Powered By Blogger

Saturday, 26 December 2015

தமிழகத்தில் பள்ளிகளில் ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

தமிழகத்தில் பள்ளிகளில் ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 


கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, இரண்டாம் பருவ தேர்வை, ஜன., 18 முதல், 27 வரை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment