Powered By Blogger

Tuesday, 1 December 2015

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்
வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல் இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? தேர்தலுக்காக முன் கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–


தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7–ந்தேதி பிளஸ்–2 மாணவர்களுக்கும், 9–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்குவதற்கான அட்டவனை தயாரிக்கப்பட்டு அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு முன்பே வினாத்தாள்கள் பள்ளிக்கல்வி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மழையால்அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தான் முறைசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்துறை அல்ல.

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் அட்டவணைஇந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். பிளஸ்–2 தேர்வுகள் 11 நாட்கள் நடைபெறும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத வசதியாக போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்காக பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. 

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல மார்ச் முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு தொடங்கி இறுதியில் முடிவடையும்.பொது தேர்வுக்கான கால அட்டவணைஅரசின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும். குறுகிய காலத்தில் தேர்வுகளை நடத்தஇயலாது. அதனால் ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.முன்கூட்டியே தேர்வு நடைபெறும் கால அவகாசம் இல்லை என்று மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment