டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் 16ம் தேதி என
அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசிநாள் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிருந்தது. இந்நிலையில் ஏராளமானோர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது.
குரூப் 4 பதவியில் 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. எழுத்து தேர்வு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்(பிணையமற்றது)- 2345 இடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையம்)-121 இடம், வரித்தண்டலர் (கிரேடு 1)- 8 இடம், நில அளவர்- 532 இடம், வரைவாளர்-327 இடம், தட்டச்சர்-1714 இடம், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 404 இடங்கள் உள்ளிட்ட 5,451 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 9ம் தேதி ெவளியிட்டது.
அறிவிப்பு வெளியிட்ட அன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது. விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், குரூப் 4 தேர்வுக்கு பட்டதாரி முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இது வரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment