Powered By Blogger

Tuesday, 1 December 2015

கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் அண்ணா பல்கலைக் கழக மற்றும்சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததோடு, இன்றும் கன மழை நீடித்து வருகிறது.


இந்நிலையில் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.

No comments:

Post a Comment