Powered By Blogger

Thursday, 15 September 2016

புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்வேண்டும் CPS வல்லுநர் குழுவிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக எடுத்து வைத்த கோரிக்கைகள்

நேற்று சென்னையில்  நடைபெற்ற CPS வல்லுநர் குழுவிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக எடுத்து வைத்த கோரிக்கைகள்


புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து  பழைய ஓய்வூதியம் 
வழங்வேண்டும் 

1. GPF சந்தாதாரார் போல் CPS சந்தாதாராரும் எத்தனை முறை வேண்டுமானாலும் லோன் எடுக்கும் வசதி வேண்டும்.
2. 10 சதவீத்திற்கு மேல் CPS சந்தாதாரார் விரும்பும் தொகையை செலுத்தும் வசதி வேண்டும்.
3. ஊதியக்குழு மற்றியமைக்கும் போதும் அகவிலைப்படி உயார்த்தும் போதும் ஓயவூதியம் மாற்றியமைக்க வேண்டும்.
4. அரசு ஊழியார் இறந்தாலோ அல்லது ஓய்வு ஊதியதாரர் இறந்தாலோ குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
5. CPS சந்தா தொகையை பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யக்கூடாது.
6.உயர் மட்ட குழுவில் சி.பி.எஸ்..ல் உள்ள உறுப்பினர் திரு.கு.தியாகராஜன் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

     இவற்றையெல்லாம் செய்வதை விட பழைய ஓய்வூதியத்திட்டத்தையே தொடரவேண்டும் என்றும்  இதனால் அரசுக்கும் சாதகம் அரசு ஊழியர்களுக்கும் நன்மை என ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிலேயே CPS உள்ள தலைவர்  கு.தியகராஜன் வலியுறுத்தி பேசினார். தலைவர்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்.**மாநிலத் தலைமையின் அறிவிப்பு*


 *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்.**மாநிலத் தலைமையின் அறிவிப்பு*
◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼
*கர்நாடக அரசின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து* 
*16/9/2016 அன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் கூட்டுநடவடிக்கையின் சார்பில் நடத்தப்படவுள்ளன*
 *மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு* *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்*தன் முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.*

*தேர்வு காலம் என்பதால்**மாணவ-மாணவிகளின்**கல்வி நலன் கருதி*
 *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கத்தின் செயல்வீரர்கள்*
 *வேலைநிறுத்தத்திற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும்*
*கர்நாடக மாநிலத்தில் நிகழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பங்களுக்கு கடுங்கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும்* 
*TAMS மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள்**சங்கத்தின் வேர்களான* *உறுப்பினர் பெருமக்கள்*
*அனைவரும்* *கருப்புநிற உடை அணிந்தோ* *அல்லது**கருப்பு அடையாளக்குறி (BLACK BADGE) குத்திக்கொண்டோ* 
*வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவையும்*கர்நாடக அரசுக்கு*    *கண்டனத்தையும்* *தெரிவிக்க வேண்டும் என அனைவரையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்*.

இவண்

   *கு.தியாகராஜன், *மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

செய்தி. 
 ALL TRS TN.. Siva.

: 1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.
சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:-
சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்றுஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள்கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

         தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார். 
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

தமிழகத்தில் இன்று பள்ளிகள் செயல்படும் : பள்ளி கல்வித்துறை 


சென்னை: காவரி நீர் பிரச்னைக்காக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படஉள்ளது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், திட்டமிட்ட படி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு:அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாருடன் இணைந்து மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் நாளை கல்லூரிகள் இயங்கும்:தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லூரிகளுக்கு உரிய பாதுகாப்புவழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

Tuesday, 13 September 2016

அண்ணா பல்கலையில் 'மெகா கேம்பஸ்' ! வேலை வாய்ப்பு முகாம்

மெகா கேம்பஸ்' !
அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள, மூன்று இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி வாரத்தில், 'மெகா கேம்பஸ்' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை சார்பில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வகை கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம் 
நடத்தப்படும். இதில், முதல் கட்ட முகாமில், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், தினசரி நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது; பல்வேறு தனியார் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து, இம்மூன்று கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் கட்டமாக, மெகா கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம், இம்மாதம் இறுதி வாரத்தில் நடக்கிறது; இதுகுறித்து, இரு தினங்களுக்கு முன், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும், மூன்று கல்லுாரிகளை சேர்ந்த, இறுதியாண்டு மாணவர்கள் மட்டும், நாளைக்குள் அந்தந்த கல்லுாரி வழியாக, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பின் வேலை அளிக்கப்படும். இந்த முகாமில், இன்போசிஸ், காக்னிசென்ட், டி.சி.எஸ்., ஆகிய, மூன்று நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கின்றன. இதற்கிடையில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, பல்வேறு தனியார் கல்லுாரி மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம், ஏழாவது பருவ தேர்வு முடிந்ததும், நவம்பர் இறுதி வாரத்தில் நடத்தப்படும்; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அந்தந்த தனியார் இன்ஜி., கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி கொள்ளலாம் என்றும், அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை !

ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை ! 

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாயை, கர்நாடகா வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க வேண்டும்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சேலத்தில் நேற்று, சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி, தனராஜ் கூறியதாவது:



தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, செப்., 5 முதல், கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம், ஒரே நாளில் மட்டும், 60க்கும் மேற்பட்ட லாரிகளும், 50க்கும் மேற்பட்ட பஸ்களும், 100க்கும் மேற்பட்ட பிற தமிழக வாகனங்களும், வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டுள்ளன.



பொருட்கள் நாசம் : லாரிகளில் இருந்த பொருட்கள் சாம்பலாகி விட்டன. இன்சூரன்ஸ் மூலம், மிக குறைவான தொகையே கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக உழைத்து சேர்த்த சொத்தை, வன்முறை கும்பல் அழித்து விட்டது. கர்நாடகாவில், வன்முறையை அரசும், போலீசும் வேடிக்கை பார்த்து உள்ளது. கர்நாடகாவில், பஸ்கள், லாரிகள் மட்டுமின்றி, தமிழர்களின் பொருட்கள், உடமைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுஉள்ளன.



நிவாரண தொகை : இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும். வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது, நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

அதேபோல், கர்நாடகா கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள, லாரி, பஸ், வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு முழு நிவாரண தொகை வழங்க, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். கர்நாடகாவில் இதே நிலை தொடரும் பட்சத்தில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், பிற மாநில லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பிற மாநில லாரிகளின் இயக்கத்தையும் நிறுத்துவோம்.கர்நாடகா அரசு, கலவரத்தை தடுத்து நிறுத்தாத பட்சத்தில், அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



இன்று போராட்டம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் முருகன் கூறியதாவது:கர்நாடகாவில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். கர்நாடகாவில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள அத்திப்பள்ளியில், இன்று, காலை, 10:00 மணிக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், மறியல் போராட்டம் நடக்கிறது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, 12 September 2016

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள்

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் 

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 

அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி
அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு
மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக்  கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும்  துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்  போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார். 

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம் 


புதுடில்லி : பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.


நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 8.8 சதவீத வட்டி வழங்க, பி.எப்., அமைப்பு முன் வந்தது; ஆனால், 8.7 சதவீதமாக அதை, நிதி அமைச்சகம் குறைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 8.8 சதவீத வட்டி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான, வட்டி விகிதம் குறித்து தற்போது ஆலோசனை நடக்கிறது. மற்ற சிறு சேமிப்புகளுக்கு இணையாக, பி.எப்., வட்டி விகிதமும் இருக்க வேண்டும் என, நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.அதன்படி, 'நடப்பு நிதியாண்டிற்கு, 8.6 சதவீத வட்டி வழங்கலாம்' என, பி.எப்., அமைப்பும், நிதி அமைச்சகமும் இறுதி செய்துள்ளதாக, நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு

தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு 


ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அந்தந்த பள்ளிகளுக்கான ஆய்வு தேதிகளை, அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், பள்ளிகளில் தயார் நிலையில் இருப்பர். 'இந்த ஆண்டு, முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்' என, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன்

உத்தரவிட்டுள்ளார்.உதவி தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, ஏ.இ.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., குழுவினர், புகார் வரும் பள்ளிகளிலும், மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிலும் திடீர் ஆய்வு நடத்தவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.பல மாவட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளே, கல்வித்தரம் உயராததற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ளது

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.


ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Army Public School (AWES APS)

பணியிடம்: இந்தியா முழுவதும்.

மொத்த காலியிடங்கள்: 8,000

பணி: PGT TGT PRT

ஆசிரியர்தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதயின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2016

தேர்வு நடைறும் தேதி 2016 நவம்பர் 26 மற்றும் 26 தேதிகளில்தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 15.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines_for_candidates.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு ! 

 புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

       இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்திய உள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்திய உள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச்
செயலருக்கும் கடுமையான கண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்து பேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தினார் முதல்வர்.

அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவது சம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச் செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டு கண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

இந்தியாவின் தங்க மகனை வாழ்த்துவோம்.... தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தமிழனை பாராட்டுவோம் .

இந்தியாவின் தங்க மகனை வாழ்த்துவோம்....  தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தமிழனை பாராட்டுவோம் ...தங்க மகன் கடந்து வந்த பாதை ...


#நம்ம_சேலத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்தான் மாரியப்பன். அப்போது அவன் வயது ஐந்து. அந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. ‘டிரைவர் குடிபோதையில்
இருந்ததாக சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன். மகனின் கால் போய் விட்டதே’ என்று சொல்லும் மாரியப்பனின் தாய் காய்கறி விற்றுப் பிழைப்பவர். மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.
கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். ‘ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர்’ என்று சொல்லும் அந்த இளைஞனின் வயது 20.
2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனை சார்ஜ் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்தார். இன்று தங்கப்பதக்கத்துடன் நாட்டையே பெருமைப்பட வைத்து விட்டார். இவர் AVS கல்லூரியில் BBA படித்து வருகிறார்.
தமிழ் நாட்டுக்கு பெருமை 🇮🇳

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை கோரும் படிவம்

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை கோரும் படிவம்


புதிய ஓய்வூதியம் (சி.பி.எஸ்) ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்.

புதிய ஓய்வூதியம் (சி.பி.எஸ்) ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்.


Sunday, 11 September 2016

அறிந்து #கொள்வோம்...ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !

#அறிந்து #கொள்வோம்...ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in

2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* 
SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*

3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். 
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். 
ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.

5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* 
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*
விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். 
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை 


இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிறப்பு சேம நலநிதி பற்றிய சிறு விவரம்(SPF) ,!

சிறப்பு சேம நலநிதி பற்றிய சிறு விவரம்(SPF) ,! 

01.10.2000 மற்றும்  அதற்கு பின் அரசுப் பணியில் பணிபுரியும் பணியாளர்கள்  (SPF-2000) ரூ: 70/-வீதம் கட்டாயம் பிடித்தம் செய்யப்படவேண்டும். (20+50 என பிரித்து பிடிக்கக்கூடாது)



30.09.2000 மற்றும் அதற்கு முன் பணிபுரிபவர்கள் (SPF-1984) ரூ: 20/- வீதம் 148 தவணை கட்டாயம் பிடிக்கப்படவேண்டும். விரும்புவோர் (SPF-2000) ரூ: 50/- வீதம் 01.10.2000 முதல் பிடிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பு !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பு !
11–ந் தேதி (இன்று ) மற்றும் 25–ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

படிவங்களை பெறலாம்

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


1.1.17 அன்றைய தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11.9.16 மற்றும் 25.9.16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் (பொதுவாக பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடம் மாற்றலுக்கான படிவங்களை பெறுவதற்காக இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

காலை 10 மணி முதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இம்முகாம்கள் 18.9.16 மற்றும் 25.9.16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் அலுவலர்கள் 11.9.16 மற்றும் 25.9.16 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்வர்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 10 September 2016

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை! 

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

அக்டோபர் 2ல், காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது

அக்டோபர் 2ல், காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது

நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது. பிளாஸ்டிக்கால் நாள்தோறும் அதிகரித்து வரும் தீமைகளை சொல்லி மாளாது. சுற்றுச்சூழல் கெட்டு மனிதர்கள் மட்டுமின்றி, வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பாலிதீன் குப்பைகளால் பூமிக்குள் நீர் இறங்காமல் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே பாலிதீன் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. 

இருந்த போதிலும் பாலிதீன் பைகள் பயன்பாடு காரணமாக சுற்றுலா தலங்கள் பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகளும் அவற்றை உணவு பொருட்களுடன் சாப்பிடுவதன் மூலம் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பாலிதீன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘‘தேசிய நினைவு சின்னங்கள், அனைத்து சுற்றுலாத்தலங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. 

சுற்றுலாத்தலங்களில் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் கொண்டு செல்ல மட்டும் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். இதை தவிர  சுற்றுலாத்தலங்களில் எந்தவித பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்கள், பைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி முற்றிலுமாக மறுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு எழுந்துள்ளது.


கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!
 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:



காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.

மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர பேசினாம். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.

மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit)*


*மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit)* 

*DEE PROCEEDINGS ந.க.எண்.012448/J3.நாள்:8/9/16_*





TALENT EXAM NEWS: மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

TALENT EXAM NEWS:

மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13இல் தொடங்குகிறது. இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கூறும்போது,


“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.

தகவல்களுக்கு  CLICK HERE.. என்ற இணையத்தைத் தேடலாம்.

மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' !

மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' !
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன்கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' 
விபரம் பெறப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாகவழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழத்தில் 2017 ம் ஆண்டு BE.d சேர்க்கைக்கு விண்ணப்பம் வெளியீடு!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழத்தில் 2017 ம் ஆண்டு BE.d சேர்க்கைக்கு விண்ணப்பம் வெளியீடு! 

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழத்தில் 2017 ம் ஆண்டு BE.d சேர்க்கைக்கு விண்ணப்பம்  

CLICK HERE... https://app.box.com/s/qvubukth7d611ccl664izijgpoztc2ep

டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!! 

அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு, 
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக, "டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.
முதலீட்டாளர்களின் நிதி வளங்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி சார்ந்த பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், கல்விச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில், புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம். அவர்களது விவரப் பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

*இது மிகவும் பயனுள்ள தகவல்.*நம்முடைய ஆவணங்கள் வழங்கும்போது விழிப்புணர்வு தொடர்பான விசயங்கள்..



*இது மிகவும் பயனுள்ள தகவல்.*நம்முடைய ஆவணங்கள் வழங்கும்போது விழிப்புணர்வு தொடர்பான விசயங்கள்..

நாம் தற்போது சிம், இருசக்கர வாகனம், கடன் என எதுவாங்கும் போதும் , இன்னும் எந்த வேலையாக 
இருந்தாலும் நம்முடைய *ஆதார் , ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை என இன்னபிற ஆவணங்களில் , (Self Attest)* - கையெழுத்து இட்டு ஆதாரமாக தருகிறோம்.

நம்முடைய இந்த ஆவணங்களை , தெருவில் நின்று கொண்டு *சிம்* விற்கக் கூடியவர்களிடம் கூட சுய கையெழுத்து இட்டு கொடுத்து விடுகிறோம்.

அந்த ஆவணங்களை பெறக்கூடியவர்கள் அவர்கள் விரும்பியபடி இதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அவர்கள் நம்மிடம் நம் *புகைப்படம்* கேட்டால் அதனையும் கொடுத்து விடுகிறோம்.

நம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களைக் கொண்டு , வேண்டுமானால் பல *சிம்*களை வாங்கலாம். அதனை எதற்கும் பயன்படுத்தலாம்.

சற்று முயற்சி செய்தால் நம் பெயரில் ஒரு வாகனத்தைக் கூட வாங்கி பதிவு செய்து விடலாம்.

இவ்வாறு , நம் பெயரில் வாங்கப்பட்டவைகள் ஒரு வேளை *தீவிரவாத செயல்களுக்கு* பயன்படுத்தப் பட்டால் , *நாம்* தான் *முதல் குற்றவாளி*யாக இந்திய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப் படுவோம்.

*இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு என்ன வழி ?*

இதற்குப் பிறகு நாம் கையெழுத்துப் போடும் போது கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

1. *கையெழுத்து*

2. *தேதி*

3. *கையெழுத்து இடுவதற்கான காரணம்.*

4. *இதனைத் தவிர்த்து வேறு எதற்கும் இது செல்லத்தக்கது அல்ல.*

இப்படி நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் அதனை கொடுப்பதற்கான காரணத்தையும் தேதியையும் எழுதி கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும்.

இதனை பிறருக்கு கூறுவது அவர்களை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற வழிவகுக்கும்.

*தகவல் பதிவு: ALL TRS TN... Siva.*

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கல்விக்கொள்கை* ஒரு பார்வை..

*புதிய கல்விக்கொள்கை*

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.

4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.

5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.

6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.

8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.

9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.

10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.

11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B  என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும். 

12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B  எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.

13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.

14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.

17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும். 

18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.

19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.

20. ஆசிரியர்களைக்  கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.

22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.

23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.

Friday, 9 September 2016

*NHIS-2016திட்டத்தில் புதிய அட்டை பெற*

*NHIS-2016திட்டத்தில் புதிய அட்டை பெற* 

NHIS-2016 திட்டத்தில் புதிய அட்டை பெற பழைய 2012 ல் பெற்ற NHIS அட்டையின் எண்ணை பதிவு செய்து சந்தாத்தாரரின் பிறந்த தேதியை பதிவிடவும் 

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று 

'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது. 

'தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JACTTO) _பழைய பென்ஷன் திட்டம்_தொடர்பாக (15.9.2016)அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது

தமிழக அரசு - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JACTTO) _பழைய பென்ஷன் திட்டம்_தொடர்பாக (15.9.2016)அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது


பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?

பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?

'வாட்ஸ் ஆப்' வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை பயன்படுத்தப் போவதாக, அந்த நிறுவனத்தை வாங்கியிருக்கும், 'பேஸ்புக்' நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதனால், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோர், தங்களது அந்தரங்க விஷயங்கள், பேஸ்புக்கில் பகிரப்படுமோ என கவலை அடைந்துள்ளனர்.


உலகில், 'வாட்ஸ் ஆப்' செயலியை, 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதை, சில ஆண்டுகளுக்கு முன், சமூக வலைத்தள நிறுவனமான, 'பேஸ்புக்' வாங்கியது; தற்போது, திடீரென ஒரு அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள், பேஸ்புக்கையும் பயன்படுத்துபவராக இருந்தால், அவர்களது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட விபரங்கள், பேஸ்புக்குடன் பகிரப்படும்' என்பதே அது. அதனால், தாங்கள் அனுப்பும் தகவல்கள், படம், வீடியோக்கள் கசிந்து விடுமோ என, 'நெட்டிசன்'கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.


இதுபோன்றவர்கள், வாட்ஸ் ஆப்பில் உள்ள, 'செட்டிங்ஸ்' வழியாக, 'அக்கவுன்ட்' பகுதிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றதும், 'ஷேர் மை அக்கவுன்ட்' என்ற வாசகமும், அதற்கு நேர் எதிரெ சிறிய பெட்டியும் இருக்கும். அதில், 'டிக்' செய்யப்பட்டு இருக்கும்; அந்த, 'டிக்'ஐ நீக்கியதும், வேறோர் திரை தோன்றும். அதில், 'உங்கள் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமா' என கேட்கப்பட்டு இருக்கும்; அதற்கு, 'கேன்சல், டோன்ட் ஷேர்' என, இரு, 'சாய்ஸ்' தரப்பட்டுள்ளது. 'டோன்ட் ஷேர்' எனப்படும், 'பகிர வேண்டாம்' என்ற வார்த்தையை, 'செலக்ட்' செய்தால் போதும்; உங்கள் விபரங்கள், பேஸ்புக்குடன் பரிமாறப்படாது.

உள்ளாட்சி தேர்தலில் அதிகாரிகள் 🍏 நியமனம் செய்வது குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்!!



🍎உள்ளாட்சி தேர்தலில் அதிகாரிகள் .... நியமனம் செய்வது குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்!!



கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு
மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்து உள்ளார் 

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம் 

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர,
'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.
அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது. இதற்கான கமிட்டி, விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2012ல், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையே அறிவிப்பதா அல்லது, புதிய அம்சங்களை சேர்ப்பதா; புதிதாக பாடத்திட்டம் ஏற்படுத்த, கமிட்டி அமைப்பதா என, பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

'மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, அல்லது அதைவிட தரம் உயர்ந்த பாடத்திட்டம் கொண்டு வர, முதல்வர் விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்' என்று, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''எந்த அளவுக்கு பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியும். எனவே, கமிட்டியில் அவர்களை சேர்க்க வேண்டும்,'' என்றார்.

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு 100 சதவீத முத்திரைத்தாள் கட்டணத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றார். 

CPS ரத்து செய்ய வல்லுநர்குழுவில் கருத்து பரிமாற்றம் அழைப்புக்கடிதம்...

CPS ரத்து செய்ய வல்லுநர்குழுவில் கருத்து பரிமாற்றம் அழைப்புக்கடிதம்..


Thursday, 8 September 2016

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!


பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படை விதிகள்...

பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படை விதிகள்...



தற்காலிக பதவி உயர்வு உரிமை விடல் அடிப்படை விதிகள்!!

தற்காலிக பதவி உயர்வு உரிமை விடல் அடிப்படை விதிகள்!!



போனஸ் ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் குறித்து அடிப்படை விதிகள்..

போனஸ் ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் குறித்து அடிப்படை விதிகள்..


அக்.,24க்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் !

அக்.,24க்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் !
அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.





2011 மக்கள்தொகை, சுழற்சிமுறை, இடஒதுக்கீடு, தொகுதி வரையறை ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என திமுக மற்றும் பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மாநில தேர்தல் கமிஷன் பதில் அளிக்க ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில் இன்று ஐகோர்ட்டில் மாநில தேர்தல் கமிஷன் அளித்த பதிலில், வரும் அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் செப்டம்பர் 3வது வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தொகுதி வரையறை உடனடியாக அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி !

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி ! 

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி மாநிலங் களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியதாவது:
நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர் பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்ப மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி வருகிறேன்.

அத்துடன் அனைத்து மாநிலங் களையும் சேர்ந்த கல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டை விரை வில் நடத்த உள்ளோம். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்து முக்கியமாக விவா தித்து முடிவெடுக்க திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இதுகுறி்த்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவா கவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத் தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில் காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம் தீவிரமாக உள்ளது’’ என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் 16ம் தேதி என 
அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசிநாள் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிருந்தது. இந்நிலையில் ஏராளமானோர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது.

குரூப் 4 பதவியில் 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. எழுத்து தேர்வு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்(பிணையமற்றது)- 2345 இடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையம்)-121 இடம், வரித்தண்டலர் (கிரேடு 1)- 8 இடம், நில அளவர்- 532 இடம், வரைவாளர்-327 இடம், தட்டச்சர்-1714 இடம், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 404 இடங்கள் உள்ளிட்ட 5,451 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 9ம் தேதி ெவளியிட்டது.

அறிவிப்பு வெளியிட்ட அன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது. விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், குரூப் 4 தேர்வுக்கு பட்டதாரி முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இது வரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வு

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வு
துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD. 

7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: !

7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: ! 

சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  ‘’கடந்த 25.7.16 அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. இதில்


ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்த நேரத்தில் மக்கள் பிரச்சனைகளை நாங்கள் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் நாங்கள் வெளிநடப்பு செய்து எங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்திருக்கிறோம்.

மீண்டும் சபைக்கு வந்து மக்கள் பிரச்சனைகளை பேசி இருக்கிறோம். காரசார விவாதங்கள் நடைபெற்றிக்கின்றன. தனிப்பட்ட வி‌ஷயங்களை பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அமைச்சர்கள் குறுக்கீடு செய்வதும் விளக்கம் அளிப்பதும் இவர்கள் உரிமை. என்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் தந்திருந்தால் அரசுக்கு பயன்தரும் மக்கள் பிரச்சனைகளை பேசி இருப்போம்.

இந்த முறை அதிக வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காவிட்டாலும், அடுத்து நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எங்களுக்கு அதிக வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் மக்கள் நலனுக்காகவே உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு வருகிறார்கள். இருதரப்பு உறுப்பினர்களும் சேர்ந்து மக்களுக்கு நல்லவற்றை செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அதை எங்கள் கட்சி துணைத்தலைவர் ஆதரித்து பேசினார்.  மாநில அரசுக்குரிய உரிமைகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ள கூடாது என்ற முதலமைச்சரின் கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. மாநில அரசின் ஆலோசனையுடன் புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.

தமிழ்நாட்டில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி மனித உரிமை ஆணையம் கருத்து தெரிவித்து உள்ளது. இனி தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் நடைபெறாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை தமிழர்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியத்தை பழைய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள 7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு உயர் அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 84 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை நம்பி காத்திருக்கிறார்கள். எனவே இந்த தேர்வாணையத்தில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் வெளிப்படையான முறையில் நியமிக்கப்பட வேண்டும்.

11 லட்சம் கோடி முதலீட்டை எதிர்பார்க்கும் தொலைநோக்கு திட்டம் 2023 முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதை நியமிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மாநில தகவல் உரிமை சட்ட ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று பேசினார்.

Wednesday, 7 September 2016

மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் ,அரசு உத்தரவு !

மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் ,அரசு உத்தரவு !


NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற ???

NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற ??? 

NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற பழைய 2012 ல் பெற்ற NHIS அட்டையின் எண்ணை பதிவு செய்து  ,சந்தாத்தாரரின் பிறந்த தேதியை பதிவிடவும் 

http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx

தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் தலைமைப்பண்பு பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - 2016-17 கல்வியாண்டிற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி நடத்துதல் சார்பு
.(பயிற்சி நாள் மாவட்ட அளவில் - 1/11/2016 to5/11/2016 & 7/11/2016 to 11/11/2016 வரை)நாள்:26/8/16,இயக்குநர் செயல்முறைகள்.  


PLI, RPLI ஊதியத்தில் பிடித்தம் செய்பவர்களுக்கு சேவைக்கட்டணம் விவரம்

PLI, RPLI ஊதியத்தில் பிடித்தம் செய்பவர்களுக்கு  மேற்காணும் 👆👆👆👆பட்டியல் படி சேவைக்கட்டணம் சேர்த்து பிடித்தம் செய்யப்படுகிறது. 👆👆👆


Tuesday, 6 September 2016

CPS - ACCOUNT STATEMENT, ALLOTMENT LETTER, MISSING CREDIT, NOMINEE DETAILS PUBLISHED ONLINE

CPS - ACCOUNT STATEMENT, ALLOTMENT LETTER, MISSING CREDIT, NOMINEE DETAILS PUBLISHED ONLINE 

CLICK HERE CPS - ACCOUNT STATEMENT, ALLOTMENT LETTER, MISSING CREDIT, NOMINEE DETAILS...

உயர்கல்வி தேர்வு எழுத தற்செயல் விடுப்பை துய்க்கலாமா - RTI

உயர்கல்வி தேர்வு எழுத தற்செயல் விடுப்பை துய்க்கலாமா - RTI



Sunday, 4 September 2016

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி  

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க
அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்பு களில் மற்ற முழுநேரப் பல்கலைக் கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள் ஆய்வு செய் யும் பாடங்களை ஒட்டி மூன்று யூனிட் அளவிலாக பாட வகுப்பு களும் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்தி அதில் வெற்றி பின்னரே ஆய்வு களை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக் படித்த மாணவர் களுக்கான ஆய்வு மற்றும் தொழில் வகுப்புகள் கொண்ட பாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல், மொழிப் பாடங்கள் மற்றும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில் பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள் உள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும் மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போது திறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்து வந்தது. இந்தப் புகார் களை ஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு 2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப் படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப் படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டு ஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

Annamalai University Results DDE 2016 published !

Annamalai University Results DDE 2016 published !
Annamalai University Results DDE 2016 published 

 https://www.annamalaiuniversity.ac.in/dde/get_number.php

21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்

21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி, வருவாய், பொது-சமூகப் பிரிவு என தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்காய்வு, தணிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பொது-சமூகப் பிரிவு கணக்காய்வு, தணிக்கை அறிக்கையில் மடிக் கணினி விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் விவரம்:-

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ""விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல்'' எனும் திட்டத்தை ஜூன் 2011-இல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதா, மடிக் கணினிகளைப் பயன்படுத்த போதுமான ஆதரவு சேவைகள் அளிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 21,90,683 மடிக்கணினிகளில் 21,69,196 மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டதுபோக, 21,487 மடிக்கணினிகள் மாவட்டங்களின் வசம் உள்ளன.

கல்வி ஆண்டு முடிந்த பின்னர்...தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ("எல்காட்') நிதிகள் தாமதமாக விடுவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மடிக் கணினிகள் கல்வி ஆண்டு முடிந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக இருந்தும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த மடிக் கணினிகள் திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்பு, மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்

பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்
திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.


திருவள்ளூரில் முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுடன் கலந்தாய்வு நடந்து முடிந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:

சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்குமாறு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை 4.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படாததால், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைக்காததால், தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதற்கான கடிதமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இருப்பினும், தகவலறிந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை காலை அங்கு வந்தனர்.

இதில், பாட வாரியாக கலந்தாய்வில், ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

பள்ளிகள் அமைந்திருக்கும் இடம், பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிந்து கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நேரம் வழங்கப்படவில்லை.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அளித்திருந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலானவை தவறாக இருந்தன.

பணியில் சேர்ந்த தேதி, தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி வெவ்வேறாக இருந்தும், பணியில் சேர்ந்த தேதியை தற்போது பள்ளியில் சேர்ந்த தேதியாக தவறுதலாக தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

இந்த பணி நிரவலில் வெளியகரம், வெள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போரூர், திருமுல்லைவாயல், பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செல்வாக்குள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துகொண்டு, தேவையான பள்ளிக்கு மாற்றுவதற்கான ஆணையை திங்கள்கிழமை வாங்கிச் சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இக்கலந்தாய்வு குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் பணி நிரவலை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

32 மாவட்டங்களில் உடற்கல்வி அதிகாரிகள் இல்லை

32 மாவட்டங்களில் உடற்கல்வி அதிகாரிகள் இல்லை
தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், பள்ளிக்கல்வி சார்ந்த, விளையாட்டு துறையில், உடற்கல்வி அதிகாரி பணி இடங்கள் காலியாக உள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள், போட்டிகளில் பின்தங்கி உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில், 32 மாவட்டங்களிலும், உடற்கல்வி இயக்குனர் என்ற, மாவட்ட விளையாட்டு பிரிவு அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில், அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் விளையாட்டு பிரிவுகள் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் வசூலிக்கும்
நிதியை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு தயாராக, அரசு, ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்குகிறது. இந்த நிதி, மாவட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். பள்ளிக்கல்வி, விளையாட்டு பிரிவில் அடுத்தடுத்து காலியான, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணி இடங்கள், நிரப்பப்படாததால், 32 மாவட்டங்களிலும்,
இந்த இடங்கள் காலியாக உள்ளன.அரசின் விளையாட்டு நிதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தரப்படுகிறது. இந்த நிதி, அந்த அதிகாரிகளால், முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதுகுறித்து, விசாரிப்பதோடு, காலியாக மாவட்ட விளையாட்டு அதிகாரி இடங்களையும் நிரப்ப வேண்டும் என, விளையாட்டு பிரிவு மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்க பொதுச்செயலர் தேவிசெல்வம் கூறுகையில், ''மாவட்ட அளவில், விளையாட்டு பிரிவுக்கு, தனி அதிகாரி பணியிடங்களை நிரப்பினால், முறைகேடுகள் நடக்காது. நீண்ட நாட்களாக, இந்த இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் புகாரில், உண்மை உள்ளதா என, விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்
தேனி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்ற தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், 770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா, புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள இணையதள வசதியை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறியதாவது: தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதள பயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாணவர்கள் பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில் பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 3 September 2016

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களை வாழ்த்தும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

*டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களை வாழ்த்தும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

மாதா,பிதா,குரு,தெயவம் என்பதற்கேற்ப ஆசிரியர்கள் பணி உன்னத பணி. அப்பணியை சிறப்பாக செய்த ஆசிரியர்களுக்கு,
ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ் படைத்தவர்! அவர் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆம் நாள், "ஆசிரியர் தினம்" என ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் விருது பெரும் அனைத்து ஆசிரியர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

 *அனைவரையும் வாழ்த்துகிறோம்.* 

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*  மற்றும்

மாநில,மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாகவும்,
அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*அன்புடன்*

*கு.தியாகராஜன்,* மாநில தலைவர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

*ஜி.டி.பாபு,* மாவட்ட செயலர், வேலூர் மாவட்டம்.

*மு.சிவக்குமார், ப.ஆ*
தலைவர்,திருப்பத்தூர்.

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

உடன்
*ALL TRS TN... Siva*

தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016

தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016.


தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியல்!

வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியல்!  

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்
வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 13 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 33 ஆயிரத்து 954 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 4,720 பேர் உள்ளனர்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ‘வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பங்களை பொதுமக்கள் தொடர்ந்து அளிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார். இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 11 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்ற உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்  

தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.

பி.எட்., படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில்
கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயே, அவரவர் பணி புரியும் நடுநிலை பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன.
கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அவரவர் பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்; தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது:
கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, பள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் !

திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் !
முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.

மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதல்வர் கடந்த பிப்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.


அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என நான்கு லட்சம் ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் நலனை கருதி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் !

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் !


Thursday, 1 September 2016

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும் சென்னையில் கூடுதலாக 100 சிற்றுந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

CPS Annual Accounts Statement 2015-2016 released totay 1.9.2016& Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்*பூர்த்தி செய்து வழங்கவேண்டும்

CPS Annual Accounts Statement 2015-2016 released totay 1.9.2016. plz download through the following website - http://alltrstnsiva.blogspot.com  there cps and date birth. to login. then choose year 2015-16 to get your cps slip for the year 2015-16.

CLICK HERE... 


*CPS MISSING CREDITS*

*நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்*

*விடுபட்டமாதங்களின் தொகையை பதிவு செய்து தங்களது DDO/AEEO சமர்ப்பிக்க வேண்டும் அவர்கள் பதிவு செய்து;FORWARD செய்து  MISSING CREDIT சரிசெய்யப்படும்*