Powered By Blogger

Monday, 7 December 2015

மேலும் 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பராமரிப்பு மேற்கொள்வதற்காக மேலும் 2 நாள் விடுமுறை

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


தொடர் விடுமுறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இடையில் இரு நாள்கள் மட்டுமே இயங்கிய நிலையில், மீண்டும் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை நின்றபோதும், பல இடங்களில் வெள்ளநீர் வடியாததாலும் பராமரிப்பு மேற்கொள்வதற்காகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்,  புதன் ஆகிய இரு நாள்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment