Powered By Blogger

Friday, 1 January 2016

வெள்ள நிவாரணப் பணிகள் : எஸ்எம்எஸ்-சில் விவரங்கள்

வெள்ள நிவாரணப் பணிகள் : எஸ்எம்எஸ்-சில் விவரங்கள்





வெள்ள நிவாரணப் பணிகளை கணக்கெடுத்த குழுவினர், பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ்-ஐ அனுப்பியுள்ளனர்.



பெயர், முகவரியுடன் வங்கிக் கணக்கு பொருந்தாத நபர்களுக்கு இது குறித்து முழு விவரங்களை அனுப்புமாறு கேட்டு வெள்ள நிவாரணப் பணிகளைக் கணக்கெடுத்த குழுவினர் அனுப்பியுள்ளது.



அந்த குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவர்கள் உடனடியாக 9840131067 என்ற எண்ணுக்கு முழு விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், நிவாரணப் பணி கணக்கெடுப்பின் போது வங்கிக் கணக்கை அளிக்காத நபர்களும், இந்த எண்ணுக்கு முழு விவரத்துடன் வங்கிக் கணக்கு எண்ணையும் அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment