Powered By Blogger

Monday, 21 December 2015

24-ல் மிலாடி நபி விடுமுறை..

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment