TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு.
2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் குரூப் - 4 தேர்வு மூலமாக நிரப்பப்படும். அந்த வகை யில், வருடாந்திர தேர்வுகால அட்டவணையின்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 3-வது வாரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இன்னும் அறிவிப்பு வெளியாகாததால் குரூப்-4 தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்கள் அறிவிப்பை ஆவலுடன்எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமாரிடம் கேட்டபோது, “ஏறத்தாழ 5 ஆயிரம் காலி இடங்கள் குரூப் - 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்த அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்” என்றார்.குரூப் - 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியா ளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர்என பல்வேறு விதமான பதவிகள் நிரப்பப்படுகின்றன. 10-ம் வகுப்பு முடித்த வர்கள் குரூப் - 4 தேர்வு எழுதலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசிவகுப்பி னருக்கு வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 ஆகவும் நிர் ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான எஸ்எஸ்எல்சி படிப்புக்கு மேல் அதாவது பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை படித்தி ருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு எதுவும் கிடையாது.
No comments:
Post a Comment