ராணுவத்தில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்
ராமநாதபுரம் சீதக்காதி ஸ்டேடியத்தில் ஆக. 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது.
தகுதியுள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜூலை 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பிரிவுகளில் ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 17 க்குள் பதிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும். இதே தேதியில் அழைப்புக் கடிதத்தை இணையதளம் வாயிலாக எடுத்து கொள்ளலாம். சான்றிதழ் சரி பார்ப்பு, உடற் தகுதி, மருத்துவ பரிசோதனை, அன்றைய முகாமில் நடைபெறும். மேலும், இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment