Powered By Blogger

Saturday, 9 July 2016

TN New Electricity Tariff Rates - Tamil Nadu EB 100 Units Free Power for House - 2016

TN New Electricity Tariff Rates - Tamil Nadu EB 100 Units Free Power for House - 2016  


TNERC - Puthiya Min Kattanam Ilavasa Minsaram
Tamil Nadu Government had announced Free 100 Units of Electricity of all Household Consumers with effect from May 23, 2016 (Monday). 


1) House -

Scenario 1 - If consumption is upto 100 units (per 2 months)
New Charge - Rs. 0 (Nil)

Scenario 2 - If consumption is upto 200 units (per 2 months)
- Upto 100 Units - Rs. 0 per unit
- 101 to 200 units - Rs. 1.50 per unit
- Additionally Fixed Charge Rs. 10 needs to be paid

Scenario 3 - If consumption is between 201 to 500 units per 2 months
- Upto 100 Units - Rs. 0 per unit
- 101 to 200 units - Rs. 2 per unit
- 201 to 500 units - Rs. 3 per unit
- Additionally Fixed Charge Rs. 15 needs to be paid

Scenario 3 - If you use above 500 units Rates are as follows
- Upto 100 Units - Rs. 0 per unit
- 101 to 200 units - Rs. 3.50 per unit
- 201 to 500 units - Rs. 4.60 per unit
- 501 and above units - Rs. 6.60 per unit
- Additionally Fixed Charge Rs. 50 needs to be paid

2) Industry 

Low Tension
- Rs. 6.35 per unit     (up 85 paise)
- Additionally Fixed Charge Rs. 70 / kW needs to be paid   (up Rs. 10)

High Tension
- Rs. 6.35 per unit     (up 85 paise)
- Additionally Fixed Charge Rs. 350 / kVA / per month needs to be paid   (up Rs. 50)

3) Commercial Establishments (includes Cinema Theaters)

Low Tension
- Rs. 5 per unit upto 100 units     (up 70 paise)
- Rs. 8.05 per unit above 100 units   (up Rs. 1.05)
- Additionally Fixed Charge Rs. 140 / kW needs to be paid   (up Rs. 20)

High Tension
- Rs. 8 per unit     (up Rupee 1)
- Additionally Fixed Charge Rs. 350 / kVA / per month needs to be paid   (up Rs. 50)


4) Private Schools, Colleges

Low Tension
- Rs. 7.50 per unit     (up Rupee 1)
- Additionally Fixed Charge Rs. 120 / kW needs to be paid   (up Rs. 20)

High Tension
- Rs. 6.35 per unit     (up 85 paise)
- Additionally Fixed Charge Rs. 350 / kVA / per month needs to be paid   (up Rs. 50)


5) Government and Govt-Aided Schools

Low Tension
- Rs. 5.75 per unit     (up 75 paise)
- Additionally Fixed Charge Rs. 120 / kW needs to be paid   (up Rs. 20)

High Tension
- Rs. 6.35 per unit     (up Rs. 1.85)
- Additionally Fixed Charge Rs. 350 / kVA / per month needs to be paid   (up Rs. 50)

6) Temples

- Rs. 5.75 per unit     ( up 75 paise)
- Additionally Fixed Charge Rs. 120 / kW needs to be paid   (up Rs. 20)


7) Temporary Connection 

Low Tension
- Rs. 12 per unit     (up Rs. 1.50)
- Additionally Fixed Charge Rs. 345 / kW / per month needs to be paid   (up Rs. 45)

High Tension
- Rs. 11 per unit     (up Rs. 1.50)
- Additionally Fixed Charge Rs. 350 / kVA / per month needs to be paid   (up Rs. 50)

For full details see the official TNERC press release  

ALL TRS TN.. Siva.

New TNEB Tariff Calculator 2016( Revised 24th May 2016 )

New TNEB Tariff Calculator 2016( Revised 24th May 2016 )

Units Consumed:
  
EB Bill Calculate New Tariff 


தொடக்க கல்வி- காமராஜர் பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாளாக)கொண்டாட தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு ந.க.எண்.14241J1/8.7.16

தொடக்க கல்வி- காமராஜர் பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாளாக)கொண்டாட தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு ந.க.எண்.14241J1/8.7.16

பள்ளி நேரத்தில் பிற பணிகள் கூடாது; கல்வி அலுவலர் எச்சரிக்கை!

பள்ளி நேரத்தில் பிற பணிகள் கூடாது; கல்வி அலுவலர் எச்சரிக்கை!
கோவை: பள்ளி நேரத்தில், கல்விப்பணி உள்ளிட்ட இதர பணிகளுக்காக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, ஆசிரியர்கள் வரக்கூடாது. இதை அனுமதித்தால், உரிய தலைமையாசிரியர் மீது, நடவடிக்கை பாயும் என, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:

மாவட்டம் முழுவதும்,அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,கல்விப்பணி சார்ந்த சிறப்பு கூட்டம் நடத்துவது வழக்கம். இதில்,வேலை நாட்களில் ஆசிரியர்களை,பிற பணிகளுக்காக,வகுப்பை விட்டு வெளியே அனுப்ப கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு,சில ஆசிரியர்கள் கல்வி,சொந்த பணிகளுக்காக வருகின்றனர். இது,மாணவர்களின் கல்வியை பாதிக்கும். எனவே,வகுப்பை புறக்கணிக்கும் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும்,அனுமதி அளிக்கும் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்மீதும்,நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு,அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மருத்துவமாணவர்களுக்கு MBBS படிப்பிற்கான பணம் உதவி திட்டம்

ஏழை மருத்துவமாணவர்களுக்கு MBBS படிப்பிற்கான பணம் உதவி திட்டம்


மு.சிவக்குமார், ப.ஆ
ALL TRS TN... Siva.

வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்!'

வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்!'


மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள். 

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி,   பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு,  இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
" இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய மொழியில் கருத்துக் கேட்பு நடத்துவது கண்டனத்திற்குரியது. தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில அரசிடம் என்ன மாதிரியான கடிதப் போக்குவரத்தை மத்திய அரசு நடத்தியது என்பது குறித்து எந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை" என ஆதங்கப்படுகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
மேலும் அவர், " இப்படியொரு கருத்துக் கேட்பு நடப்பதே, பலருக்கும் தெரியவில்லை. இவை அமல்படுத்தப்பட்டால், மாநில அரசின் சுயாட்சி அதிகாரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும். மாநிலத்திற்கென்று உள்ள மொழி, கல்வி, கொள்கை முடிவெடுக்கும் திறன் போன்றவை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். அதற்கான முன்முடிவுகள் அனைத்தும் சுப்ரமணியன் கமிட்டி பரித்துரைத்த தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கில மொழியை பிரதானப்படுத்தியே கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. சுமார் 230 பக்கங்களில் அவர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும், நமது கல்வி முறைக்கு எதிராகவே உள்ளது. 

இவற்றை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வரும் காலங்களில் கல்வி குறித்த முடிவுகளை மத்திய அரசே எடுக்கும். மாநில அரசுகள் வைக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை என்பதுதான் உண்மை. இப்படியொரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும், குழுவின் பரிந்துரைகளை விரிவாக எடுத்துக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்க முன்வர வேண்டும்.
இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். தேசிய கல்விக் குழுவின் அபாயங்கள் குறித்து வருகிற 14-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கல்வியில் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார் கவலையோடு. 

'இணையதளத்தில் பெயரளவுக்குக் கருத்துக் கேட்பு வைபவத்தை நடத்திவிட்டு, ஏதோ ஒரு நாளில் நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது' என அச்சப்படுகின்றனர் கல்வியாளர்கள்.  

மு.சிவக்குமார்,
ALL TRS TN.. Siva.

அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்படுமா? தரும்புரி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி

அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்படுமா? தரும்புரி மாவட்டத்தில்


தருமபுரி மாவட்டம், பாப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் அரசு ஆரம்பப்பள்ளி கடந்த 30 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பில் மட்டும் நான்கு மாணவர்கள் படித்தனர். அந்த நான்கு மாணவர்களும் தேர்ச்சி பெற்று இவ்வாண்டு ஆறாம் வகுப்பில் சேர அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று விட்டனர்.
தற்போது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட சேரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் வேலை நாட்களில் பள்ளிக்கு வந்து செல்கிறார். இதனால் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
இது ஒரே ஆண்டில் உருவான பிரச்னை அல்ல. பல ஆண்டுகளின் தொடர்ச்சிதான் இந்த நிலை உருவாகக் காரணம். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறபோது மாணவர்களைத் தக்க வைக்கவோ, புதிதாக மாணவர்களை சேர்க்கவோ பள்ளி ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? இந்த விஷயத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை? மாநில அரசின் கல்வித் துறை என்ன செய்கிறது?
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதும், தனியார் பள்ளிகளில் அதிகரிப்பதும் கடந்த பல ஆண்டு காலமாக நீடித்து வரும் அவலம். 2001-ஆம் ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014-இல் 36,17,473-ஆக அதிகரித்தது. ஆனால், மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது.
2008-09-இல் இருந்து 2012-13 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட அ.தி.மு.க. அரசு மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைப்பதற்கு இலவசமாக புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், வண்ணப்பென்சில்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்ற இலவசங்களை வழங்க திட்டமிட்டது. இதற்குப் பிறகும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.
உதாரணமாக, 2013-14, 2014-15 ஆண்டுகளில் அரசின் மானியக்கோரிக்கை அறிக்கையின் படியே அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது.
2007-08இல் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் 2,44,864-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2014-15இல் 1,54,080-ஆக குறைந்து விட்டது.
சென்னையில் கடந்த 13 ஆண்டுகளில் 54 மாநகராட்சிப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இக்காலத்தில் மாநகராட்சிப்பள்ளிகளில் 1,20,000-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000-ஆக குறைந்து விட்டது.
தருமபுரி மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டு 98,526-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2015-இல் 84,243-ஆக குறைந்து விட்டது.
அ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் பள்ளிக் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்த காரணத்தினால், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதோடு பல பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் (பாப்பம்பட்டி பள்ளியைப் போல்) மூடப்பட்டு விட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிப்பு யாருக்கு? சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஒன்றியம், விராச்சிலை என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.
இப்பள்ளி 1899-ஆம் ஆண்டு உருவானது. 120 ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளியில் ஒரு கட்டத்தில் 800 மாணவர்கள் படித்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இந்த நடுநிலைப்பள்ளியில் தற்போது 224 மாணவர்கள் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்களும், தாளாளரும் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி கடுமையான முயற்சி மேற்கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையை தக்க வைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர்களின் பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையான மாணவர்கள் ஏழை குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

224 மாணவர்களில் தலித் பிரிவினர் 100 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 102 பேர், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 22 பேர். 178 மாணவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள், மூன்று மாணவர்களின் பெற்றோர் துப்புரவுத் தொழிலாளர்கள். 18 மாணவர்களின் பெற்றோர் ஏழை விவசாயிகள். பூசாரி, மண் பாண்டம் செய்பவர், ஆசாரி, டீக்கடை, பெயின்டிங் வேலை போன்ற இதர பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 25 பேர்.
விராச்சிலை அரசு உதவி பெறும் பள்ளியின் தாளாளர் லாப நோக்கோடு பள்ளியை நடத்தவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை செலவு செய்வதாக கூறினார். ஆசிரியர் நியமனத்திற்கு அந்தத் தாளாளர் பணம் வாங்குவதில்லை என அங்குள்ள ஆசிரியர்கள் நெகிழ்வோடு கூறினார்கள்.
இப்பள்ளிக்கு 9, 10-ஆம் வகுப்புகள் தொடங்க அனுமதியளித்து இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்துவதோடு, ஆங்கில வழி வகுப்புகள் துவங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 2013-14இல் 21 மாணவர்கள் மட்டுமே படித்தனர். தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்ற மாணவர்களை அரசுப்பள்ளிக்கு ஈர்க்க ஆசிரியர்கள், ஊர் மக்களிடம் ரூ.5.50 லட்சம் வசூல் செய்து இரண்டு வகுப்பறைகளைக் கட்டியதோடு அதில் குளிர்சாதனம், மின்விசிறிகளை பொருத்தினார்கள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளையும் ஏற்படுத்தியதோடு கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினார்கள்.
அரசுப் பள்ளிக்கு அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி குறைவாக இருந்ததால் அரசுப்பள்ளிக்கு அருகில் ஒரு புதிய கட்டடத்தையும் கட்டினார்கள். அங்கும் குடிநீர், கழிப்பறை, சிமெண்ட் நடைபாதை ஆகியவற்றை அமைத்ததோடு இரண்டு ஆசிரியர்களையும் நியமனம் செய்தார்கள். அங்கன்வாடி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார்கள்.

இதனால் தற்போது அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 37 குழந்தைகளும், பள்ளியில் 79 மாணவர்களும் பயில்கின்றனர். அரசுப் பள்ளியைப் பாதுகாக்க, ஆசிரியர்களும், ஊர் மக்களும் இணைந்து களமிறங்கியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், நெடுவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியினால் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிந்துள்ளது. ஊர்மக்கள் உதவியோடு மாநிலத்தில் சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைத்ததோடு சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திய பல நல்ல அனுபவங்களும் உண்டு.
அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது என்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்?
சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கும், சில அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கும் காரணமென்ன?
தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். இலவசங்கள் கொடுத்தால் மட்டும் போதாது. குடிநீர், கழிப்பிடம், பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளையும் அளித்திட வேண்டும்.
பல பள்ளிகளில் உதவியாளர்கள் இல்லை, காவலர்கள் இல்லை, துப்புரவு செய்திட ஆளில்லை. சில பள்ளிகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகளும் குடிகாரர்களும் பயன்படுத்துகின்றனர்.
ஓவியம், இசை, நடனம், விளையாட்டு என மாணவர்களின் திறன் வளர்க்கும் ஏற்பாடு இல்லை. பணியாற்றும் ஆசிரியர்களின் பணிக் கலாசாரத்திற்கும் பள்ளி முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்குண்டு. இவற்றையெல்லாம் அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. துவங்குவதால் குழந்தைகள் தொடர்ச்சியாக அதே பள்ளிகளில் முதல்வகுப்பில் சேரும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, அரசுப்பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களை இணைக்க வேண்டும். அங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. முடித்து தொடர்ச்சியாக அரசு பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தைகள் சேரும் வாய்ப்பை உருவாக்கினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.
பல பாதகமான பரிந்துரைகளை செய்துள்ள டி.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான குழு அங்கன்வாடி மையங்களை அரசுப் பள்ளிகளோடு இணைக்க வேண்டுமென்ற சாதகமான அம்சத்தையும் கூறியுள்ளது.
கல்வித் தரத்தை உயர்த்தி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டிய முக்கியமானப் பொறுப்பு அரசுக்கு உள்ளது 

மு.சிவக்குமார், ப.ஆ
ALL TRS TN... Siva.

பத்தாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம்,அறிவியல், கணிதம்,சமூகறிவியல். New modified n revised recent *syllabus for X std*

பத்தாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம்,அறிவியல், கணிதம்,சமூகறிவியல்.

New modified n revised recent *syllabus for X std* ☝🏻☝🏻☝🏻







Source: CEO website

Friday, 8 July 2016

தேசிய திறனறிவு தேர்வில் (NMMS ) அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை... திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் சாதனை...


தேசிய திறனறிவு தேர்வில் (NMMS ) அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை... திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் சாதனை...


திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS  தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், ஒன்றியத்தில் மட்டும் 82மாணவர்கள் தேர்ச்சி பெற்று வியத்தகு சாதனை படைத்துள்ளார்கள். இம் மாணவர்களின் சாதனையால் தமிழகமே   நமது திருப்பத்தூரை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது. 

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி மாதந்தோறும் கல்வி ஊக்க தொகையாக ரூபாய் 500 கிடைக்கும். இக்கல்வி ஊக்கத்தொகை இம்மாணவர்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு வரை கிடைக்கும். இந்த அபார சாதனைக்கு உழைத்திட்ட ஆசிரியர்களின் தியாகத்தை சொல்லி வாழ்த்திட வார்த்தைகள் இல்லை. வாழ்க ஆசிரியர்கள் தொண்டு, தொடரட்டும் தாங்கள் பணி.

 இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த எமது ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மூத்த தலைமை ஆசிரியர்கள் இவர்களின் உழைப்பும், இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாகும்.  எனவே இந்த மாபெரும் வெற்றியை நமது ஒன்றித்திற்கு பெற்றுத்தந்த ஆசிரிய பெருமக்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும், பாராட்டி  'சாதனை பாராட்டு விழா'  03.07.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது. 

இவ்விழாவில் இம் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்,தொடக்க கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், உதவி,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள், தலைமை ஆசிரியரக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பாராட்டுரை நிகழ்தினர். 

மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் திருப்பத்தூர் ஒன்றியத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...

                   அன்புடன்...         
மு.சிவக்குமார்,ப.ஆ
ALL TRS TN....
.                                                                                       

பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*

பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://alltrstnsiva.blogspot.comhttp://alltrstnsiva.blogspot.com


*பயனர்எண் :*
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)

*கடவுச்சொல் :*
பிறந்த தேதி  

ஓய்வூதியம் பெறுபவர்கள் வங்கி கணக்கு துவக்குவதுகட்டாயம்:தபால் அலுவலகம் மூலம் பணம் இனி கிடைக்காது

ஓய்வூதியம் பெறுபவர்கள் வங்கி கணக்கு துவக்குவதுகட்டாயம்:தபால் அலுவலகம் மூலம் பணம் இனி கிடைக்காது 


ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி கட்டாயம் வங்கிக்கணக்கு துவங்கி இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். தபால் அலுவலகம் மூலம் வழங்கும் சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், ஏழை, எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள, பல உதவி 
திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், 1லட்சத்து, 14 ஆயிரத்து, 421 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் முதியோர் உதவி தொகையான, 1,000 ரூபாய் இதற்கு முன் தபால் நிலையத்தில் இருந்து அவரவர் வீட்டு முகவரிக்கு வழங்கப்பட்டது.


வாரிசுகளால் கைவிடப்பட்டு, வறுமையில் வாடும் முதியோர்களுக்கு இந்த தொகை பயனுள்ளதாக உள்ளது. இதை நம்பி பலர் வாழ்கின்றனர். ஏற்கனவே, முதியோர் உதவித்தொகை பெறுவோர், மற்றும் புதியதாக உதவித்தொகை கேட்டு மனுக்கள் கொடுத்துள்ளவர்களுக்கு, நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள வங்கியில் கணக்கு துவக்கி அதற்கான சேமிப்பு கணக்கு எண்ணை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.


இதனால், ஓய்வூதியதாரர்களுக்கு அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் மனு கொடுப்போருக்கும், உதவி தொகை வரவில்லை என, கேட்டு வருவோருக்கும் வங்கி கணக்கு துவங்கி அதற்கான எண் கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தி வருகின்றனர்.இதற்கு முன், பயனாளிகள் வீட்டு விலாசத்திற்கு பணம் தபால் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அவர்கள் வங்கி கணக்கு துவங்கி அதன் மூலம் பணம் எடுத்து கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.இதனால் ஓய்வூதியம் பெறுபவர்கள் நகர் பகுதியில் வங்கியில் கணக்கு துவங்க அலைந்து வருகின்றனர். கிராம பகுதியில் வங்கி பணியாளர்கள் அதற்கான வேலைகள் செய்து வருகின்றனர்.


மத்திய அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டம்

இந்திரா முதியோர் ஓய்வூதிய திட்டம்

இந்திரா ஆதரவற்ற விதவை திட்டம்

இந்திரா மாற்றுத் திறனாளி நிதி உதவி திட்டம்

மாநில அரசு ஓய்வூதிய திட்டம்

ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம்

ஆதரவற்ற மாற்றுத் திறனாளி நிதி உதவி திட்டம்

கணவனால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவி திட்டம்

முதல்வர் ஓய்வூதிய திட்டம்

திருமணமாக பெண்கள் ஓய்வூதிய திட்டம்இவை போன்ற திட்டங்கள், மத்திய, மாநில அளவில் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பயன் பெறும்

ஒவ்வொருவருக்கும் மாதம் தலா, 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.


வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் என, அரசு எங்களுக்கு கடந்த மாதம் முதல் உத்தரவிட்டுள்ளது. இனி, வங்கி கணக்கு இல்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படாது. தபால் அலுவலகத்தில் பணம் கொடுப்பதை நிறுத்த சொல்லி விட்டோம். வங்கி மூலம் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்.மாவட்ட அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்.  


ALL TRS TN... Siva.

Press Release No : 327 Of the Honble Chief Minister on the Health Insurance Scheme for Government Employees - Dt. 7.7.2016

Press Release No : 327 Of the Honble Chief Minister on the Health Insurance Scheme for Government Employees - Dt. 7.7.2016


திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசு ஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அன்புக்கரசிக்கு கருணை வேலை வழங்கப்பட்டது.

என் மகனின் பணிப்பதிவேட்டில் அவரது வாரிசாக மனையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களை அவரது மனைவிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களில் மூன்றில் ஒரு பகுதியை எனக்கு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அன்புக்கரசிக்கு முழுப்பணப் பலன்களையும் வழங் குவது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முழுப்பணப் பலன்களையும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடை க்கால உத்தரவு:

பெற்றோர் மற்றும் மூத்தோ ர்களை பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு 2007-ல் அமல் படுத்தியது.

இந்தச் சட்டப்படி பெற்றோ ர்களை பராமரிப்பது மகன், மகள்களின் கடமையாகும். வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களின் மகன், மகளிடம் இருந்து நிதி உதவி பெறுவது அவர்களின் உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை அதிகாரிகள் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி வழங்க மறுக்கக்கூடாது. பணிப்பதிவேட்டில் வாரிசுதாரர் பட்டியலில் பெயர் இல்லா விட்டாலும் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் இறுதி பணப்பலன்களில் அவரது தாயாருக்கும் பங்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரரின் மருமகளுக்கு பணப்பலன்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கணக்காயர் ஜெனரல், ராமநாதபுரம் ஆட்சியர், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஜூலை 26-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு ? ??

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு ? ??
7 வது  ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதியளித்தது.

இதையடுத்து, ஜூலை 11-ஆம் தேதி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அவை குறித்து பரிசீலிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகே, உயர்மட்டக் குழு அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

Teachers can view your pay,statement or print their

Dear Teachers can view your pay,statement or print their
 *payslip* through
 http://alltrstnsiva.blogspot.com
Employee Code means Your *GPF/CPS Number*
Suffix means *EDN* And Password is
Date of birth should be in the form of
 *DD/MM/YYYY*.

Click Here 


ALL TRS TN.. Siva.

Thursday, 7 July 2016

அறிவித்தபடி ஜூலை 11 மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

அறிவித்தபடி ஜூலை 11 மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

திட்டமிட்டபடி இரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என்று எஸ்.ஆர்.இ.எஸ் தொழிற்சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம் தெரிவித்துள்ளார். 7வது சம்பளக் 
கமி‌ஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்தாலும். சம்பள கமி‌ஷனின் பரிந்துரைகள் ஏமாற்றமளிப்பதாக மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசிடம் முன்வைத்த 26 கோரிக்கைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உறுதியாக உள்ளனர்.

தேசிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ராகவையா, பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா உறுப்பினர்கள் கே.கே.என்.குட்டி, ஸ்ரீகுமார் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி நிதி, உள்துறை மற்றும் ரெயில்வே மந்திரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 27 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வழங்காமல் வைத்திருக்கும் அனைத்து அலவன்ஸ்களையும் முழுமையாகத் தர வேண்டும். ரயில்வே துறையில் தனியார்மயம், புதிய பென்ஷன் திட்டம் போன்ற திட்டங்களைக் கைவிட வேண்டும். முக்கியமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டங்கள் கைவிடப்படும். ஆனால், எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையாவோ, ஊழியர்களின் கோரிக்கைகளை பரீசிலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால், இது கண்ணையாவின் தனிப்பட்ட கருத்துதானே தவிர அனைத்து தொழிற்சங்கங்களின் கருத்து கிடையாது என்றுகூறி அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது. இரயில்வே தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு 5 நாள் கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கெடு நேற்று இரவோடு முடிந்துவிட்டது. இதனால், இன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசித்து சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள். இவ்வாறு எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரெயில்வே, தபால், வருமானவரி, சுங்கம், ஆடிட்டர் ஜெனரல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் வருகிற 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்

FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு...!

FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு...!

அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்
சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம். அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக தொடரும். இந்த திட்டத்தால் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன !

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன !
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு 
மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக்கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது.

கவுன்சிலிங் எப்போது?; கவலையில் ஆசிரியர்கள்...!

கவுன்சிலிங் எப்போது?; கவலையில் ஆசிரியர்கள்...!
தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் ’கவுன்சிலிங்’ அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் ’காலம் கடந்து ’கவுன்சிலிங்’ நடத்தப்படுமோ’ என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


கல்வித் துறையில் ஆசிரியர்கள் நலன் கருதி, 2001 முதல் ’ஒளிவு மறைவற்ற மாறுதல் கலந்தாய்வு’ நடத்தப்படுகிறது. துவக்கத்தில் பல குளறுபடிகள், அரசியல் தலையீடு, ஒரே இடத்தில் இருவர் நியமனம், காலியிடங்கள் மறைப்பு, மறைக்கப்பட்ட இடங்களுக்கு ’பேரம்’ என கல்வித் துறையில் ’கலகலப்பு’ இருந்தாலும், இயக்குனராக கண்ணப்பன் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு பெரிய அளவிலான புகார்கள் இன்றி கவுன்சிலிங் நடந்து முடிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் பொது ’கவுன்சிலிங்’ அதைத் தொடர்ந்து பதவி உயர்வு ’கவுன்சிலிங்’ முடிந்த பின் தான் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டில் நிம்மதியே இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் ’கவுன்சிலிங்’ நடத்தப்படும்.

அப்போது தான் கற்பித்தல் பணியிலும் தொய்வு ஏற்படாது. ஆனால் தற்போது, ஜூலை முதல் வாரம் கடந்தும் இதுவரை ’கவுன்சிலிங்’கிற்கான விண்ணப்பங்களே வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் பெரும் குழப்பத்திலும் உள்ளனர்.

சொதப்பல்:

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவால் 2001ம் ஆண்டில், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறை, தமிழக கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் காலதாமத பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் கல்வி பாதிக்கிறது. அதிகாரிகள் முன் கூட்டியே திட்டமிட்டு உரிய நேரத்தில் ’கவுன்சிலிங்’ நடத்த முன்வர வேண்டும். இந்தாண்டு விரைவில் அறிவிக்க வேண்டும், என்றார்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் சந்திரன் கூறுகையில், ‘கவுன்சிலிங் நடக்காததால், ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடம் இருந்தும் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை. விரைவில் கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALL TRS TN... Siva.

பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


கஞ்சா சாக்லேட்' விபரீதத்தை உணர்ந்த தமிழக அரசு, மாநிலம்முழுவதும், உணவு பாதுகாப்புத்துறை மூலம் அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளது.பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தி, போதை சாக்லேட், 'குட்கா, ஜர்தா' உள்ளிட்ட புகையிலை பொருட்களும்பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.



 சென்னை மாநகராட்சி பள்ளி அருகே, பெட்டிக் கடையில் விற்கப்பட்ட கஞ்சா சாக்லேட் வாங்கிச் சாப்பிட்ட, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பரத், 13, என்ற மாணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்; அவனைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு 'டோஸ்' :இதில், 'நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எங்களுக்கு இல்லை' என, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கைவிரித்தது குறித்து, நமது நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகளை அழைத்து, 'டோஸ்' விட்ட,சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தமிழகம் முழுவதும் நேற்று, வேட்டையைத் துவக்கினர். பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், சாக்லேட் வகைகள் குறித்தும் சோதனை நடந்தது.சென்னையில், 87 கடைகளில் நடந்த சோதனையில், தண்டையார்பேட்டை, சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள கடையில், இரண்டு கஞ்சா சாக்லேட் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, 187 கிலோ பிற வகை சாக்லேட் வகைகளும், குட்கா, ஜர்தா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் சிக்கின.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், பள்ளிகள் அருகே உள்ள கடைகளில், போதை சாக்லேட்,தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையில் உள்ளதா என, சோதனை நடத்தி வருகிறோம். சென்னையில், 187 கிலோ உட்பட 500 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் புகையிலை பொருட்கள் சிக்கி உள்ளன. மாநிலம்முழுவதும்,இன்றும் முழுவீச்சில் வேட்டை தொடரும்' என்றார்.இந்திய மருத்துவ முறை சார்ந்த, மருந்து ஆய்வாளர்கள், தமிழகம் முழுவதும், பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து, 'மாணவர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்; பள்ளி அருகே தடை செய்யப்பட்ட சாக்லேட், உணவுப் பொருட்கள் விற்பனை நடந்தால் தகவல் கொடுங்கள்' எனக் கூறி, தங்களின் மொபைல் போன் எண், அலுவலக போன் எண்களை கொடுத்து வருகின்றனர்.

ஒரு வாரமாகும்...: 'கஞ்சா சாக்லெட் பரிசோதனை அறிக்கை வருவதற்கு, ஒருவாரம் ஆகலாம்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மாநகர காவல்துறை போலீஸ் அதிகாரிகள்கூறியதாவது: கஞ்சா சாக்லேட்டில், உப்பு, மிளகு, திப்பிலி, பேரிச்சம்பழம் ஆகியவற்றுடன், கஞ்சாவும் கலந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் தான், சாக்லேட்டை திறந்தவுடன், 'குப்'பென, கஞ்சா வாடை வருகிறது. தண்டையார் பேட்டையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா சாக்லேட்கள், அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்திற்கு, பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டுள்ளன.கஞ்சா சாக்லேட்டில் என்னென்ன பொருட்கள், எவ்வளவு சதவீதம் உள்ளதென அறிக்கை முடிவில் தான் தெரியவரும். அறிக்கை வர, ஒரு வாரம் ஆகலாம்.இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருவர் கைது :தண்டையார்பேட்டை, பட்டேல் நகர் மாநகராட்சிப் பள்ளிக்கு எதிரே உள்ள பெட்டிக்கடையில், கஞ்சா சாக்லேட் விற்ற நேதாஜி நகரைச் சேர்ந்த சுரேஷ் பகதுாரை, கடந்த 2ம் தேதி, போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார்,தண்டையார்பேட்டை பகுதியில், நேற்று காலை 10 மணியளவில், பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்தினர்.இதில், போதை தரும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பீம் யாதவ், தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகரை சேர்ந்த மோதிலாலையும் கைது செய்தனர். போதை தரக்கூடிய பொருட்களை விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.இதே பகுதியில், பள்ளிக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் நடத்த ஆய்வில், பெயர், காலாவதியான மற்றும் பில்இல்லாத பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள்பறிமுதல் செய்துஉள்ளனர்.

மாணவன் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் : கஞ்சா சாக்லெட் சாப்பிட்ட மாணவன் பரத், 13, எழும்பூர் அரசு மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். நேற்று முன்தினம், லேசாக கண் விழித்தான்; கை,கால்களில் லேசான அசைவு ஏற்பட்டது.நேற்று, அவனது உடல் நிலையில் மேலும் முன்னேற் றம் ஏற்பட்டதால்,அவனுக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் நீக்கப் பட்டுள்ளது.'இருந்தபோதிலும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தால், விரைவில் அவனுக்கு நினைவு திரும்ப வாய்ப்பு உள்ளது' என, டாக்டர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐஸ்கிரீமிலும் ஆபத்து! :போதை கலந்த சாக்லேட் போன்று, ஐஸ்கிரீமிலும் போதை கலந்து விற்க வாய்ப்பு உள்ளதால், ஐஸ்கிரீம் கடைகளிலும் சோதனை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், இன்று முதல், ஐஸ்கிரீம் கடைகளிலும், திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புகார் எண் :சந்தேகப்படும்படியாக சாக்லேட், உணவுப்பொருட்கள் விற்பனை நடந்தால், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவிற்கு, 94440 42322 எண்ணிலும்; இந்திய மருத்துவத் துறையின், மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு, 044 - 2622 3653 எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு : அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிஒன்றிய பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள், கள்ளர், பழங்குடியினர் நல பள்ளிகள், உருது பள்ளிகள் ஆகியவற்றின், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இதன்படி, 'பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பெட்டி கடைகள், 'ஸ்டேஷனரி' கடைகளில் விற்கப்படும் சாக் லேட் போன்ற இனிப்பு பொருட்களை கண் காணிக்க வேண்டும்.

சந்தேகப்படும் படியாக, குறிப்பிட்ட கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தாலோ, மாணவர்கள் குறிப்பிட்ட தின்பண்டத்தை விரும்பி சாப்பிட்டாலோ, உள்ளூர் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது...!

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது...! 


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.



 கடந்த10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் செய்ய போட்டித் தேர்வு வைக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்டமாக 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுநடத்தப்படவில்லை.தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசு, அரசுஉயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் போட்டித் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாத கணக்கெடுப்பின்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையோ 460தான். மேனிலைப் பள்ளிகளில் முதுநிலைப் aபட்டதாரிகள் பணியிடம் 1065 தான் உள்ளது.

 மேற்கண்ட இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றாலும் போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தினால் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருப்பதோ 460 இடங்கள் தான். அதனால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒரு புறமிருக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ALL TRS TN...Siva.

Tuesday, 5 July 2016

வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: காவல்துறை அறிவுறுத்தல்கள்

வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: காவல்துறை அறிவுறுத்தல்கள்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரவு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து வாகனத்தில் வீடு திரும்பிய நந்தினி, நஜ்ஜு ஆகியோரிடம் இருந்து பணப்பையை கொள்ளையன் பறிக்க முயன்றான். இதில், வாகனத்தில் இருந்து விழுந்த நந்தினி உயிரிழந்தார். சாலையில் சென்ற முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.

ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள், தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களை நிறுவியுள்ள வங்கிகள், பணம் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்குகிறது. வங்கிக்கு உள்ளே வருபவர்கள், வெளியில் நிற்பவர்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஹெல்மெட், தொப்பி அணிந்து வரவேண்டாம். பணம் எடுக்கும்போது, மற்றவர்கள் கவனிக்காத வகையில் ரகசிய எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றன.

இதுதொடர்பாக காவல்துறையும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதுபற்றிய விவரம்:

* வங்கி, ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதை சிலர் நோட்டமிடலாம். அதிக தொகை எடுக்கும்போது, அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எண்ணுவது, அடுக்குவது கூடாது. வங்கி அல்லது ஏடிஎம் மையத்துக்குள்ளேயே எண்ணி முடித்து, பையில் வைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்து எண்ணுவது, சரிபார்ப்பது கூடாது.

* வங்கியில் இருந்து வெளியே வரும்போது யாராவது பின்தொடர்கின்றனரா என்று கண்காணிக்க வேண்டும். பின்தொடர்வதாக சந்தேகித்தால் காவல் துறையினரை அணுகலாம்.

* சந்தேகிக்கும் நபர்கள் வங்கி அல்லது ஏடிஎம் மையங்களுக்கு வெளியே நிற்பதாக அறிந்தால், அந்த மையங்களில் இருக்கும் காவல்துறை தொடர்பு எண்ணில் தகவல் அளிக்கலாம்.

* சில நேரம், நீங்கள் பணத்தை எடுத்துச் செல்லும்போதோ, வாகனத்தில் ஏறும்போதோ, உங்கள் சட்டையில் அசிங்கம் பட்டிருப்பதாக யாராவது கூறலாம். ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக கூறலாம். அவர்கள் உங்கள் கவனத்தை திசைதிருப்பி, பணப்பையை பறித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை தேவை.

* பணத்தை கைப்பையில் போட்டு கையில் தொங்கவிட்டு செல்வது, வாகனத்தின் முன்பக்க பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

* இரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில், பாதுகாவலர் இல்லாத ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதை பெரும்பாலும் தவிர்க்கலாம்

தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...!

தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...!
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து 
எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, மாநில அளவில் ஜூலை 7-இல் புத்தாக்கப் பயிற்சியும், 19-இல் தொடர் மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சியும், 11-இல் மாவட்ட வாரியாக அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், ஆசிரியர் கருத்தாளர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியும், 25-இல் வலுவூட்டல் பயிற்சியும், 16-இல் அனைத்துத் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் நடுநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Dear All TRS your salary 7. pay com

Dear All TRS your salary Pa


Monday, 4 July 2016

7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும்

7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காத்திருக்கிறது ரூ. ஒரு லட்சம் கோடி
 

 7வது ஊதியக்குழு பரிந்துரைஎந்த நாட்டின் பொருளாதாரமும் பணம் புழங்கினால்தான் செழிப்பாக இருக்கும். திடீரென ரூ.1 லட்சம் கோடி பணம் சந்தையில் பாய்ந்தால் என்னாகும்? கார் விற்பனை, டூ வீலர் விற்பனை, வீடு, மனை விற்பனை தூள் பறக்கும். அதுபோக, வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஏ.சி., 50 அங்குல டிவி என பணம் தாராளமாக புழங்கும்.

கல்யாணம், காட்சி என கொண்டாட்டம் கூடும்.7-வது சம்பளக் கமிஷன் மூலம் மத்தியஅரசு ஊழியர்களுக்கு கூடுதலாகக் கிடைக்கப் போகும் ரூ.1 லட்சம் கோடியும் இப்படித்தான் மாறப்போகிறது.கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை சமீபத்தில் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதியரசர் ஏ.கே.மாத்தூர் தலைமையிலான குழு இந்த பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு கடந்த புதன்கிழமை மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியது. ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஐந்தாவது ஊதிய குழு பரிந்து ரைக்குப் பிறகு அதனை அமல்படுத்த மத்திய அரசு 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது. அதேபோல ஆறாவது ஊதிய குழு பரிந்துரையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு 32 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது. ஆனால் இப்போது ஆறு மாதங்களுக் குள்ளாகவே இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 47 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள். 23.5 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அடிப்படை ஊதியம் 14.3 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு சம்பள கமிஷன்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு இதுதான். இதற்கு முந்தைய கமிஷன்களில் அடிப்படை சம்பளம் 20.6%,27.6%,31% மற்றும் 54% உயர்த்தப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு எவ்வளவு ஊதிய உயர்வு வழங்குகிறது, மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும்,எந்தெந்த துறைகளில் வளர்ச்சி ஏற்படும், பணவீக்கம் உயருமா என ஒவ்வொன்றையும் பார்ப்போம். சலுகைகள் என்ன? மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல அதிகபட்ச சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

புதிதாக பணியில் சேரும் ஆரம்பகட்ட பணியாளரின் சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கும். அதேபோல புதிதாக பணியில் சேரும் பிரிவு 1 அலுவலரின் சம்பளம் ரூ.56,100 ஆக இருக்கும். இதன் மூலம் குறைந்தபட்ச பணியாளர்களுக்கும் அதிகபட்ச பணியாளருக்கும் உள்ள விகிதம் 1:13.9 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த விகிதம் 1:12 என்ற அளவில் இருந்தது. இதனை 1:8 என்ற அளவில் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. 3 சதவீத ஆண்டுஊதிய உயர்வு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர பணிக்கொடை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடு கட்டுவதற்காக முன் தொகை ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசின் செலவுகள் ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்பதால் அரசுக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கோடி செலவாகும். தவிர அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் கூடுதலாக ரூ.72,800 கோடி செலவாகும். சம்பளம், சலுகை மற்றும் ஓய்வூதியத்துக்காக மத்திய அரசு செலவிடும் தொகை ஜிடிபியில் 2.8 சதவீதமாக கடந்த சில நிதி ஆண்டுகளாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில்3.4 சதவீதமாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 

பலன்கள் என்ன? அரசுக்கு செலவு,சங்கங்கள் எதிர்ப்பு என இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏழாவது ஊதிய குழு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பரிந்துரையால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களிடம் கூடுதல் தொகை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். அதனால் தொலைக்காட்சி, ஏசி, வாஷிங்மெஷின் என்று அழைக்கப்படும் வொயிட் கூட்ஸ் விற்பனை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக பருவமழை நன்றாக இருப்பதால் கிராமப் புற பொருளாதாரம் மேம்படும் என்பதால் இந்த துறை நிறுவனங்களின் விற்பனை உயரும். பொதுவாகவே விழாக்காலங் களில்தான் இதுபோன்ற பொருள்களின்விற்பனை அதிகரிக்கும், இப்போது சம்பள கமிஷனும் வந்துள்ளது. தவிர வீடு வாங்கும் போக்கும் உயரும். ஆட்டோமொபைல் துறை ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது 2 வருடங்களுக்கு மேலான நிலுவைத் தொகை மக்களுக்கு கிடைத்ததால் அப்போது விற்பனை அதிகரித்தது. 

ஆனால் இப்போது ஆறு மாத நிலுவைத் தொகை கிடைக்கும் என்பதால் பெரிய அளவில் விற்பனை இருக்காது என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் அதிக பட்ச ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதால் கணிசமாக விற்பனை இருக்கும் என்று இந்த துறையினர் எதிர்பார்க்கிறார்கள். மாருதி சுஸூகி 2.5 லட்சம் கார்களை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விற்க முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் இரு சக்கர வாகன விற்பனை உயரும் என்று ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது. பங்குச் சந்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும் ஏழாவது ஊதிய குழுவால் பெரிய ஏற்றம் இருக்காது என பங்குச்சந்தை வல்லுநர் ஜி .சொக்கலிங்கம் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் கூட்ஸ் ஆகிய நிறுவனங்கள் விற்பனை அதிகரிக்குமே தவிர இதனால் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் வர வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். ஜிடிபி வளர்ச்சி ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையால் பொருளாதாரத்தில் வேகம் எடுக்கும் என்று தரமதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. செலவுகள் மற்றும் சேமிப்பு உயரும் என்பதால் நடப்பு நிதி ஆண்டில் 7.9 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கிரிசில் தெரிவித்துள்ளது. சம்பளக் கமிஷனால் ஒரு சதவீதம் கூடுதல்வளர்ச்சி இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

ஜிடிபி வளர்ச்சி ஒரு புறம் இருந்தா லும் பணவீக்கம் உயர்வதற்கான வாய்ப்பும், நிதிப் பற்றாக்குறைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் போவதற்கான சாத்தியங்களும் உள்ள தாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதனை 26,000 ரூபாயாக உயர்த்த சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், குறைந்தபட்ச சம்பளம் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வேளை மாற்றம் நிகழ்ந்தால் நுகர்வு மேலும் உயரவே வாய்ப்புள்ளது.

ஜூலை 8-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஜூலை 8-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 


தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஓளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வருகிற ஜூலை 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்றாரப். மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் வேலை அறிகையை படித்தார்.
மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் வரவு-செலவு அறிக்கையை படித்தார்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் ச.மயில் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில முழுவதுமிருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கையால் தாமதமானது.
தற்போது தேர்தல் முடிந்து அரசு பதிவியேற்று பின்னரும் கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கூட இதுவரை பெறாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் இந்த கலந்தாய்வில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
மேலும் தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல், பொருளாதாரக் கொள்கைகளை ஆகியவற்றை எதிர்த்து 2016 செப்.2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மக்கள் நலன் கருதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி முழுமையாக பங்கேற்கும். தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெற வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இஅருந்தால் தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும்.
தற்போது பள்ளி திறந்த ஒரு சில நாட்களிலேயே பிற பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக அனைத்து ஊராட்சி பகுதிகலிலும் குடிநீர் பரிசோதனைக்கு ஆசிரியர்களை பயன்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகஅரசு ஏற்கனவே வழங்கப்பட்ட 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்தும், தற்போது அறிவிக்கப்பட்டுள்லது 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.

SSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

SSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
திறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன? 

 அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த கல்வியாண்டில்,ஆசிரியர் பயிற்றுனர்களால்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம் வாசித்தல்,எழுதுதல்,மற்றும் எளிய கணக்குகளை மேற்கொள்ளுதல் சார்ந்த,அனைத்து மாணவர்களின் திறன் குறித்து,ஆறு மாத கால இடைவெளியில்,தனித்தனி மாணவர்களின் திறன் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம்,ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது.இந்த ஆய்வு பணிகள் மூலம்,மாணவர்களின் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால்,நடப்பு கல்வியாண்டிலும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி,முதல்கட்ட ஆய்வு பணியை,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில்இரண்டு பிரிவாகவும்,இரண்டாம் கட்ட ஆய்வு பணியை பிப்.,மார்ச் மாதங்களில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் போது,ஒவ்வொரு மாணவர்களின் தனித்தனி மதிப்பீட்டை ஆய்வு செய்து,திறன் முன்னேற்றம் குறித்து,பதிவுகள் பராமரித்து அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

அதன்படி,ஜூலை,ஆக.,மாதங்களில் நடக்கும் ஆய்வுகளின் அறிக்கையை,செப்., 5க்குள்ளும்,பிப்.,மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும் ஆய்வுபணிக்கான அறிக்கையை,ஏப்., 5க்குள்ளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ALL TRS TN.. Siva

'இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு ✂ கட்!;

'இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு ✂ கட்!;

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில்,

ஒவ்வொருஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலானபுதிய கல்வி கொள்கையைவெளியிட்டுள்ளது. 

அதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் திறன் குறைவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். தகுதி தேர்வின் அடிப்படையில்தான் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.  (தமிழகத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை இருக்கிறது). அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இனி மத்திய அரசின் அங்கீகாரத்தை கண்டிப்பாக பெற வேண்டும்.

தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியலுக்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திறன்தேர்வு நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குமட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு 'கட்'.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் தேசிய அளவில்மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய அளவில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று 3 பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்வகுக்கப்படும். இந்த 3 பாடங்களை தவிர மொழிப்பாடம், சமூக அறிவியல், தொழில்கவ்வி பாடங்களை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 

6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுவரை மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி வந்த நிலையில், இப்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களும் திறன் தேர்வு எழுதவேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தங்களது திறனை தொடர்ந்து மேன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படப்போகிறது.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் சாதனையாளர்களை கௌரவிக்கும் சாதனை பாராட்டு விழா.

 திருப்பத்தூர் ஒன்றியத்தில் சாதனையாளர்களை கௌரவிக்கும் சாதனை பாராட்டு விழா. 




திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS  தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், ஒன்றியத்தில் மட்டும் 82மாணவர்கள் தேர்ச்சி பெற்று வியத்தகு சாதனை படைத்துள்ளார்கள். இம் மாணவர்களின் சாதனையால் தமிழகமே   நமது திருப்பத்தூரை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது. 


இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி மாதந்தோறும் கல்வி ஊக்க தொகையாக ரூபாய் 500 கிடைக்கும். இக்கல்வி ஊக்கத்தொகை இம்மாணவர்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு வரை கிடைக்கும். இந்த அபார சாதனைக்கு உழைத்திட்ட ஆசிரியர்களின் தியாகத்தை சொல்லி வாழ்த்திட வார்த்தைகள் இல்லை. வாழ்க ஆசிரியர்கள் தொண்டு, தொடரட்டும் தாங்கள் பணி.


 இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த எமது ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊக்குவித்த நமது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மூத்த தலைமை ஆசிரியர்கள் இவர்களின் உழைப்பும், வழிகாட்டுதலுமே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாகும்.  எனவே இந்த மாபெரும் வெற்றியை நமது ஒன்றித்திற்கு பெற்றுத்தந்த ஆசிரிய பெருமக்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும், ஊக்குவித்த கல்வி அதிகாரிகளையும் பாரட்டி 'சாதனை பாராட்டு விழா'  03.07.2016 ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது. 


இவ்விழாவில் இம் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்,தொடக்க கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், உதவி,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள், தலைமை ஆசிரியரக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பாராட்டுரை நிகழ்தினர். 


மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து கல்வியாளர்களையும்,ஆசிரிய பெருமக்களையும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ஒன்றியத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                   

 அன்புடன்...        

  

மு.சிவக்குமார்,ப.ஆ

ALL TRS TN....Siva.

.                                                                                       

Sunday, 3 July 2016

7.th Pay Commission Calculator with Arrears

7.th Pay Commission Calculator with Arrears




Calculate your new Pay and Arrears of 7th CPC to be implemented w.e.f. July, 2016. The Steps to Calculate Pay Arrears.



CLICK HERE

7th Pay Commission Calculator with Arrears

Saturday, 2 July 2016

Pay Continuation Order For HM and BT Posts JUN 2017 (GoNo 185,89 LT001240)

Pay Continuation Order For HM and BT Posts JUN 2017 (GoNo 185,89 LT001240)

22 போலி பல்கலை.: பட்டியலை வெளியிட்டது யுஜிசி.

22 போலி பல்கலை.: பட்டியலை வெளியிட்டது யுஜிசி.
22 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது யுஜிசி சட்டம் பிரிவு 3-இன் கீழ் உருவாக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது மத்திய, மாநில அரசு சட்டங்கள் மூலம் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே எந்தவொரு பட்டத்தையும் (இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி) வழங்க முடியும் என யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) கூறுகிறது.இந்த வகையில் உருவாக்கப்படாத கல்வி நிறுவனங்கள் எதுவும் "பல்கலைக்கழகம்' என்ற பெயரை பயன்படுத்த முடியாது. 

அதாவது பட்டம் வழங்க இயலாது என யுஜிசி சட்டப் பிரிவு 23-இல் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு யுஜிசி சட்டத்துக்குப் புறம்பாக பல்கலைக்கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு நாடு முழுவதும் இயங்கி வரும் 22 போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி கண்டறிந்து, மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தப் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.

இதில், தமிழகத்தில் திருச்சி புத்தூரில் செயல்பட்டு வரும் டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், கேரள மாநிலம் கிஷாநட்டத்தில் இயங்கி வரும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலம் பெல்காம் கோகாக் பகுதியில் அமைந்துள்ள பதகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுதில்லி இந்திய அறிவியல், பொறியியல் நிறுவனம் உள்பட 22 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

 அதன்படி, மாநில அளவில் ஜூலை 7-இல் புத்தாக்கப் பயிற்சியும், 19-இல் தொடர் மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சியும், 11-இல் மாவட்ட வாரியாக அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், ஆசிரியர் கருத்தாளர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியும், 25-இல் வலுவூட்டல் பயிற்சியும், 16-இல் அனைத்துத் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் நடுநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC அறிவிப்பு: விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், தரவரிசை வெளியீடு - கலந்தாய்வு ஆக.1-ல் தொடக்கம்

TNPSC அறிவிப்பு: விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், தரவரிசை வெளியீடு - கலந்தாய்வு ஆக.1-ல் தொடக்கம்
விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 813 காலியிடங்களுக்காக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.தேர்வு எழுதிய 7 லட்சத்து 70 ஆயிரத்து 860 விண்ணப் பதாரர்களில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 42 பேரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்பு பிரிவினருக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு, மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிட் டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்பு பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, மேற்கண்ட தகவல்கள் தவறானது என தெரியவந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவரிசை நிலை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகிய வற்றின் அடிப்படையில் கலந் தாய்வுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அழைக்கப்படுவர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவோர் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.விஏஓ தேர்வில் கலந்துகொண்டு, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் மதிப் பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்குபேறுகால விடுமுறையை உயர்த்த மத்திய அரசு முடிவு.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்குபேறுகால விடுமுறையை உயர்த்த மத்திய அரசு முடிவு.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையாக இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வார கால பிரசவ விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதே போல் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் 26 வார கால பிரசவ விடுமுறையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இது தொடர்பான மசோதாவை பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

TNPSC:VAO Exam Result Direct link (Exam Date:28.02.2016)

 TNPSC:VAO Exam Result Direct link (Exam Date:28.02.2016)

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்.

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்.
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்  அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி, மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்.

தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்படும்.ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ள பெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்.ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 3 பாடத்துக்கு ஒரே 'சிலபஸ்' : 

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டு, பல புகார்கள் எழுகின்றன. எனவே, தேசிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஒரே தேர்வு நடத்தலாமாஎன, ஆலோசிக்கப்படுகிறது. கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் ஒவ்வொரு விதமாக படிப்பதால், அவற்றுக்கு தேசிய அளவில், ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்கள், மாநிலங்களின் விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்பு முதல் கட்டாயம் ஆக்கப்படும்.

TRANSFER NEWS - ADW Schools

TRANSFER NEWS - ADW Schools 

TRANSFER NEWS - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு பற்றிய விவரம் மற்றும் செயல்முறைகள்...



திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்திலேயே (82 மாணவர்கள் ) அதிக எண்ணிக்கையில் அபார சாதனை.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS  தேர்வில் தமிழகத்திலேயே (82 மாணவர்கள் ) அதிக எண்ணிக்கையில் அபார சாதனை. 





திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS  தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், 82 மாணவர்கள் அபார சாதனை. எட்டாம் வகுப்பிற்கு இந்திய அளவில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இந்த NMMS  தேர்வில்  தமிழகத்திலேயே நமது திருப்பத்தூர் ஒன்றியத்தில் மட்டும் அரசு பள்ளி  மாணவர்கள் 82மாணவர்கள் தேர்ச்சி பெற்று வியத்தகு சாதனை படைத்துள்ளார்கள். இது சாதாரண விசயம் இல்லை. அரசு பள்ளிகள் புரிந்துணர்ந்து படிக்கும் கல்விமுறைக்கு கிடைத்த பெரும் வெற்றி , இம் மாணவர்களின் சாதனையால் தமிழகமே   நமது திருப்பத்தூரை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது. 

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி மாதந்தோறும் கல்வி ஊக்க தொகையாக ரூபாய் 500 கிடைக்கும். இக்கல்வி ஊக்கத்தொகை இம்மாணவர்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு வரை கிடைக்கும். இந்த அபார சாதனைக்கு உழைத்திட்ட ஆசிரியர்களின் தியாகத்தை சொல்லி வாழ்த்திட வார்த்தைகள் இல்லை. வாழ்க ஆசிரியர்கள் தொண்டு, தொடரட்டும் தாங்கள் பணி. எடுத்துக்கொண்ட வேலையில் நேரம் காலம் பார்க்காமல் திட்டமிட்டு கடுமையாக உழைத்து தங்களின் திறமைகளை மாணவர்களுக்கு அளித்து, இம்மாபெரும் வெற்றிக்கு பிண்ணனியாக இருந்து மாணவர்களை வெற்றி பாதைக்கு தாங்கி ஏற்றி செல்லும் வெற்றி ரதமாக செயல்பட்ட ஆசிரிய கர்ண மகாராசாக்களை மனதார பாராட்டுகிறோம்.  அந்த வகையில் இந்த தேர்வு அறிவித்ததிலிருந்து இதை எப்படியெல்லாம் நடத்தலாம் என திட்டமிட்டு இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த எமது ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊக்குவித்த நமது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மூத்த தலைமை ஆசிரியர்கள் இவர்களின் உழைப்பும், வழிகாட்டுதலுமே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாகும்.  இது போன்ற கல்வி அதிகாரிகளும் , தியாக உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருமக்களும் இருக்கும் வரை ஏழை மாணவர்களுக்கு நல்ல கல்வி அறிவு தடையின்றி கிடைத்திடும்.  எனவே இந்த மாபெரும் வெற்றியை நமது ஒன்றித்திற்கு பெற்றுத்தந்த ஆசிரிய பெருமக்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும், ஊக்குவித்த கல்வி அதிகாரிகளையும் பாரட்டவேண்டியது நமது தலையாய கடமையாகும். 

இந்த வெற்றியை நாம் அனைவரும் சேர்ந்து வரும் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெறும் வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு, இவ்வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து பெருமக்களையும் மனதார வாழ்த்திடுவோம் வாருங்கள். மகிழ்விப்போம்.......    மகிழ்வோம்.      
                    

அன்புடன்...      
    
மு.சிவக்குமார்,ப.ஆ
ALL TRS TN....
.                                                                                       

Friday, 1 July 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005* -ஒரு சிறப்பு பார்வை.

*தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005*
                   -ஒரு சிறப்பு பார்வை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் *(Right to Information Act)* என்பது குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டமாகும்.

 2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் அதற்கு விண்ணப்பிப்பது எப்படி?, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும்? என்பது பற்றி இப்போது காண்போம்...

*மனுவை எப்படி எழுத வேண்டும்?*

💎`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக இல்லாமல், நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும் கேட்க வேண்டும். 

💎உதாரணமாக, ‘நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என் விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்யவேண்டிய அலுவல் எதுவும் இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி, தாசில்தார் அலுவலகத்தில் *"ஆர்டிஐ"* மனுவை அளிக்க வேண்டும் (இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் கிடைக்கவில்லை என்றாலும் பொருந்தும்).

நினைவில்கொள்க… போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 

*மனுவை யாருக்கு அனுப்ப வேண்டும்?*

💎எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த அலுவலகத்தின் *"பொதுத் தகவல் அதிகாரி*க்கு *"PIO"*  *(Public Information Officer)* அனுப்ப வேண்டும். "பொதுத் தகவல் அதிகாரி" என்பவர், ஒவ்வொரு அரசு சார் நிறுவனங்களின் செய்தித் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்.

💎 *"பெறுநர்"* முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு, எந்த அலுவலகமோ, அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்த தபாலில் 
10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை *(Court Fee Stamp)* ஒட்டி அனுப்ப வேண்டும். 

தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே பதில் தரச் சொல்லிக் கோரலாம்.
 

*"மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்?*

💎பொதுத் தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு மேலே உள்ள *"மேல்முறையீட்டுக்கான அதிகாரி"*க்கு *(Appellate Authority)* மனு அனுப்பலாம். 

💎மனுவில் ‘பொருள்’ என்பதன் கீழ், பொது தகவல் அதிகாரி இந்நாள் வரை தகவல் தராததன் காரணமாக, *"ஆர்டிஐ"* சட்டத்தின் படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும். 

*அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தர வேண்டும்?*

💎பொதுத் தகவல் அதிகாரி, 30 முழு வேலை நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். அதே போல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

*இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் வரவில்லை என்றால்?*

💎அடுத்ததாக *"ஆர்டிஐ"*யின் தலைமையான மாநில தகவல் ஆணையத்துக்கு… 

*"மாநிலத் தகவல் ஆணையம்",* நம்பர் – 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி.நகர், சென்னை-18’ என்ற முகவரிக்கு மனு அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில் கிடைத்துவிடும்.

*மனுவுக்கு பதில் வரும் போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?*

💎தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு வாங்கும்பட்சத்தில், 
*"உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல் பெற்றுக் கொள்கிறேன்"* என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம். போதிய தகவல்கள் இல்லை என்று நாம் மேல்முறையீடு செய்யும்போது அது நமக்கு உதவும்.


ALL TRS TN... Siva.

DSE : HIGHER SECONDARY HEAD MASTER PANEL FOR THE YEAR 2016 - 2017

DSE : HIGHER SECONDARY HEAD MASTER PANEL FOR THE YEAR 2016 - 2017 






ALL TRS TN.,... Siva.

7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.

7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுந்தந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு எனகூறப்படுகிறது.

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ஊதியஉயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்கு நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-ஆவது ஊதியக் குழுவை கடந்த 2014-ஆம் ஆண்டு அமைத்தது. இந்தக் குழு, 900 பக்கங்களைக் கொண்ட தனது பரிந்துரைகளை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்தஆண்டு நவம்பர் மாதம் அளித்தது.

அதில், இளநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை 14.27 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், ஒட்டுமொத்த ஊதியம் மற்றும் இதர படிகள், ஓய்வூதியத்தை 23.55 சதவீதம் உயர்த்தவும் பரிந்துரைத்திருந்தது. கடந்த 70 ஆண்டுகளில், இது மிகவும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு பரிந்துரையாகும். 



ALL TRS TN... Siva.

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு.

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு.
அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. 

எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன்பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கருத்துக்கள், யோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்ப ஜூலை 31 கடைசி தேதியாகும். இந்த விவரம் ஜ்ஜ்ஜ்.ம்ட்ழ்க்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.வரைவு கல்விக் கொள்கையில்இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:

* கல்வித் தரத்தைப் பாதுகாக்க இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

* பள்ளிகளின் தரத்தை நிர்ணயம் செய்ய புதியத் திட்டம்உருவாக்குதல்.

* பள்ளிகளுக்கு, பள்ளி வாரியங்கள் அங்கீகாரம் அளிக்கும்நடைமுறையைக் கொண்டுவருதல்.

* உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில்புதிய கல்வி ஆணையம் உருவாக்குவது.

* பள்ளிக் கல்வி, உயர் கல்வி புகார்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தனி கல்வி தீர்ப்பாயங்களை உருவாக்குவது.

* பல்கலைக்கழகங்கள் தரமான நிர்வாகத்தை அளிக்கும் வகையில் அவற்றுக்கு கீழ் இணைப்புப் பெறும் கல்லூரிகளின்எண்ணிக்கையை அதிகபட்சம் 100-ஆகக் குறைப்பது.

* உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாகக்கண்காணிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்மாநில உயர்கல்வி கவுன்சில்களை உருவாக்குவது.

* சர்வதேச தரத்திலான உயர் கல்வியை இந்திய மாணவர்கள் பெறும் வகையில் 200 தலைசிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்க அனுமதிப்பது.

* வெளிநாடுகளில் கல்வி வளாகங்களைத் தொடங்க இந்தியகல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவது 

என்பனஉள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5-ஆம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல்சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசுகள் தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சம்ஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும். 


ALL TRS TN.. Siva.

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்

நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம். நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது... கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். குழு சமர்பித்த பரிந்துரைகள் :

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும். ஆசிரியர் தேர்வானது வெளிப்படை தன்மையுடனும் நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.
தொடக்கப்பள்ளி அசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும். அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதி சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும். ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதை மாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த 4 வருட படிப்பாக மாற்றலாம். முன்பள்ளி கல்வி என்று சொல்லப்படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும். 
5வது வகுப்பு வரையிலான கட்டாய பாஸ் முறையானது தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும். அதேபோல் மேல் நிலைபள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிருபிக்க 2 வாய்ப்பு வரை வழங்கலாம். 10வது வகுப்பு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் 2 வகையாக கலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்க போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், அல்லாதவர்கள் 2ம் தர தேர்வுகளை எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.
போர்ட் தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கு வகையில் இருக்க வேண்டும். 12 வது வகுப்பை எந்த முறையினால கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வு ஒன்று 


ALL TRS TN... Siva.

ஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை

ஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை
நோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கல்வித்துறை தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊதியம் கணக்கிடும் போது, சிலருக்கு தவறுதலாக கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குளறுபடி தணிக்கையின் போது கண்டறியப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக வழங்கிய தொகையை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படுகிறது.

திடீரென ஊதியத்தை பிடித்தம் செய்ய துறை அலுவலர் உத்தரவிடுவதால், சிலர் நீதி மன்றத்தில் தடையாணை பெறுகின்றனர். இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதையடுத்து 'தணிக்கை விபரம் குறித்து சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கிய பின்பே, ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்,' என நிதித்துறை அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி ஆசிரியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை நோட்டீஸ் வழங்காமல் பிடித்தம் செய்யக்கூடாது என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

ALL TRS TN... Siva

இன்று (30.6.2016)மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

இன்று (30.6.2016)மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
இன்று (30.6.2016)மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில்  வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.


ALL TRS TN.. Siva.

புதிய பென்ஷன் திட்ட பணப்பலனிற்காக 1188 பேர் தவம்

புதிய பென்ஷன் திட்ட பணப்பலனிற்காக 1188 பேர் தவம்
தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பலன் வழங்கப்படவில்லை. இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு விண்ணப்பித்து பணப்பலன் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்தில் சில தகவல்களை பெற்றார். அதன்படி 2016 ஜூன் 22 வரை 1,433 பேர் பணப்பலன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு மட்டுமே பணப்பலன் வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பித்தோரில் 25 சதவீதம் பேருக்கு கூட பணப்பலன் கொடுக்கவில்லை. பணப்பலன் பெற்றோரில் பெரும்பாலானோர் நீதிமன்றங்கள் மூலமே பெற்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் எழுத்துப்பிழை போன்ற சிறு காரணத்திற்கு கூட விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். விதிமுறை இருந்தும் துறை வாரிய பணப்பலன் கேட்டு விண்ணப்பித்தோரின் விபரங்களை தர மறுத்துவிட்டனர், என்றார்.

ALL TRS TN.. Siva.

ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்

ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்
தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக...: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இந்த தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, விருதாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக முடிவு செய்ய வேண்டும். அதன் பின், மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், மாநில அளவில் தேர்வு செய்யப்படுவர். ஆக., 8ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான ஆசிரியர் பட்டியலை, சென்னைக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு : கடந்த ஆண்டு ராதாகிருஷ்ணன் விருது வழங்கியதில் விதிகள் மீறப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏப்., 29ல், ஆசிரியர் சங்கத்தால் வழக்கு தொடரப்பட்டது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட தேர்வு குழு உறுப்பினர்களுக்கே விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டதாக, இந்த வழக்கில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, ராதாகிருஷ்ணன் விருதுக்கு விருதாளர்கள் பட்டியலை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

ALL TRS TN... Siva