Powered By Blogger

Wednesday 29 June 2016

பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு

பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு

பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பொது சேம நல நிதியை இடையிலேயே திரும்ப பெற அனுமதியளித்து. இதற்கு முன்பு சந்தாதார் வைப்பு திட்டக் கணக்கை இடைநிறுத்தம் செய்து கொண்டாலும் 5 ஆண்டு நிறைவுக்கு பிறகே வைப்பு நிதியை பெற முடியும்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பொது சேமநல நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் இடையில் கணக்கை நிறுத்திக் கொண்டால், உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பணத்தை திரும்ப பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALL TRS TN... Siva.

No comments:

Post a Comment