Powered By Blogger

Friday, 1 July 2016

7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.

7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுந்தந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு எனகூறப்படுகிறது.

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ஊதியஉயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்கு நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-ஆவது ஊதியக் குழுவை கடந்த 2014-ஆம் ஆண்டு அமைத்தது. இந்தக் குழு, 900 பக்கங்களைக் கொண்ட தனது பரிந்துரைகளை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்தஆண்டு நவம்பர் மாதம் அளித்தது.

அதில், இளநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை 14.27 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், ஒட்டுமொத்த ஊதியம் மற்றும் இதர படிகள், ஓய்வூதியத்தை 23.55 சதவீதம் உயர்த்தவும் பரிந்துரைத்திருந்தது. கடந்த 70 ஆண்டுகளில், இது மிகவும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு பரிந்துரையாகும். 



ALL TRS TN... Siva.

No comments:

Post a Comment