கால அவகாசம் நீடிப்பு வருமான வரி கணக்கை ஆகஸ்டு 5–ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் மத்திய அரசு அறிவிப்பு..
புதுடெல்லி: வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31–ந்தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். அதன்படி, 2016–2017–ம் மதிப்பீடு ஆண்டுக்கான வருமான
வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடு வருகிற ஆகஸ்டு 5–ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா, நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்டு 5–ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்த மாநிலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்டு 31–ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment