இணையும் கரங்கள்
இனி ஒரு விதி செய்வோம்..
சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு.
மனிதவளத்தை ஒன்றுதிரட்டி பேரிடரிலிருந்து நம்மை நாமே காப்போம்..
தோழர்களே இனிவரும் காலங்களில் விபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படின் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று நம்மால் முடிந்த மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்ய தன்னார்வம் உள்ளவர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஒரு குழுவினை உருவாக்க உள்ளோம்..
இதில் தன்னார்வம் உள்ள தோழர்கள் தங்களின்
மாவட்டம்,
பெயர்,
பணி& பதவி,
கல்லூரி மாணவர் எனில் கல்லூரியின் பெயர்,
வீட்டு முகவரி ,
அலுவலக முகவரி,
தொலைபேசி எண்,
மின்னஞ்சல் முகவரி
போன்ற முழு விபரங்களையும் தெளிவாக குறிப்பிடவும்.
மேலே உள்ளவற்றில் நீல நிறத்தில் உள்ளவற்றிற்கு கட்டாயம் நிரப்புங்கள்...
இந்தக் குழுவில் இணைய மற்றும் விவரங்களை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்...
பதியப்பட்ட விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்...
நான் தஞ்சை மாவட்டத்தின் பேரிடர் மீட்புக் குழுவில் உள்ளேன்..
இந்தக் குழுவில் இணையும் தன்னார்வலர்களுக்கு அவர்களின் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே முதல் உதவி பயிற்சிகள், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் வழங்கி அவர்களைக் கொண்டு அவர்களின் பகுதியில் பேரிடர் மீட்புக் குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்..
இந்தப் பயிற்சியை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆசிரியராக உள்ளவர்கள் பயிற்சிக்கு செல்ல Red cross society முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து அனுமதியும் பெற்றுத்தந்திடுவார்கள்.
இந்தக் குழுவில் இணைபவர்களைக் கொண்டு WhatsApp & facebook-ல் ஒரு குழு உருவாக்கப்படும்.
இந்தக் குழு ஆபத்து காலங்களிலும், உதவி தேவைப்படும் பொழுதும் மட்டுமே உயிர் பெரும். இந்தக் குழுவினை பொழுது போக்கிற்கு பயன்படுத்த அனுமதி இல்லை..
ஆபத்தின் போது அடிக்கும் அலாரமாக மட்டுமே இந்தக் குழுக்கள் இயங்கும்.
தன்னார்வலர்கள் மீட்புப் பணியிலோ, நிவாரணப் பணியிலோ நேரடியாக ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்தியன் ரெட் கிராஸின் மூலம் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக் குழுவினருக்கு என்று தனி அடையாள அட்டை வழங்கப்படும். எனவே அவர்கள் சேவை செய்ய உலக நாடுகள் அனைத்திலும் தனி அங்கீகாரம் உண்டு..
Disaster Response Team Member சேவை செய்ய தடை ஏதும் இல்லை..
முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாகவே கருதுகிறோம்..
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
மேலும் விவரங்களுக்கு நமது http://inaiyumkarangal.blogspot.in/ என்ற இணைய முகவரியில் இணைந்திருங்கள்.
-இவண்
தேவராஜன்,
Cell- 9994101709
பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர்.
தஞ்சாவூர் ரெட் கிராஸ்
No comments:
Post a Comment