Powered By Blogger

Monday, 21 December 2015

உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்

உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்
உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வை சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்.கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் மற்றும் தொழில்ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பு நடத்தும் நெட் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான 2-வது நெட் தகுதித் தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடி உட்பட நாடு முழுவதும் பல்வேறு மையங் களில் நடந்தது. சென்னையில்அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, பேட்ரிசன் கலை அறிவியல் கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, கிண்டி ஐஐடி, அண்ணா ஜெம்ஸ் பார்க் பள்ளி உட்பட 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த மையங்களில் 11 ஆயிரம் பேர் தேர்வெழுதியதாக சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சென்னை மைய ஒருங்கிணைப்பாளர் பி.சுரேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment