Powered By Blogger

Sunday, 24 July 2016

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துபொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளா?, கல்வித்தரம் குறைவா? அல்லது வே்லை வாய்ப்பின்மையா? என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 523 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக். இடங் களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. பொறி யியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 34 ஆயி ரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். பொது கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மொத்தம் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியிருக்கின்றன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 648 இடங்கள் காலியாகவுள்ள உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கான காரணங்கள்குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி:தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலே வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவுகிறது. வெளிநாடுகளில் தொழில் மந்த நிலை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் அது இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு களைப் பார்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அமைப்பானது பொறியியல் படிப்பில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு. புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைப் பார்த்தும் அவற்றின் உரிமையாளர்களின் செல்வச்செழிப்பை பார்த்தும் ஏராளமானோர் புதிதாக பொறியியல் கல்லூரிகளை தொடங்கிவிடுகிறார்கள். புதிய கல்லூரிகளுக்கான தேவை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படவே இல்லை. புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா, தகுதியான பேராசிரியர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய வரும் ஏஐசிடிஇ குழுவினர் பெயரளவுக்கு ஆய்வுசெய்துவிட்டு இஷ்டத்துக்கு அனுமதி வழங்கிவிடு கிறார்கள். 

இதனால், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகப் படுத்தாததால் காலியிடங்கள் அதிகரித் துள்ளன என்ற கருத்தை ஏற்க முடியாது. தற்போதைய படிப்பிலே நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய பாடங்களை தெரிவு பாடங்களாக (எலெக்டிவ் சப்ஜெக்ட்)எடுத்து படிக்கலாம்.முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன்:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் பொறியியல் படிப்பதற்கு தேவையான கல்லூரிகள் உள்ளன. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருக்கின்றார்களா என்றால் இல்லை. தகுதியான ஆசிரியர்கள் இருந்தால் தரமான கல்வி கிடைக்கும். தரமான கல்வி பெறும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கவே செய்கின்றன. தரமான கல்வி கிடைக்காததால்தான் மாணவர்கள் படித்துமுடித்துவிட்டு வேலையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர்:

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பொறியியல் கல்லூரிகளின்எண்ணிக்கை மிக மிக அதிகம். அரசு கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். தற்போது பொறியியல் படிப்பில் சேருவோரில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள். எஞ்சிய 32 சதவீதம் பேர்தான் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப்புற மாணவர்கள் வேலைநோக்கில்தான் பொறியியல் படிப்பை தேர்வுசெய்கிறார்கள். பலரின் எண்ணமும் சாப்ட்வேர் பணியில் சேருவதாகத்தான் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொருத்தவரையில் 92 சதவீதம் தகவல்தொழில்நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. எனவேதான் பெரும்பாலான மாண வர்கள் இசிஇ, ஐடி பிரிவுகளில் சேர விரும்புகிறார்கள். தற்போதைய சூழலில் வேலையளிக்கும் நிறுவனங்களின் போக் கும் மாறியிருக்கிறது. பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு 25 ஆயிரம்சம்பளம் கொடுக்க வேண்டும். அதே வேலைக்கு சற்று பயிற்சி கொடுத்தால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த பட்டதாரிகளை வைத்து பணியைச் செய்யலாம். அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும் என்ற என்று நினைக்கின்றனர்.போதிய அளவு மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு 22 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோன்று பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். எனவே, அடுத்த ஆண்டு நிலைமை ஓரளவுக்குச் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

EMIS:முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு.

EMIS:முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:நிகழ் கல்வியாண்டில் முதல் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இதில், கடந்த ஆண்டில் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு படித்தமாணவர்களின் விவரங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. ஏற்கெனவே பதியப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் பிறந்த தேதி, இனம், சாதி போன்ற விவரங்கள் விடுப்பட்டிருந்தால்,அவற்றைப் பூர்த்தி செய்வதுடன் விவரங்களைச் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும்கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு.

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும்கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதாஎன்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர்உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, அனைவருக்கும் கல்விஇயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 கடந்த கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை சிக்கல் இல்லாமல் தீர்வு காண்பது தொடர்பாகமாணவர்களின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்த ஆண்டும் முதற்கட்ட ஆய்வு பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்விஇயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள், 7307 நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

Saturday, 23 July 2016

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது. 
அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் உள்ளதால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க புதிய பணியிடங்களை ஏற்படுத்தஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசை கேட்டு கொண்டார். அதை ஏற்று ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி இயக்குபவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர்,கணினி இயக்குபவர், ஊராட்சி ஒன்றியங்களில் உதவியாளர், கணினி இயக்குபவர் பணியிடங்கள் 903 ஏற்படுத்தப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் அவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளுக்கான பட்டியல் தயாரித்து ஏற்பளிப்பு வழங்கவும் அதிகாரமளிக்கப்படுகிறது என அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 07.08.2016 க்குள் முடிக்க உத்தரவு - - இயக்குனர் செயல்முறைகள்

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 07.08.2016 க்குள் முடிக்க உத்தரவு - - இயக்குனர் செயல்முறைகள்


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும்,உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.

* உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறுமாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.

* பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்.

அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர்.ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமைசெயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, 21 July 2016

TBB | TET | HSE(+2) | TNPSC: PHYSICS very Important Study Material


TRB | TET | HSE(+2) | TNPSC: PHYSICS very Important Study Material

கிளிக் இங்கே



அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.



அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.





சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture), பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய  படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கு 11595 விண்ணப்பங்களும், தோட்டக்கலை(B.Sc. Horticulture) படிப்புக்கு 601 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.  அவற்றில் 711 இளநிலை அறிவியல் வேளாண்மை விண்ணப்பங்களும், 35 தோட்டக்கலை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “சமவாய்ப்பு” எண்கள் (Random Number) கடந்த ஜூலை 13-ம் தேதி வெளியிடப்பட்டது.



 இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “தரவரிசை பட்டியல்” (Rank List) செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in.-ல் தங்களது தரவரிசை (Rank)யை தெரிந்து கொள்ளலாம்.  மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள், மேல் நிலை (HSC) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார்செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.



மாற்றுத்திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின்விதிப்படி ஒதுக்கப்படும். இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 23, 25 மற்றும் 26 தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும்.கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள்பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். குறுந்தகவல் (SMS) மூலமாகவும் அனுப்பப்படும்.



மேலும் விபரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in. பார்க்கவும். தொடர்புக்கு auadmission2016@gmail.com மேலும் உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்கள் பெறலாம் என பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு   


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் வியானன்று (ஜூலை 21)நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட தலைவர் என்.ராமசாமி தலைமை தாங்கினார். சேப்பாக்கம் பகுதி செயலாளர் கி.ரகுராமன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி பேசியதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை பத்து நாட்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் சார்பில் நடத்திய போரட்டாத்தின் விளைவாக தமிழக முதலமைச்சர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து சில அரசானைகளும் வெளியிடப்பட்டன. ஆனால் இன்று வரை அந்த கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அரசு ஊழியர் ஆசிரியர் தொடர்பான நிர்வாக நீதியான வழக்குகளுக்கு என்று தனியாக தீர்ப்பாயம் அமைக்கவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு படிகள் அனைத்தையும் வழங்கவும், ஊதிய முரண்பாடுகளற்ற ஊதிய மாற்றம் வழங்கவும் அதற்கான ஊதியக் குழுவினை அமைக்க வேண்டும். அரசு ஊழியர் ஆசியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டு திட்டதிற்கென்று அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.
இவற்றிர்கான ஆணைகளை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே பிறப்பிக்க வேண்டும்.அதேபோல் ஆளுநர் உரையில் அரசு ஊழியர்களுக்கு செலவு செய்யப்படும் தொகையை சதவிகிதத்தில் தவறாக அறிவித்துள்ளார். அரசுக்கு வரும் வருமானத்தில் உண்மையிலேயே அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற சதவிகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் பி.எஸ்.அப்பர், மாவட்ட செயலாளர் ச.டானியல் ஜெயசிங் ஆகியோர் பேசினர்.இதில் மாநில துணைத் தலைவர் கே.என்.தியாகராஜன், மாவட்ட பொருளாளர் எம்.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட தலைவர் தி.கலைசெல்வி, பகுதி செயலாளர் ம.தேவேந்திரன் உள்ளிட்ட 300கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சங்க மாநில நிர்வாகிகள் வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்யமிஸ்ராவிடம் வழங்கினர்.

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள் ஒரு கண்ணோட்டம்

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அருகில் தமிழக முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

*தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
*மதுரையில் பால் பொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.
*இலவச அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு:

*மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9, 073 கோடி நிதி ஒதுக்கீடு.
*பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு.
*வேளாண்துறைக்கு ரூ.1,680.73 கோடி நிதி ஒதுக்கீடு.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி ஒதுக்கீடு.
* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.928 கோடி நிதி ஒதுக்கீடு.
* நலத்திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு.
* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி நிதி ஒதுக்கீடு.
*மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாநில சமச்சீர் நிதியத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
*தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
*ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.
*இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்துக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு.
*தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு.
*காவல்துறைக்கு ரூ,6,102.95 கோடி நிதி ஒதுக்கீடு.
*காவல்துறையை கணினிமயமாக்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு.
*இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி ஒதுக்கீடு.
*மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ,396.74 கோடி ஒதுக்கீடு.
*தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.
*இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தைக் காக்க ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாநில தொழில் கூட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு.
*தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2,104.49 கோடி ஒதுக்கீடு.
*வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.652.78 கோடி நிதி ஒதுக்கீடு.
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,429.94 கோடி ஒதுக்கீடு.

தொலைநோக்கு திட்டம் 2023 இலக்குகளை அடைய மாநில அளவில் இந்த 5 இயக்கங்கள் வடிவமைப்பு:

1.நீர் ஆதார மேலாண்மை மற்றும் குடி மராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் இயக்கம்.
2.குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப்பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்கிட வீட்டு வசதிக்கான மாநில இயக்கம்.
3.வறுமை ஒழிப்பின் மூலம் ஏழைகளுக்குப் பொருளாதார உயர்வை வழங்குவதற்கான இயக்கம்.
4.தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்.
5.திறன் மேம்பாட்டிற்கான இயக்கம்.
சலுகைகள் சில:

*கறவை மாடு வாங்குவதற்கான நிதி ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.

*பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும்.

*இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

*சிறுபான்மையினர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

*இஸ்லாமிய உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தப்படும்.

அறிவிப்புகள்:

*லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் வரும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இதற்காக ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ,23,000 கோடி அளவிலான முதலீடுகள் இதுவரை வந்துள்ளன.

* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ,928 கோடி நிதி ஒதுக்கப்படும்.

*7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

* பொன்னேரி பிளாஸ்டிக் தொழில் முனையம் தேசிய அளவிளான மையமாக மாற்றப்படும்.

*ரூ.52.64 கோடியில் ஆற்றங்கரை ஓரங்களில் மரம் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிப்பு.

* அடுத்த ஒராண்டில் 3.50 லட்சம் இலவச பட்டா மனைகள் வழங்கப்படும்.

*ஆறுகள் புத்துயிர்த் திட்டத்தின் கீழ் வைகை, நொய்யலாறுதூர்வாரப்படும்.

* அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படும்.

*அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

* ரூ.422 கோடி செலவில் காவலர்களுக்கு 2,673 வீடுகள் கட்டித்தரப்படும்.

* வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாக செயல்படும்.

பட்ஜெட் ஒதுக்கீடு:

*திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி

* தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 மோடி. மொத்த நிதிபற்றாக்குறை ரூ.40,533.84 கோடி.தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் வந்ததால், கடந்த பிப்ரவரி 16-ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றிய பிறகு, சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது.இதையடுத்து, மே 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 6-வது முறை யாக முதல்வராக ஜெயலலிதா மே 23-ம் தேதி பதவியேற்றார்.அதன்பின், 15-வது சட்டப்பேரவை யின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை விவாதம் நடந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு ஜூன் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார்.இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

NEW TRANSFER FORMS 2016 - CLEAR COPY updated

TEACHER COUNSELING START  AUG 3 rd,    
NEW TRANSFER FORMS 2016 - DEE & DSE ..CLEAR COPY updated

மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு  

தமிழக பட்ஜெட் 2016-17 சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

Tuesday, 19 July 2016

பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம் : நான்கு ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம் : நான்கு ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' 

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில், ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான புகாரில், இரண்டு தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது சென்னையில் இருந்து இணை இயக்குனர்கள், மாவட்ட வாரியாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். 


மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட பொதுத்தேர்வுக்கான அதிகாரியாகவும் நிர்ணயிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளின் போது, சென்னையில் இருந்து சென்ற பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் குழு, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் தேர்வு அறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதில், பள்ளி தேர்வு மையங்களில், ஐந்து மாணவர்களின் விடைத்தாள்களில், ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடைத்தாள்கள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர் உமா ஆகியோர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. 

வேதியியல் விடைத்தாளில், ஒரு மதிப்பெண்ணுக்கான, 30 வினாக்களின் பதில்களை, ஒரே நபர் ஆள் மாறாட்டம் செய்து எழுதியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த விடைத்தாள்களின் பிரதிகள், சென்னையில் உள்ள தமிழக தடயவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு கையெழுத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அத்துடன் கையெழுத்து நிபுணர்களும் ஆய்வு செய்ததில், ஐந்து விடைத்தாள்களில் உள்ள கையெழுத்து, ஒரே நபருடையது என தெரியவந்தது. அந்த நபர் ஆசிரியரா; தேர்வு மைய அதிகாரியா; தேர்வு அறை கண்காணிப்பாளரா; மாணவரா என விசாரணை நடந்து வருகிறது.

இந்த பிரச்னை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அய்யணன்விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன்படி, நான்கு ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். ஈரோடு, மாத்துார் அரசு மாடல் (முன் மாதிரி) மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல்.நசீர்; டி.ஜி.புதுார், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்ஜோசப் சகாயராஜ்; பவானி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியர் முருகன், இயற்பியல் முதுநிலை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

RTI - ஆதார் அட்டை எண் இருந்தால் தான் இந்த மாதம் ஊதியம் என கட்டாயப் படுத்தக்கூடாது. (RTI) தகவல் .

RTI - ஆதார் அட்டை எண் இருந்தால் தான் இந்த மாதம் ஊதியம் என கட்டாயப் படுத்தக்கூடாது. (RTI) தகவல் .


Monday, 18 July 2016

EMIS-STUDENT DATA ONLINE ENTRY OPEND 2016-17

EMIS- STUDENT DATA ONLINE ENTRY OPEND 2016-17





RTI :SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE REGARDING NEW RTI COPY

 RTI :SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE



REGARDING NEW RTI COPY.



CLICK HERE ...SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE REGARDING NEW RTI COPY... 




இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்.

இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்.
மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், 'உதான்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் ஏழை மாணவ, மாணவியரும் சேர்ந்து இலவச கல்வி கற்கும் திட்டத்தை, 'உதான்' திட்டம் என்ற பெயரில், 2014ல் மத்தியஅரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தில், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அவர்களது தந்தையின் ஆண்டு வருமானம், ஆறு லட்சத்துக்கு குறைவாக இருக்கும் நிலையில், அவர்களுக்குபிளஸ் 1 முதல் இலவச பயிற்சி தரப்படுகிறது.நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெற்று, அதில் தேர்வு செய்யப்படும் மாணவியருக்கு அவரவர் ஊர்களில், மத்திய அரசின் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.பின், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று, நுழைவுத்தேர்வில் தேர்வாகும், 1,000 மாணவியருக்கு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜினியரிங் படிப்புகளை இலவசமாக படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 படிக்கும் மாணவியர் இந்த திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு, 'ஆன்லைன்' மற்றும் நேரடி பயிற்சி தரப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவியர், 10ம் வகுப்புதேர்வில் குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 பாடப்பிரிவில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.நடப்பு ஆண்டில், இந்த திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜூலை, 4ல் துவங்கி, 13ம் தேதி முடிவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, 20ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க விரும்புவோர், http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.

7வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.

வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.
இது ஒருபுறம் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன் எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற சந்தேகமும் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேசிய செயல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷிவ்கோபால் மிஸ்ராவிடம் கேட்ட போது, ஜூலை மாதம் முதல் 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கான அரசாணை இன்று அல்லது அடுத்த வார துவக்கத்தில் வெளியிடப்படலாம். முதலில் அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும். பின்னர் பல்வேறு கமிட்டிகள் அளித்துள்ள பரிந்துரைகள், கோரிக்கைள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை
சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, அரசுபள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் இருந்தபோதும், தேர்ச்சி என்று வரும்போது பின்னடவு ஏற்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தற்போதுபள்ளி கல்வித் துறை பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இலக்கு இல்லாமல் வகுப்பறைகளில் உட்காந்திருக்கும் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் ஊக்கப்படுத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம் ஓரிரு வாரங்களில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக அனைத்து அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி

 அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல்துறை சிறப்பு நிபுணர்களை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து குறிப்பிட்ட தேதியில் அழைத்து கொள்ளலாம்.
 நான்கு பிராந்தியங்களில் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் காலை வேளையில் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.
 மாணவர்களின் பொறுமையை சோதிக்க வைக்காமல், முதல் 25 நிமிடங்கள் சிறப்பு நிபுணரின் உரையாகவும், அடுத்த 35 நிமிடங்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்கும் கலந்துரையாடலாகவும் கட்டாயம் அமைய வேண்டும்.
 கலந்துரையாடல் நிகழ்வு 35 நிமிடங்களில், கதை சொல்லல், வினாடி வினா, செயல்முறைகள், வீடியோ வெளியீடு, திரைகாட்சிகள் ஒளிபரப்பு என்ற முறையில் பவர் பாயின்டாககூட அமையலாம்.
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசியம், வளர்ச்சி, நல்ல நிர்வாகம் வாழ்வியல் நெறிமுறைகள், நற்சிந்தனைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசலாம்.
 சிறப்பு விருந்தினரின் பேச்சு, மதம், அரசியலை கடந்ததாக, அரசு நிர்வாகத்தை விமர்சிக்காமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
 இதற்காக எந்த கட்டணமும் சிறப்பு விருந்தினர்களுக்குகிடையாது. தன்னார்வலராக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டவே முடியும்.

இத்திட்டத்தின் கீழ், வாழ்வில் முன்னேறிய டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.இருப்பினும், அரசு பள்ளிகள் வேறு திட்டத்தில் இறங்கியுள்ளன. அரசு பள்ளியில் படித்த பலர் வாழ்வில் சிகரத்தை தொட்டு நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள், பல்வேறு துறைகளில் உயர் பதவிகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.அதுபோன்ற புகழ் பெற்ற பிரமுகர்களை அடையாளம் கண்டு, அதே பள்ளியில் கலந்துரையாட வைப்பதே மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என, கருதி, பெரும்பாலான அரசுபள்ளிகள், அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.