இன்டர்நெட் எப்படி உருவானது
இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்ளன. அவற்றிற்கு பதிலை எண்ணிப் பார்த்துவிட்டு பின் கீழே தரப்பட்டுள்ள பதிலுடன் உங்களுடைய பதிலை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள்
1. World Wide Web என்ற சொல் தொடரை உருவாக்கியவர் யார்?
2. இன்டர்நெட் எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது?
3. லிக்லைடர் (J.C.R. Licklider) என்பவர் இன்டர்நெட் டுடன் எந்த வகையில் தொடர்பு கொண்டிருந்தார்?
4. ARPANET என்பது என்ன?
5. முதன்முதல் வெகு தொலைவில் அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு எங்கு நிகழ்ந்தது?
6. லியோனார்ட் கிளெய்ன் ராக் (Leonard Kleinrock) என்பவர் யார்?
7. ஈதர் நெட் (Ethernet) என்பது என்ன?
8. மவுஸ் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
9. இன்டர்நெட் எப்போது மிகவும் பிரபலமானது?
10. எவ்வளவு வேகமாக இன்டர்நெட் பயன்பாடு பரவியது?
11. மிக அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் உள்ள நாடு எது?
12. ISP என்பது என்ன?
பதில்கள்
1.டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்தினார்.
2. 1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.
3. இன்டர்நெட் தொடங்குவதற்கான கருத்துருவாக்கத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர். இதனாலேயே இவர் இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கம்ப்யூட்டரும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல்முறையைக் கொண்டு வந்தவர் இவர். அவர் அத்தகைய இணைப்பை காலக்டிக் நெட்வொர்க் (“Galactic Network”) என அழைத்தார். அவருடைய திட்டம் 1962ல் DARPA, (Defense Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய, இன்டர்நெட் உருவானது.
4. ஆர்பா நெட் என்பது ‘Advanced Research Projects Agency Network’ ஐக் குறிக்கும். இராணுவ ரகசிய தகவல் தொடர்புகளுக்கான நெட்வொர்க்காக இது அமைக்கப்பட்டது.
5. 1965 ஆம் ஆண்டு, மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி, எம்.ஐ.டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ராபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தாமஸ் மெரில் (Thomas Merrill) என்பவருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய TX2 கம்ப்யூட்டரை கலிபோர்னி யாவில் இயங்கிய கி32 என்ற கம்ப்யூட்டருடன் இணைத்தார். அப்போது தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. இன்டர்நெட் தொடர்பில் தகவல்களை அனுப்ப பாக்கெட் ஸ்விட்சிங் (Packet Switching) என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. பைல்களில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப்படுகின்றன. லியோனார்ட் கிளெயின்ராக் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி.
7. லோக்கல் நெட்வொர்க்குகளில் தகவல் பரிமாறப்படும் வழிகளில் இதுவும் ஒன்று. இதற்கான மூலம் “Packet Networks” என்ற பெயரில் Bob Metcalfe என்பவர் மேற் கொண்ட மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து வந்தது. இன்னொரு செய்தியும் இதில் உண்டு. ஈதர்நெட் என்பதற்கான காப்புரிமை செராக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது.
8. கம்ப்யூட்டருக்கான முதல் மவுஸ் 1968ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில் Douglas Engelbart என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
9. இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.
10. சூறாவளி வேகத்தில் என்று சொல்லலாம். 5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.
11. அமெரிக்கா என்று தானே எண்ணுகிறீர்கள். தவறு. ஸ்வீடன். இங்குள்ள மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்டர் நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
12. ISP (Internet Service Provider) என்பது நமக்கு, நம்மிடம் கட்டணம் பெற்றுக் கொண்டோ, பெறாமலோ, இன்டர்நெட் இணைப்பு வசதியை
No comments:
Post a Comment