Powered By Blogger

Sunday, 20 December 2015

அவசர கால முதலுதவி முறைகள்!!

அவசர கால முதலுதவி முறைகள்!!!
➖➖➖➖➖➖➖➖➖➖➖
அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்

🔑 வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

🔑 மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்:
உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.
வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

🔑 தலைவலி:
கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

🔑 வயிற்றுப் பிரச்னைகள்:
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

No comments:

Post a Comment