96 வகை சிற்றிலக்கியங்கள் - தெரிந்துகொள்வோம்.
1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம்
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - -
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை - -
11. இருபா இருபஃது
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் - வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை -
28. கண்படை நிலை -
29. கலம்பகம் - 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.
36. கைக்கிளை - ஒரு தலைக்காமம.
37. கையறுநிலை - உற்றார் இறந்த
பொழுது வருந்துவது.
38. சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது.
39. சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது.
40. சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து.
41. செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல்.
42. செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம்.
43. தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள்
44. தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள்
45. தண்டக மாலை
46. தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்.
47. தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்.
48. தானை மாலை - கொடிப்படை.
49. தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது.
50. துயிலெடை நிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல்.
51. தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல்.
52. தொகைநிலைச் செய்யுள்
53. நயனப்பத்து - கண்.
54. நவமணி மாலை -
55. நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல்.
56. நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று.
57. நான்மணி மாலை
58. நூற்றந்தாதி
59. நொச்சிமாலை - மதில் காத்தல்.
60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
61. பதிற்றந்தாதி - -
62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
63. பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது.
64. பல்சந்த மாலை
65. பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது.
66. பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள்.
67. பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.
68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள்.
69. புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு.
70. புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க.
71. புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க.
72. பெயர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
73. பெயர் இன்னிசை பாட்டுடைத் தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
74. பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல்.
75. பெருமகிழ்ச்சி மாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு.
76. பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து.
77. போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி.
78. மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண்.
79. மணிமாலை
80. முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது.
81. மும்மணிக்கோவை
82. மும்மணிமாலை
83. மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது.
84. வசந்த மாலை - தென்றல் வருணனை.
85. வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு.
86. வருக்கக் கோவை
87. வருக்க மாலை
88. வளமடல் - மடலேறுதல்.
89. வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல்.
90. வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம்.
91. வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது.
92. விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.
93. விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது.
94. வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல்.
96. வேனில் மாலை - இளவேனில்,
No comments:
Post a Comment