தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்:
துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment