Powered By Blogger

Saturday, 16 July 2016

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள்

தொடக்கக்கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை  
   
*தொடக்கக் கல்வி துறை:*

3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு

6.8.16 - நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்

7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு

13.08.16 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்

14.08.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு & இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்

20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

 *பள்ளிக் கல்வித்துறை:*

6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு

7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்

20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு


23.08.16 - உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

24.08.16 - உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்

03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

------------------+++++++++++++++++----------
Teachers Transfer counselling   

*Apply for Tfr-   
 start  july 19/7/16 to 28/7/16
#August Month:
*3/8/16.....Aeeo Tfr,
*4/8/16----Mid HM to Aeeo Tfr,
*6 /8/16. -Mid HM Tfr,To Mid HM Pro & BT Deployment,BT inside union Tfr,BT Promotion,BT Tfr union to union,
*7/8/16---Pri HM Tfr,To Pri HM Pro,
*13/8/16---SGT Surplus,
*14-8-16----+SGT Tfr,
*20/8/16----BT dis to dis Tfr, 
*21/8/16----SGT Dis to Dis Tfr


Dse-Counselling Dates announced:
பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை

20.08.16 PG counselling (Same district).

21.08.16 PG counselling (other district).

22.08.16 PG promotion counselling

27.08.16 to 29.08.16 BT Surplus counselling

03.09.16 BT Counselling (Same district)

04.09.16 BT counselling (other district)


ALL TRS TN.. Siva.

23.08..2010 முதல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள TET பட்டதாரி ஆசிரியர்களின் விவரம்

23.08..2010 முதல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள TET பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் ப.க.இயக்குனர் அவர்களால் கோரப்பட்டுள்ளது. 



Friday, 15 July 2016

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்.  


ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்,
அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள், இணையதளங்கள்,ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின், 'வாட்ஸ் ஆப்'களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரே, பொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன், பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, முதலில் ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும், பின், மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும்
கண் பார்வையற்றவர், மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர்களின் துணைவியர், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோயாளி, கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன், மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால், இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன், மனைவி என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள், அதே தகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

தயக்கம் ஏன்? : ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள், கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால், கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு, அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, அதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...


*Master of Education Regular (M.Ed.) 2016-2018* TAMILUNIVERSITY

*Tamil University*

*Admission Notification*

*Master of Education Regular  (M.Ed.) 2016-2018*

* Cost of Application -Rs.600/-

*Eligibility -50% Marks in B.Ed.

*Duration -180 Days(One Academic year)

*Medium of Instruction - Tamil

*Last Date to submit the filled applications- 03.08.16 till 5.30am

*For more details contact 
04362- 227782, 226720 

Click Here
MEd 2016..18 Tamiluniversity





திறனாய்வு தேர்வு: பள்ளி மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்

திறனாய்வு தேர்வு: பள்ளி மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்


விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் அளிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு கட்டணமா ரூ. 5, சேவை கட்டணம் ரூ. 5 என மொத்தம் ரூ. 10 செலுத்த வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு (50 மாணவர், 50 மாணவியர்) ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிப்பு உதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1,000 வழங்கப்படும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கூடாது என்றார் அவர்.

ராணுவத்தில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்

ராணுவத்தில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்


ராமநாதபுரம் சீதக்காதி ஸ்டேடியத்தில் ஆக. 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது.

 தகுதியுள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜூலை 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பிரிவுகளில் ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியானவர்கள் w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌m‌y.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் ஜூலை 17 க்குள் பதிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும். இதே தேதியில் அழைப்புக் கடிதத்தை இணையதளம் வாயிலாக எடுத்து கொள்ளலாம். சான்றிதழ் சரி பார்ப்பு, உடற் தகுதி, மருத்துவ பரிசோதனை, அன்றைய முகாமில் நடைபெறும். மேலும், இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி..குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி..குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு
By ஸ்ரீவில்லிபுத்தூர்

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இளைஞர் நீதிச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் 70 ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

 நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் செயல்பாடுகள், இலவச கட்டாயக் கல்வி உரிமை குறித்து ஆற்றுப்படுத்துநர் அ.ராஜேஷ் விமல்தாஸ், சமூகப் பணியாளர் பொ.கார்த்திகைராஜன் ஆகியோரும், குழந்தைத் தொழிலாளர் குறித்து பாதுகாப்பு அலுவலர் மு.முனியசாமி, புறத் தொடர்புப் பணியாளர் ரா.முத்துலட்சுமி ஆகியோரும் கருத்துரையாற்றினர்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து சமூகப் பணியாளர் ரா.ஜானகி, புறத் தொடர்புப் பணியாளர் ரா.சாந்தி ஆகியோர் பேசினர். பின்னர் குழந்தை பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முடியாமலும், பதவி உயர்வு பெற முடியாமலும் அவதி அடைந்துள்ளனர்.

 விருதுநகர் மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 1170-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அஞ்சல் வழியில் எம்.ஃபில் படிக்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் படிக்கலாம். படிப்பை காரணம் காட்டி அடிக்கடி விடுப்பு கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இணை இயக்குநர் அலுவலகம் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டு வந்தது.   இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் எம்.ஃபில் படிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு மனு அளித்தனர். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலகம் தரப்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், எம்.ஃபில் சேர்ந்ததற்கான சேர்க்கை அட்டை (அட்மிசன் கார்டு), வழிகாட்டியின் ஒப்புதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்பதாக கூறப்படுகிறது. எம்.ஃபில் வழி காட்டி என்பது கடைசி பருவ தேர்வுக்கு முன்னர் தான் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நியமிக்கப்படுவார். எனவே, இதுபோன்ற வழிகாட்டி ஒப்புதல் சான்றிதழ் வாங்க முடியாமல் பலர் அவதி அடைந்துள்ளனர். சில ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலில் வழிகாட்டியிடம் தங்கள் நிலையை கூறி சான்றிதழும் பெற்று வந்துள்ளனர். இந்த ஆசிரியர்களது விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக சென்னையில் உள்ள பணியாளர் தொகுதி இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அலுவலகம் சார்பில், உயர்கல்வி கற்க விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எம்.ஃபில் படிப்புக்கு சேர்ந்து விட்டு, எப்படி விண்ணப்பிக்க அனுமதி கேட்கிறீர்கள் என அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு 17 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி கற்க வேண்டும் என நினைத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, மற்றும் பணப் பலன்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

   இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த 2007 வரை உயர் கல்வி கற்க விரும்பும் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை. தற்போது, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதாலும், முதுகலை ஒரு பாடப் பிரிவில் படித்து விட்டு எம்.ஃபில் வேறு ஒரு பாடப் பிரிவில் சேரக் கூடாது என்பதாலும், கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் தகுதியில்லாத ஆசிரியர்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று செய்யக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளோம். யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றார்.

Thursday, 14 July 2016

B.Ed கற்பித்தல் பயிற்சி பணிபுரியும் நடுநிலைப்பள்ளியில் முழு சம்பளத்தில் பணிபுரியலாம்.

B.Ed  கற்பித்தல் பயிற்சி பணிபுரியும் நடுநிலைப்பள்ளியில்  முழு சம்பளத்தில் பணிபுரியலாம்.



பணிபுரியும் பள்ளியில் விடுப்பு எடுக்காமல் கற்பித்தல் பயிற்சி பெற அனுமதிக்கும் அரசுக் கடிதம்.

பணிபுரியும் பள்ளியில் விடுப்பு எடுக்காமல்
கற்பித்தல் பயிற்சி பெற அனுமதிக்கும் அரசுக் கடிதம்.


Wednesday, 13 July 2016

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என முக்கியமான ஆவணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என முக்கியமான ஆவணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி 


எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.  

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?  

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.  

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.  

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை  

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  

பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டுவேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.  

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

அரசு தாமதம்...காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது ஆசிரியர்கள் சங்கங்கள் அதிருப்தி*💥 :

அரசு தாமதம்...காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது  ஆசிரியர்கள் சங்கங்கள் அதிருப்தி*💥 :

 முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு
காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டது. 


சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என, முதல்வர் ஜெ., உறுதிமொழி அளித்ததால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆய்வு குழு அமைப்பு : கடந்த பிப்.,28ல் அரசு அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில் 6 பேர் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் ஜூன் 30 வரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, முதல்வர் ஜெ., உத்தரவிட்டிருந்தார்.


ஆனால், ஜூலை 10 ஆன பின்பும் இதுவரை அறிக்கை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளது. 

 முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்யும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க 4 மாத காலம் அவகாசம் வழங்கினார். ஆனால், காலம் முடிந்த நிலையிலும் அந்த ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க வில்லை. எனவே உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு நாட்டு வைத்தியம் நாமும் அறிவோம்.

 நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு நாட்டு வைத்தியம் நாமும் அறிவோம்.

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி 

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்  

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு 

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. 
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் குணமாகும்.

ஆசிரியர் *25 ஆண்டு பணிநிறைவு* *அரசு பரிசுத் தொகை ரூ.2000*

*25 ஆண்டு பணிநிறைவு*

*அரசு பரிசுத் தொகை ரூ.2000*

2016 மே 31-க்குள் 
25 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஆசிரியர்கள் அரசு பரிசுத்தொகை ரூ.2000 பெற AEEO-வுக்கு விண்ணப்பம் கொடுக்கவேண்டும்.
மாதிரி விண்ணப்பம் .


பட்டா மாறுதலுக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என உயர்நீதி மன்றம் தீர்ப்பு...!

பட்டா மாறுதலுக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என உயர்நீதி மன்றம் தீர்ப்பு...!
 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 06.02.2015

Coram
THE HONOURABLE Mr.SANJAY KISHAN KAUL, The Chief Justice
and
THE HONOURABLE Dr.JUSTICE S.TAMILVANAN

Writ Petition (MD) No.8250 of 2008
and
M.P.(MD)No.1 of 2018
Consumer Rights Protection Council,
through its Secretary O.Paramasivam,
No.6, Thamukkam Shopping Complex,
Tallakulam, Madurai-2,

Madurai Ditrict.       ... Petitioner

    vs.
1.Tamil Nadu Govt., rep.by
  The Secretary, Revenue Department,
  St.George Forts Building, Chennai.

2.Inspector General of Registration,
  The Registration Department,
  120, Santhome High Road,
  Chennai-4.        ... Respondents

 Writ Petition filed under Article 226 of the Constitution of India,
praying for issuance of a writ of mandamus, directing the respondent No.2 and
his subordinates to forward the application and the fee collected for survey
and patta transfer at the time of registration fo sale deed to 1st respondent
Revenue Offices and respondent No.1 to transfer patta in the name of the
purchaser without obtaining another application and charges.

  
!For Petitioner  : Mr.S.Thamizharasan
For Respondents  : Mr.B.Pugalendhi,
      Spl.Govt.Pleader.
 

:ORDER
(Order of the Court was made by The Hon'ble Chief Justice) The petitioner, claiming to be the Secretary of the Consumer Rights Protection Council, seeks to file the present writ petition, in public interest, on account of the grievance that any transaction for purchase of immovable property of any kind, which are registrable and whereafter patta is required to be issued, the 2nd respondent/Registration Office is collecting charges for patta transfer and even issuing receipts as also for sub- division. It is submitted that thus when the purchaser approaches the revenue authorities, a second set of charges are to be paid.
2.In the counter affidavit, it has been stated that patta transfer application in prescribed form/Registration-II Form No.52, tendered along with documents presented for registration, is forwarded by the Sub- Registrar to the Tahsildar in whose jurisdiction the property is situated and the job of collecting this fee now has been entrusted to the Registration Department as per G.O.Ms.No.916 CT & RE Department, dated 23.08.1984. It is thus submitted that there is no occasion to once again pay the fee to the Revenue Authorities.
3.The aforesaid stand of the respondents thus shows that the requirement is to pay only one set of fee but, the collecting agency for such fee is now the Registration Office. No second set of fee is required to be paid.
4.The petition is accordingly closed. No costs. Connected miscellaneous petition is also closed.


Index:yes/no     (S.K.K.,CJ)     (S.T.,J)
Internet:yes/no.        06.02.2015
gb

       The Hon'ble Chief Justice
        and
          S.TAMILVANAN,J
          gb
To:
1.The Secretary, Revenue Department, Government of Tamil Nadu, St.George Forts Building, Chennai.
2.Inspector General of Registration, The Registration Department, 120, Santhome High Road, Chennai-4.
Order in W.P.(MD)No.8250/2008 and MP(MD)No.1 of 2008 Dated:06.02.2015

2017-18 ஆண்டிற்கான எண் பட்டியல் தயாரிக்க 18.7.16 அன்று கூட்டம்

2017-18 ஆண்டிற்கான எண் பட்டியல் தயாரிக்க 18.7.16 அன்று கூட்டம்


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்- கருணாநிதி....!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்- கருணாநிதி....!
தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை அறவே ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு 
ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது.
Source: tamil.oneindia.com
அரசு ஊழியர்களுக்கு ஜி.பி.எப்
இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஜி.பி.எப். எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு ஜி.பி.எப். கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது 60 சதவிகிதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதம் உள்ள 40 சதவிகிதத் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் எதிர்ப்பு
பழைய பென்ஷன் திட்டத்தின்படி ஒரு அரசு ஊழியருக்கு அவரது பணி அனுபவத்துக்கு ஏற்ப எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லிவிடலாம். ஆனால், புதிய பென்ஷன் திட்டத்தில் இவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. எனவே தான், புதிய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை
அண்மையில் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட, 'ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்' என்ற தலைப்பில் கூறும்போது, 'அ.தி.மு.க. அரசு 1-4-2003 அன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்தத் திட்டத் திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றம் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்திலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

அரசு ஊழியர்கள் போராட்டம்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

110-வது விதியின் கீழ் அறிவிப்பு
இப்போராட்டம் பத்து நாட்கள் நீடித்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, பிப்ரவரி 19-ந் தேதி வெளியிட்ட 110-வது விதியின் கீழான அறிவிப்பில், 'அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும்' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் பத்து நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வல்லுநர் குழு
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாந்தா ஷீலா நாயர் தலைமையில் பிப்ரவரி 26-ந் தேதி குழு அமைக்கப்பட்டு, 4 மாதங்களுக்குள், அதாவது ஜுன் 26-க்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், 'பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வுத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தது.

யாரையும் சந்திக்கவில்லை
ஆனால் இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, சுமார் 5 மாதங்கள் ஆகியும், இன்னும் அந்தக் குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்பு கள் அளித்த மனுக்களை மட்டும் கடந்த ஏப்ரல், ஜுன் மாதங்களில் இந்தக் குழு பெற்றுள்ளது.
 
சந்தேகம் எழுந்துள்ளது
குழு அரசாணையில் தெரிவித்தவாறு நான்கு மாதங்களுக்குள் அறிக்கை எதையும் தாக்கல் செய்யாததால், அரசு ஊழியர்கள் மத்தியில், அவ்வாறு வல்லுநர் குழு அமைக்கப்பட்டதே, அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் தானோ என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக் கெடு நீடிக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தாஷீலா நாயர் முதல் அமைச்சரின் தனிப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

ஏமாற்றத்தில் அரசு அலுவலர்கள்
அரசு வல்லுநர் குழு அமைத்ததே, இந்தப் பிரச்சினையை தள்ளிப் போட வேண்டும் என்பதற்காகத்தான் என்று அரசு அலுவலர்கள் கருதுகிறார்கள். புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக ஓய்வூதிய ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கூடப் போடவில்லை. இந்தச் செய்திகளைக் கேள்விப்படும் அரசு அலுவலர்கள் மிகுந்த கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள்.

வலியுறுத்தல்
எனவே தமிழக ஆட்சியினர், குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா, அரசு அலுவலர்களின் இந்த முக்கிய பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை அறவே ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடருவதற்கான அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


பழைய பென்சன் திட்ட ஆய்வு வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் எப்போது?- கெடு முடிந்ததால் ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்

பழைய பென்சன் திட்ட ஆய்வு வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் எப்போது?- கெடு முடிந்ததால் ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, 5 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர் கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

புதிய பென்சன் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக் கில் இந்த தொகை வரவு வைக் கப்படுகிறது.

இவ்வாறு சிபிஎஃப் கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பழைய பென்சன் திட்டத்தில் ஒரு அரசு ஊழியருக்கு அவரது பணி அனுபவத்துக்கு ஏற்ப எவ்வளவு பென்சன் கிடைக்கும் என்பதை துல்லியமாக சொல்லிவிடலாம். ஆனால், புதிய பென்சன் திட்டத் தில் இவ்வளவு பென்சன் கிடைக் கும் என்ற உத்தரவாதம் கிடை யாது. எனவேதான், புதிய பென் சன் திட்டத்தை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 10 நாட்கள் நீடித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-என் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் 10 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வல்லுநர் குழு

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் மாநில திட்டக்குழு துணைத் தலைவருமான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் பிப்ரவரி 26-ம் தேதி தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளியல் பள்ளி பேராசிரியர்கள் கே.வி.பார்த்த சாரதி, லலிதா சுப்ரமணியம் ஆகி யோர் உறுப்பினர்களாகவும், திட் டம், மேம்பாடு சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளர் எஸ்.கிருஷ் ணன் உறுப்பினர் செயலாள ராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அரசாணை (எண் 65) 26.2.2016 அன்று வெளியிடப்பட்டது. இந்த வல்லுநர் குழு, அரசு ஊழி யர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை தொடர்வது குறித்து ஆராயும் என்றும், தனது அறிக் கையை 4 மாதங்களுக்குள் (ஜூன் 26-க்குள்) சமர்ப்பிக்கும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டது.

ஆனால், வல்லுநர் குழு அமைக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் அளித்த மனுக்களை மட்டும் கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் பெற்றுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பி.பிரெ டெரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டி ருந்த விளக்கம் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக் கெடு ஜூன் 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை அரசு ஊழி யர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி களை வல்லுநர் குழு சந்திக்காதது அவர்களை அதிர்ச்சியும் ஏமாற்ற மும் அடையச் செய்துள்ளது.


வல்லுநர் குழு அமைத்தது, உண்மையிலேயே அரசு ஊழி யர்களுக்கு பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியா அல்லது அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஏற்பாடா என்று அரசு ஊழியர்கள் மத்தியில் ஐயம் எழுந்துள்ளது.

வல்லுநர் குழு அறிக்கை சமர்ப் பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக் கப்பட்டதா, இல்லையா என்பது குறித்தும் அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதற் கிடையே, வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தா ஷீலா நாயர், அண்மையில் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக் கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

அரசே அறிவிக்கலாம்

இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியனிடம் கேட்ட போது, "வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பித்ததா, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதா என்பது குறித்து ஒன்றுமே தெரியவில்லை.

அரசு வல்லுநர் குழு அமைத்ததே இந்தப் பிரச்சினையை தள்ளிப்போட வேண்டும் என்பதற்காகத்தான். புதிய பென்சன் திட்டம் தொடர்பாக ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம் பாட்டு ஆணையத்திடம் (பிஎப்ஆர்டிஏ) தமிழக அரசு இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட போட வில்லை.

அதனால், அரசு ஊழியர் களிடமிருந்து பிடித்தம் செய்யப் பட்ட தொகை அந்த அமைப்பிடம் இதுவரை செலுத்தப்படவில்லை. எனவே, தமிழக அரசு நினைத்தால் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அறிவித்துவிடலாம்" என்றார்.

மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி "பாஸ்வேர்ட்" நினைவில் வைக்க வேண்டாம்.

இனி "பாஸ்வேர்ட்" நினைவில் வைக்க வேண்டாம்.

மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனபடும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன. 


இனி பாஸ்வேர்ட் முறைக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் கைரேகையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் முறையை கொண்டு வர முடிவு செய்துள்ளன. பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர் பற்றிய சில தகவல்களை சேகரித்து வைக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. உலகம் முழுவதிலும் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும், ஒருவருக்கு பல வங்கிகளில் வங்கி கணக்கு இருப்பதால் பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்வதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், பாதுகாப்பான பணவர்த்தனையை மேற்கொள்ளவும் இந்த முறையை அறிமுகம் செய்ய வங்கிகள் தீர்மானித்துள்ளன.

இதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஐசிஐசிஐ வங்கி, டிசிபி உள்ளிட்ட நிதித்துறை அமைப்புக்கள் ஆய்வு செய்து வருகின்றன.  இதன் முதல்கட்டமாக மொபைல் பேங்கிங்கில் மட்டுமின்றி பயோமெட்ரிக் முறையில் இயங்கும் ஏடிஎம் இயந்திரத்தை டிசிபி வங்கி பெங்களூருவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, பின் நம்பர் இல்லாமல் பணம் பெற முடியும்.

Tuesday, 12 July 2016

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம்

#காமராஜரைப் பற்றிய 111 அரிய  தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம்


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்
போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்
சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்
ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட
பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,
நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற
மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்
சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில
தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்
காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து
போய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,
திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி
கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்
உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக
சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக
ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்
பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட
காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்
காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.
எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்
கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்
அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற
ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்
பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட
சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.
கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''
வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்
மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில்
பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய
தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்
இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை
ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து
வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்
"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை
சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்
அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு
விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்
கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்
ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்
வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்
தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா
வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை
ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை
பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.
அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234
பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்
பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்
8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே
காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை
வைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத
கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்
எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.
இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு
அத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்
முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்
பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்
சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி
இருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்
ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி
சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்
ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல
திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.
"மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்
இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க
காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா
காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்
இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது
குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,
4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்
கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து
போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்
பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய
உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே
பயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை
குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்
மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே
போட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.
`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்
இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்
என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.
பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை
பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,
இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்
ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்
சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று செய்து விட மாட்டார். நிதானமாக
யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த
செயலை எக்காரணம் கொண்டும் செய்து
முடிக்காமல் விட மாட்டார். 
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்
கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்
வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்
தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண
கிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்
உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,
நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்
சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்
காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'
என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்
`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை
முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை
காமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்
வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,
இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்
பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்
பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்
இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு
விட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி
உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,
ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு
விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்
விடுத்தன.
 45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்
சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,
செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா
போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்
காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்
முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை
மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக
1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து
வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்
ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள
`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு
நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்
கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்
தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ
வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா
வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற
பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ
கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்
தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி
ஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,
குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி
முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்
தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை
கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்
போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு
பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்
சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்
ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்
விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்
எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு
வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'
என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு
கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு
டிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு
சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்
`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-
ல் சேர்ந்தார்.  
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்
உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்
காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி
பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்
கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்
நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக
இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்
காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு
நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய
மூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்
1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்
கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்
சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்
அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை
செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்
திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்
மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்
பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்
ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்
பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு
பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்
திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,
செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்
தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே
இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி
வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,
தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்
இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.
விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே
முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்
மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி
காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"
எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில
்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட
போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய
செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).
நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. 
நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக
எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்
நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்
பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்
செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்
பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,
முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய
போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்
காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்
ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு
இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து
அனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்
கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்
காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு
நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்
தலையைவெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காம
ராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.
சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்
சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற
மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று
தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'
என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்
காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது. 
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்
காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக
தமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்
மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,
`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து
இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா
இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்
வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.
என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்
பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு
கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்
கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்
ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது
தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்
சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை
நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி
ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை
மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான
அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை
செய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு
போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து
விடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை
சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படு
வதையோ அவரால் பொறுத்துக் கொள்ள
முடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக
எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்
கொண்டவர் காமராஜர்.
96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்
முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்
`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி
அனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு
எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்
பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்
கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க
முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்
சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே
பிடிக்காது அவருக்கு.  
100. சொற்களை வீணாகச் செலவழிக்க
மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்
சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய
செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.
ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்
ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில்
என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்
முக்கியமானவர் என்பதெல்லாம்
அவருக்குத்தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.
தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்
தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாக
இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.
உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்
முழுமையாகப்பெற்றிருந்தார்.
அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பா
க வழிநடத்த முடிந்தது.
106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி
விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்
அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை
மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்
கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு
திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்
எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்
அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.
தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்
இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.
அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான
வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு
விடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்
உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்
செல்வார். 

ALL TRS TN... Siva.

SABL - PRIMARY CRC DATE POSTPONED FROM 16.07.2016 TO 23.07.2016 - SPD PROCEEDING....

SABL - PRIMARY CRC DATE POSTPONED FROM 16.07.2016 TO 23.07.2016 - SPD PROCEEDING....
SABL - PRIMARY CRC DATE POSTPONED FROM 16.07.2016 TO 23.07.2016


TET:ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு.

TET:ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு.
தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 2010 ஆக.23ம் தேதிக்குப் பிறகு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முறையான ஒப்புதலுடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 
2016 நவ.23ம் தேதியுடன் இவர்களது பணி நிபந்தனைக்காலம் முடிவடைகிறது. இதனால் தங்கள் வேலை பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.இவர்கள் கடந்த 6 ஆண்டுகளில் தொடர்ந்து சிறந்த பணியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நிபந்தனை ஆசிரியை-ஆசிரியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.இம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பணிக்கான தகுதிகாண் பருவமான 2 ஆண்டுகளையும் கடந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அரசு ஒரு தவிர்ப்பாணை வெளியிட்டால் போதும். இதனால் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்படப் போவதில்லை. யாருடைய பணி வாய்ப்புக்கும் இடையூறு இல்லாமல் தற்போதுள்ள நிலையிலேயே எங்களது பணியை அச்சமின்றி தொடரவும்,குழப்பங்கள் நீங்கி தெளிவடையவும் உதவும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தகுதித்தேர்வு எழுதும் மனநிலையில் நாங்கள் நிச்சயமாக இல்லை.அப்படியே எழுதினாலும் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வினாத்தாளை பொறுத்தவரை, பட்டப்படிப்பில் அவரவர் படித்த பிரதான பாடப்பிரிவில் இருந்து சுமார் 10 மதிப்பெண்கள் மட்டும் பெறத்தக்க வகையில்தான் வினாக்கள் இடம்பெறுவதாலும், மீதம் 140 மதிப்பெண்களுக்கு பிரதான பாடப்பிரிவுக்கு அப்பாற்பட்ட பகுதியில் இருந்து வினாக்களாக இருப்பதாலும், தேர்ச்சி மதிப்பெண்ணான 90 பெறுவது மிகக்கடினம்.ஒரு ஆசிரியராக தகுதிபெற கல்வியியல் (பி.எட்) பட்டம் என்பதே தகுதிக்குரியதாக இருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு ேதவையில்லை என்றே கருதுகிறோம்.அரசு, இதனை கொள்கை அறிவிப்பாக வெளியிட்டால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பி.எட். பட்டதாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். கோரிக்கைகளை முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஏற்கனவே அனுப்பியும், எங்களது எதிர்பார்ப்பு ஒன்றுகூட கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறவில்லை.தற்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தாங்கள்,

தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து முழுமையாக விலக்கு அளித்துஎங்களை காப்பாற்ற வேண்டும். நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்களுக்கு சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

GPF and Other Provident Funds interest Rates fixed at 8.1%

GPF and Other Provident Funds interest Rates fixed at 8.1%
GPF & similar funds will carry Interest rate @8.1% from July, 2016 to Sep, 2016 – Finance Ministry Resolution
Department of Economic Affairs approves 8.1% interest rate for GPF and other related funds w.e.f. 1st July, 2016 to 30th September, 2016. This rate will be in force w.e.f. 1st July, 2016
(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.No. No.5(l)-B(PD)/2016
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs

(Budget Division)
New Delhi, Dated the 30th June, 2016.
It is announced for general information that during the year 2016-17, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8.1% (Eight point one per cent) w.e.f. 1st July, 2016 to 30th September, 2016. This rate will be in force w.e.f. 1st July, 2016. The funds concerned are:
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The India Ordinance Department Provident Fund.
7. The Indian Ordinance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.

2. Ordered that the Resolution be published in Gazette of India.
(H.K. Srivastav)
Director (Budget)

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.  


*ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

*கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
*வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் அங்கு 6 ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை  தகவல்.


*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமயைாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.

*1-08-2016ன் படி உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்மேற்காெள்ளுதல்.

* பணி நிரவல் *

*பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணிநிரவல் நடைபெறும்.தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தபட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறும்.

*சென்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.

Monday, 11 July 2016

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) முதல் 2 நாள்களுக்கு வேலை 
நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழயர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச். வெங்கடாசலம், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் தலைமை ஆணையருடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தினரும், அரசுடைமை வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் போராட்டத்தால் வங்கிச் செயல்பாடுகள் முழுமையாக பாதிக்கப்படும்.

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம்.


      கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது: 

கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், தேர்ட்சியளவில் சேலம் மாவட்டம், 19-வது இடத்தில் உள்ளது.தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, ஆசிரியர்கள் யாரும் பின்பற்றவில்லை. அன்பாக கூறி கேட்கவில்லை என்பதால், அடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.

உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்ககட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால்,ஆசிரியர்கள் மாணவர்கள் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி என்று விட்டு விட்டனர்.ஆல் பாஸ் என்பதற்க்காக ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, மெமோ வழங்கப்படும்.அதேபோல, பள்ளியிலுள்ள வகுப்பறையை ஆர்வத்துடன் சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும். அதேபோல், தன் அறையில் அமர்ந்திருப்பது மட்டும் தலைமை ஆசிரியர் பணியல்ல. காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகளை கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையில் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.விரவில் கலந்தாய்வு

ஆசிரியர் பொதுமாறுதல் அரசாணை வெள்ளிக்கிழமை (08.07.2016)அன்று கையெழுத்தானது,..!


ஆசிரியர் பொது கலந்தாய்வு,  கலந்தாய்வு அரசாணை, விதிமுறைகள் தயார்...

வெள்ளிக்கிழமை 
கையெழுத்தானது...

 அதிகாரபூர்வ அறிவிப்பு எப்பொழுது வேண்டுமாயிலும் வெளியாகும்...

கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தெகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.கல்வி உதவி தெகை பெற, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ, மாணவியர்கள் எவ்வித நிபந்தனையுமின்றியும், முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அவரவர் பயிலும் கல்வி நிறுவனத்திலோ அல்லது  
  
www.tn.gov.in/bcmbcdept  

என்ற அரசு இணையதளத்தில் பெற்று உரிய சான்றுகளுடன் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை பெற சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேலை நேரத்தில் Aeeo அலுவலகத்தில் ஆசிரியர்கள் வேலை செய்ய தடை -வேலூர் DEEO உத்திரவு.

பள்ளி வேலை நேரத்தில் Aeeo அலுவலகத்தில் ஆசிரியர்கள் வேலை செய்ய தடை -வேலூர் DEEO உத்திரவு.





ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது: கல்வித்துறை உத்தரவு.
ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது என வேலூர்மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணி செய்வதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட கிளை சார்பில் வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதுகுறித்த செய்தியும்  சிறப்புக் கட்டுரையாக பிரசுரமானது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைக் கடிதத்தின் விவரம்:தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கோரிக்கை மனுவில் மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் எவரும் பள்ளி வேலை நேரத்தில் அலுவலகம் வருவதைத் தவிர்க்குமாறும், மேலும், அலுவலகப் பணி மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் மாதனூர் உதவி, கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அந்த செயல்முறைக் கடித்ததின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ALL TRS TN... Siva. 

Health Insurance Card...புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...

புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016

பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பயனர்எண் 
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)

கடவுச்சொல் (password)
பிறந்த தேதி

Saturday, 9 July 2016

மாணவர்கள் மோதலால், தலைமை ஆசிரியர் , 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் ..!

மாணவர்கள் மோதலால், தலைமை ஆசிரியர் , 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் ..!
வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

             திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலுார் 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3ம் தேதி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு, பின் கோஷ்டி மோதலாக மாறியது.

              இதற்கு சம்பந்தமே இல்லாத, செங்கல்பட்டு கலைக்கல்லுாரி மாணவர் கணபதி என்பவர், பிளஸ் 2 மாணவர்கள் மூவரை தாக்கியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கணபதியை கைது செய்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை, ஆசிரியர்கள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இருப்பினும், மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து, நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, 4ம் தேதி, மீண்டும் இருதரப்பு மாணவர்களும், வகுப்புகளை புறக்கணித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால், கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் போலீசார், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இருதரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார், தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மற்ற ஒன்பது ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பொன்.குமார் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!

மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!
மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு
மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதிய கமிஷனில் உள்ளமுரண்பாடுகளை நீக்க வேண்டும்; அடிப்படை ஊதியத்தை, 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டு போராட்ட குழு, ஜூலை, 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.இதனால், அலுவல்கள் தடைபட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உருவாகியது. இந்த நிலையில், மத்திய அரசின் புதிய அறிவிப்பை ஏற்று, நான்கு மாதங்களுக்கு போராட்டத்தை ஒத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர், நேற்று அறிவித்தனர்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: ரயில்வே, பாதுகாப்பு, தபால் மற்றும் வருமான வரி உள்ளிட்ட பல மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த, 33 லட்சம் பேர், தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக இருந்தது. எங்களின் தற்போதைய அடிப்படை ஊதியம், 15 ஆயிரத்து, 750 ரூபாய்; அதை, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, ஊதிய குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், 2,250 ரூபாய் மட்டுமே கூடுதலாக கிடைக்கும்.மத்திய அமைச்சரவை செயலரை சந்தித்து, போராட்ட அறிவிப்பு கடிதத்தை ஜூன், 9ல் கொடுத்தோம். ஜூன், 30ம் தேதி, மத்தியநிதித் துறை, ரயில்வே மற்றும் உள்துறை அமைச்சரை, போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் சந்தித்து பேசினர்.அப்போது, 'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றால், ஒரு கமிட்டியை அமைத்து, அடிப்படை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜூலை, 6ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மீண்டும் சந்தித்து பேசினர். அப்போது, எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.அதை எழுத்து பூர்வமாக தர கேட்டோம். அதை ஏற்ற அவர், 'ஊதிய உயர்வு பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்படும்; நான்கு மாதங்களுக்குள், புதிய ஊதியம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்' என, உறுதி அளித்தார். அதை உறுதி செய்யும் வகையில், நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை ஏற்று, போராட்டத்தை, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார், விரைவில் கலந்தாய்வு நடைபெறும்..!

கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார், விரைவில் கலந்தாய்வு நடைபெறும்..!







பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படும்.





          அதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் நாளில் மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியாற்றத் தொடங்குவர்.இந்த நிலையில் ஆன்லைன் கலந்தாய்வு கடந்த சில ஆண்டுகளாகத் தாமதமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணி மாறுதல் பொது மாறுதல் கலந்தாய்வு இதுவரைநடைபெறவில்லை.



இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:-பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கான பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும், மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் பணியும் பாதிக்கப்படும். எனவே, கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்றார்.



விரைவில் அறிவிப்பு: இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எனவே ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை, காலிப்பணியிட விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகலாம்' என்றனர்.

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் கியாஸ் மானியம் ...!

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் கியாஸ் மானியம் ...!  


வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் கொடுக்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நேரடி மானிய திட்டம்
நாடுமுழுவதும் உள்ள சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கி வருகிறது.

ஆனால், சமையல் கியாஸ் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.அதன் அடிப்படையில், சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் கடந்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் நாடு முழுவதும்அமல்படுத்தப்பட்டது.


இந்த திட்டத்தின்படி, முதலில் வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்க வேண்டும். அதன் பின்னர், அதற்கான மானியத்தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். புதிய உத்தரவு இதற்காக, தங்களது கியாஸ் ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே அளித்துள்ளனர். இதற்கிடையே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் வரை கெடு அதாவது, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் கியாஸ் மானியம் வழங்க வேண்டும் என்றும், ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து, ஆதார் எண் தராத வாடிக்கையாளர்களிடம் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் ஆதார் எண்ணை கேட்டுவருகின்றனர். இந்த மாதம் (ஜூலை) முதல் ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அவர்கள் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டால், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத் தொகையும் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மானியம் ரத்து செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத்தொகை கிடைக்காது. எந்தமாதத்தில் அவர்கள் ஆதார் எண் கொடுக்கிறார்களோ, அதன் அடிப்படையிலேயே மானிய தொகை வரவு வைக்கப்படும்.

 தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 55 லட்சம் பேர் கியாஸ் மானியம் பெறுகிறார்கள். இவர்களில், 60 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் ஆதார் எண்ணை வழங்கவில்லை. இந்த 3 மாதத்திற்குள் இவர்கள் ஆதார்எண்ணை வழங்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்தாகிவிடும்.

பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்...!

பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்...!  


பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை

தகுதியான ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்ய தமிழக அரசு பி.எட் (B.Ed), டி.டி.எட் (D.T.Ed) படித்தவர்கள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கி உள்ளது.


அதனால், தற்போது அரசு ஆசிரியர் ஆவதற்கு பி.எட், டி.டி.எட் மட்டுமே அடிப்படைத் தகுதியாக கருத முடியாது. அதேநேரத்தில், பிளஸ் 2, இள நிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானா லும் பி.எட், டி.டி.எட் படிப்பில் சேரலாம், ஆசிரியராகலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம். அதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

அரசின் இந்த நடவடிக் கையை தனியார் பள்ளி நிர்வாகங் கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதால், ஆசிரியர் பயிற்சி முடித்தும் அரசுப் பள்ளிகளில் பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாற்றுத் துறைகளுக்குச் செல்ல முடியாமல் தனியார் பள்ளிகளில் 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கொத்தடிமைகளைப் போல பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை பார்க்கும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களைவிட, டெட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் எடுக்க வைத்து சாதிக்கின்றனர். அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், வசதியானவர்கள் மற்றும் நடுத்தர மக்கள், தங்கள் குழந்தைகளை கூடுதல் மதிப்பெண், ஆங்கிலக் கல்வி பெற தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து உள்ளது. அதனால், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் கிராமங்கள் வரை பெருக ஆரம்பித்துள்ளதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் ஊதியத்துக்காக கல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், அரசுப் பள்ளி ஆசிரியர் களால் தனியார் பள்ளி ஆசிரியர் களைப்போல் ஏன் சாதிக்க முடிய வில்லை என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஜாகீதா பேகம் கூறும்போது, “பி.எட், டி.டி.எட் சேருவதற்கே தகுதித்தேர்வை அவசியம் நடத்த வேண்டும். ஒருவரை ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்துவிட்டு, அதற்குப் பின் தகுதித் தேர்வு மூலம் அவர் தகுதி பெறவில்லை எனக் கூறுவது அவசியமில்லாதது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பின்லாந்து போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் மேலை நாடுகளில் ஆசிரியராவது கடினமான காரியம். ஆசிரியர் கல்வியில் சேரவே பல படிநிலைகளைத் தாண்ட வேண்டும். நமது நாட்டில் தரமான கல்விச் சூழலை மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

கல்வியில் பின்தங்கிய அரசுப் பள்ளிகள்

ஜாகீதாபேகம் மேலும் கூறும்போது, “சர்வதேச அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை சோதிப்பதற்கு, சர்வதேசக் கூட்டமைப்பு ஒன்று, 74 நாடுகளில் PISA என்ற ஆய்வை நடத்தியது. இதில், இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது” என்றார்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு. 


ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் ராகுல்நாத், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்டங்கள், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகள், அதில் மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விதிகளுக்கு உட்பட்டு ஆய்வுசெய்து அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்து மாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் உத்தரவிட்டார்.

பங்களிப்பு ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ்- கணக்கு முடித்து வழங்குதல்

பங்களிப்பு ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோர் - பணி ஓய்வு/ராஜினாமா/இறப்பு/பணிநீக்கம் பெற்றவர்கள் சார்பாக தொகை கணக்கு முடித்து வழங்குதல் சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்