார்,Tams தலைவர்.

திருப்பத்தூர் வட்டம்.)

No comments:

Post a Comment