Powered By Blogger

Monday, 21 December 2015

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

மக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment