எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கடிதம்
மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் வழக்கறிஞர் முகமது நஸ்ருல்லா நேற்று வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
சமீபத்தில் கனமழை கொட் டியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்க மாக டிசம்பர் 2 அல்லது 3-ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும்.
இந்த ஆண்டு கனமழை காரணமாக அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பேரிட ரில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. மாணவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி யிருக்கின்றனர். அதனால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், அடுத்த ஆண்டு இறுதித் தேர்வு வரை படிப்பைத் தொடர மாணவர்களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்.
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment