மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி தேவை - பாடசோலை கோரிக்கை
தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், சென்னை போன்ற பகுதிகளில் மழையின் பாதிப்புகள் மிக அதிக அளவில் உள்ளது. மேலும் சென்னையில் வழக்கத்தை விட 89 சதவீதம் அதிக மழை இதுவரை பெய்துள்ளது. மழையின் பாதிப்புகளினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பல அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பலரும் தயார் நிலையில் உள்ளனர். களத்தில் ஒருங்கிணைந்து செய்பட ஆசிரியர்களால் மிக எளிதாக இயலும். எனவே சென்னை உட்பட மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பில் உதவ இதர பகுதிகளில் உள்ள ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாடசாலை தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறது.
ஆசிரியர்களுக்கு தேவையெல்லாம் - தமிழக அரசின் சிறப்பு அனுமதியும், ஆசிரியர் குழுக்களை ஒருங்கிணைக்க மாநகராட்சி தலைமை ஊழியர்களின் ஒத்துழைப்பும் தான்.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாகவும், தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாகவும் ஒரு குழு ஏற்படுத்தி இப்பேரிடர் உதவி பணியில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களினை கணக்கெடுத்து அவர்களுக்கு உடனடியாக பள்ளிப்பணியிலிருந்து சிறப்பு அனுமதி வழங்கி, மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பலரும், மழையால் பாதித்த பகுதிகளில் மக்கள் படும் துயரத்தை தொலைக்காட்சிகளில் கண்டு அவர்களுக்கு உதவ இயலவில்லையே என வருத்தத்தில் உள்ளனர். சேவை நோக்கில் உதவி செய்ய விரும்பும் ஆசிரியர்களுக்கு தேவையெல்லாம் ஒரு அனுமதி ஆணை மட்டுமே.
எனவே தமிழக அரசு பொது மக்களின் துயரத்தை களையவும், தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்யவும் ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு பணிவுடன் பாடசாலை கேட்டுக்கொள்கிறது.
நன்றி!
Please Friends, Please Share Our Article to Facebook, Twitter, Whatsapp!
No comments:
Post a Comment