ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்
தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக...: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, விருதாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக முடிவு செய்ய வேண்டும். அதன் பின், மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், மாநில அளவில் தேர்வு செய்யப்படுவர். ஆக., 8ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான ஆசிரியர் பட்டியலை, சென்னைக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு : கடந்த ஆண்டு ராதாகிருஷ்ணன் விருது வழங்கியதில் விதிகள் மீறப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏப்., 29ல், ஆசிரியர் சங்கத்தால் வழக்கு தொடரப்பட்டது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட தேர்வு குழு உறுப்பினர்களுக்கே விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டதாக, இந்த வழக்கில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, ராதாகிருஷ்ணன் விருதுக்கு விருதாளர்கள் பட்டியலை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ALL TRS TN... Siva
No comments:
Post a Comment