Powered By Blogger

Wednesday, 13 July 2016

பழைய பென்சன் திட்ட ஆய்வு வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் எப்போது?- கெடு முடிந்ததால் ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்

பழைய பென்சன் திட்ட ஆய்வு வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் எப்போது?- கெடு முடிந்ததால் ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, 5 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர் கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

புதிய பென்சன் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக் கில் இந்த தொகை வரவு வைக் கப்படுகிறது.

இவ்வாறு சிபிஎஃப் கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பழைய பென்சன் திட்டத்தில் ஒரு அரசு ஊழியருக்கு அவரது பணி அனுபவத்துக்கு ஏற்ப எவ்வளவு பென்சன் கிடைக்கும் என்பதை துல்லியமாக சொல்லிவிடலாம். ஆனால், புதிய பென்சன் திட்டத் தில் இவ்வளவு பென்சன் கிடைக் கும் என்ற உத்தரவாதம் கிடை யாது. எனவேதான், புதிய பென் சன் திட்டத்தை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 10 நாட்கள் நீடித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-என் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் 10 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வல்லுநர் குழு

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் மாநில திட்டக்குழு துணைத் தலைவருமான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் பிப்ரவரி 26-ம் தேதி தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளியல் பள்ளி பேராசிரியர்கள் கே.வி.பார்த்த சாரதி, லலிதா சுப்ரமணியம் ஆகி யோர் உறுப்பினர்களாகவும், திட் டம், மேம்பாடு சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளர் எஸ்.கிருஷ் ணன் உறுப்பினர் செயலாள ராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அரசாணை (எண் 65) 26.2.2016 அன்று வெளியிடப்பட்டது. இந்த வல்லுநர் குழு, அரசு ஊழி யர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை தொடர்வது குறித்து ஆராயும் என்றும், தனது அறிக் கையை 4 மாதங்களுக்குள் (ஜூன் 26-க்குள்) சமர்ப்பிக்கும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டது.

ஆனால், வல்லுநர் குழு அமைக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் அளித்த மனுக்களை மட்டும் கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் பெற்றுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பி.பிரெ டெரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டி ருந்த விளக்கம் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக் கெடு ஜூன் 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை அரசு ஊழி யர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி களை வல்லுநர் குழு சந்திக்காதது அவர்களை அதிர்ச்சியும் ஏமாற்ற மும் அடையச் செய்துள்ளது.


வல்லுநர் குழு அமைத்தது, உண்மையிலேயே அரசு ஊழி யர்களுக்கு பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியா அல்லது அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஏற்பாடா என்று அரசு ஊழியர்கள் மத்தியில் ஐயம் எழுந்துள்ளது.

வல்லுநர் குழு அறிக்கை சமர்ப் பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக் கப்பட்டதா, இல்லையா என்பது குறித்தும் அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதற் கிடையே, வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தா ஷீலா நாயர், அண்மையில் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக் கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

அரசே அறிவிக்கலாம்

இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியனிடம் கேட்ட போது, "வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பித்ததா, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதா என்பது குறித்து ஒன்றுமே தெரியவில்லை.

அரசு வல்லுநர் குழு அமைத்ததே இந்தப் பிரச்சினையை தள்ளிப்போட வேண்டும் என்பதற்காகத்தான். புதிய பென்சன் திட்டம் தொடர்பாக ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம் பாட்டு ஆணையத்திடம் (பிஎப்ஆர்டிஏ) தமிழக அரசு இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட போட வில்லை.

அதனால், அரசு ஊழியர் களிடமிருந்து பிடித்தம் செய்யப் பட்ட தொகை அந்த அமைப்பிடம் இதுவரை செலுத்தப்படவில்லை. எனவே, தமிழக அரசு நினைத்தால் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அறிவித்துவிடலாம்" என்றார்.

No comments:

Post a Comment