07.08.16 அன்று திருச்சியில் நடைப்பெற்ற
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க*
13வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்:
1.CPS - ஐ கைவிட வலியுறுத்தி *டிசம்பர் - 4* அன்று மாநில அளவில் *CPS ஒழிப்பு பேரணி* மற்றும் மாநாடு சென்னையில் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2.தொடக்கக் கல்வித்துறையில் எவ்வித முன்னறிவிப்பின்றி முறைகேடாக நடைப்பெற்ற *பணி நிரவலை* வன்மையாக கண்டிப்பதோடு இரத்து செய்யவும் கோருதல் மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நடைப்பெறவுள்ள பணி நிரவலை முற்றிலும் கைவிடக் கோருதல்.
3.*சென்ற ஆண்டு பணி நிரவலில் பாதிக்கப்பட்டோர்களுக்கும் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க கோருதல்*.
4.*பகுதி நேர ஆசிரியர்*களை உடனே *பணி நிரந்தரம்* செய்ய கோருதல்.
5.M.Phil உயர்க் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு *G.0.42* ன் படி ஊக்க ஊதியம் வழங்க கோருதல்.
மற்றும் 2009 க்கு பின் MPhil துறை அனுமதியின்றி பயின்றோர்க்கு பின் அனுமதி வழங்க கோருதல்.
மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
*G.D.பாபு*, மாவட்ட செயலாளர், த.ஆ.மு.ச. வேலூர்.
செய்தி:- மு.சிவக்குமார், ப.ஆ
தலைவர், திருப்பத்தூர் வட்டம்
No comments:
Post a Comment