Powered By Blogger

Tuesday, 26 July 2016

நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் மிகப் பெரிய மோசடி...

# நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் மிகப் பெரிய மோசடி...  


"தமிழகத்திலேயே முதன்முறையாக தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி வழங்கி சாதனை...!"
மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் 14.07.2016 முதல் தற்காலிகமாக மூடப்பட்ட மோகனூர் ஒன்றியம், குமரி அய்யம்பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு உடனடியாக காலியாக இருந்த சின்னகரசப்பாளையம பள்ளியின் தலைமை ஆசிரியராக உத்திரவு பிறப்பிக்கப்படாமல் இத்தனை நாட்களாக இழுத்தடித்து, இன்று, 26.07.16 அன்று 14.07.2016 என முன் தேதியிட்டு, தமிழகத்திலேயே முதன்முறையாக தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி வழங்கி சரித்திர சாதனைப் படைத்துள்ளார் நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்....
# 14 ம் தேதிக்கும் 26 ம் தேதிக்கும் இடையில் நடந்தது என்ன? 
# யாருக்காக இப்படி விதிமுறைகள் பணக்காற்றில் பறக்கிறது?
# ஆள் பலம் இல்லாத, அப்பாவி ஆசிரியர்களுக்கு நீதி எட்டாக்கனி தானா?

No comments:

Post a Comment