Powered By Blogger

Tuesday 22 December 2015

ட்ரோல், டீசல் விலை குறைவு எதிரொலி: கிலோ மீட்டருக்கு 39 காசு என்ற அளவில் ஆட்டோ கட்டணத்தை குறைக்க ஐகோர்ட்டு உத்தரவு; 1–ந் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை

பெட்ரோல், டீசல் விலை குறைவு எதிரொலி: கிலோ மீட்டருக்கு 39 காசு என்ற அளவில் ஆட்டோ கட்டணத்தை குறைக்க ஐகோர்ட்டு உத்தரவு; 1–ந் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை
பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், 1-ந் தேதி முதல் கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ‘கோயம்புத்தூர் நுகர்வோர் குரல்’ என்ற அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘சென்னை மாநகருக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்தது போல, கோவை மாநகருக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. ஐகோர்ட்டு உத்தரவு

இந்த வழக்கு விசாரணையின்போது, கோவையில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி 8 நிபந்தனைகளுடன் ஒரு உத்தரவுகளை பிறப்பித்தனர்.நிபந்தனைகள்

அதில், பெட்ரோலிய எரிப்பொருட்களின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்யவேண்டும். அந்த கட்டண விவரங்கள் பயணிகளுக்கு நன்கு தெரியும்படி, ஆட்டோவில் எழுதி வைக்கவேண்டும் என்பது உள்பட 8 நிபந்தனைகள் விதித்து இருந்தனர்.

ஆனால், இந்த 8 நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மனுதாரர் சங்கம் தாக்கல் செய்தது. மறு ஆய்வு மனு

அதேபோல, அரசு போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் மறுஆய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்துள்ள 8 நிபந்தனைகளில் 7 நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. அந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த 2 மனுக்களையும் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து தமிழக அரசில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தனர். பதில் மனு

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை ஆணையர் சத்தியபிரதா சாகு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆட்டோ கட்டணத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.27 ஆக இருந்தது. அதனால், முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 என்றும் அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 37 முறை விலை மாற்றம்

அதாவது ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல 35 சதவீத எரிபொருள் செலவாகும். ஆனால், அதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை 37 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.60.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையில் பார்க்கும்போது, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு தோராயமாக 24 ரூபாயும், அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.11.50 என்றும் நிர்ணயம் செய்யவேண்டும்.

ஆனால், இப்போது மாதந்தோறும் எரிப்பொருட்களின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. விலை நிர்ணயத்தில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் நிலவுகிறது. 39 பைசா

தற்போதுள்ள எரிப்பொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் இல்லை. சரியாக சொன்னால், ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணத்தில் 39 பைசாவை மட்டுமே குறைக்கவேண்டும். இந்த சிறு தொகை மாற்றத்துக்காக, கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டால், ஆட்டோ மீட்டரில் பொருத்தப்பட்டுள்ள கட்டணத்தை மாற்றியமைக்கவேண்டும். அவ்வாறு மாற்றியமைக்க காலஅவகாசம் வழங்கவேண்டும். அந்த காலக்கட்டத்தில் பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணத்தை சிலர் வசூலிக்க வாய்ப்புள்ளது. தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்று வசூலிக்கப்படுகிறது. எரிப்பொருள் விலைக்கு ஏற்ப ரூ.11.61 என்று குறைத்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். பழைய கட்டணம்

மேலும், ஆட்டோவின் விலை, பராமரிப்பு செலவு ஆகியவை அதிகரித்துள்ளதையும் கணக்கில் கொள்ளவேண்டியதுள்ளது. எனவே, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்காமல், தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த ஐகோர்ட்டு விதித்துள்ள 8 நிபந்தனைகளில், 3 மாதங்களுக்கு ஒருமுறை எரிப்பொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை த

No comments:

Post a Comment