உலகின் சிறந்த 5 இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள்கள்
இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின் பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் டவுண்லோட் மேனேஜர் மென்ப்பொருள்கள் கிடைக்கிறன. அவற்றில் முதன்மையான மென்பொருள்கள்.
1.GETGO Download Manager
இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவியின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் போது நேரிடையாக GETGO டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். GETGO டவுண்லோட் மேனேஜர் மென்பொருள் உதவியுடன் அதிவேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
2.Free Download Manager
இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும். மேலும் ப்ளாஷ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும். இந்த டவுண்லோட் மேனேஜர் மென்பொருளில் வசதி உள்ளது. இதனை போர்ட்டபிள் மென்பொருளாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
3.Internet Download Accelerator
இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும். மேலும் உலாவிகளில் இருந்து நேரடி பதிவிறக்கம் செய்யவும். யூடுப் தளத்திலிருந்து வீடியோக்களை நேரடியாக டவுண்லோட் மேனேஜர் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியும்
4.Shareaza Download Manager
இந்த மென்பொருள் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் டோரன்ட் டவுண்லோடரும் இந்த மென்பொருளில் இருப்பியல்பாக உள்ளது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருள் உதவியுடன் பார்க்கவும் முடியும்.
No comments:
Post a Comment