அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.
அந்த குழுவின் பணிக்காலத்தை, ஜீன் 28 தேதியில் இருந்து, மேலும் 3 மாதங்கள் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இக்குழுவின் ஆய்வுப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஓய்வூதிய திட்டத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்றும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்
No comments:
Post a Comment