திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் !
முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.
மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதல்வர் கடந்த பிப்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என நான்கு லட்சம் ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் நலனை கருதி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment