Powered By Blogger

Monday, 18 July 2016

8822 வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.

8822 வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.
வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 8,822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறதுபொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 8822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- 
‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு தற்போது புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.மொத்தம் 8 ஆயிரத்து 822 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கனரா வங்கியில் 2 ஆயிரத்து 200 இடங்களும், ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1350 இடங்களும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 899 இடங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 இடங்களும், யூகோ வங்கியில் 540 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதர வங்கிகளிலும் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பு உள்ளது. முழுமையான பணியிட விவரம் மற்றும் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணைய தளத்தில் பார்க்கலாம். இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்...

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-7-1986-ந் தேதிக்கு முன்னரும், 1-7-1996-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 13-8-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகுதி சரிபார்க்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே அவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:

விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் : 26-7-2016

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 13-8-2016

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 16, 22 மற்றும் 23-ந் தேதிகள்

முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 20-11-2016

பொது நேர்காணல் நடைபெறும் காலம் : ஜனவரி / பிப்ரவரி 2017

மேலும் விரிவான விவரங்களை   

www.ibps.in    என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

HSE & SSLC :ENGLISH unit test for 100 /100 STUDENTS

HSE & SSLC :ENGLISH unit test for 100 /100 STUDENTS.  

இங்கே சொடுக்கவும் 




விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.

விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.  

நீதிமன்ற ஆணைகளின் படி மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.

CRC, BRC பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை - நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும்

CRC, BRC பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை - நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும்
'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலமும்; மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் மூலமும்,சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின் போது, ஆசிரியர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டு மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள பக்கங்களை பார்த்து, நேரத்தை வீணடிப்பதாக புகார்கள் வந்துள்ளன.



இதையடுத்து, பயிற்சி நேரத்தின் போது, ஆசிரியர்கள் மொபைல்போனைபயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வட்டார வள மைய பயிற்சிக்கு வரும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், பயிற்சி நேரத்தில் மொபைல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களிடம், நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Sunday, 17 July 2016

துணை ராணுவப் படையில் 2068 கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

துணை ராணுவப் படையில் 2068 கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


புகைப்படங்கள்

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் நிரப்பப்பட உள்ள 2068 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: கான்ஸ்டபிள் (டிரைவர்): (ஆண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 731

பணி: கான்ஸ்டபிள் (சமையலர்): (ஆண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 349

பணி: கான்ஸ்டபிள் (சமையலர்): (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 60

பணி: கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): (ஆண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 170

பணி: கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 30

பணி: கான்ஸ்டபிள் (பார்பர்): (ஆண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 82

பணி: கான்ஸ்டபிள் (பார்பர்): (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 15

பணி: கான்ஸ்டபிள் (சவேவாலா): (ஆண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 176

பணி: கான்ஸ்டபிள் (சவேவாலா): (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 30

பணி: கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): (ஆண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 395

பணி: கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 30

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஓட்டுநர் பணிக்கு 21 - 27க்குள்ளும், இதர பணிகளுக்கு 18 - 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.50. இதனை போஸ்டர் ஆர்டர், டிமாண்ட் டிராப்ட், பேங்கர் செக் ஆகிய ஏதாவதொன்றின் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Inspector General,

Frontier Headquarter SSB,

Sankalp Bhawan, Vibhuti Khand,

Plot No:TC/35-V-2,

LUCKNOW (U.P.) PIN: 226010.

 

இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Inspector,

Frontier Headquarter,

Sashastra Seema Bal,

Rukanpura Bailey Road,

Patna (Bihar)- 800014.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.07.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி...

ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி ஜூலை 18-ம் தேதி முதல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.

 ஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்டு 1-ம் தேதிவரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளியே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களிலும் மதிப்பெண் சான்று தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

Saturday, 16 July 2016

பள்ளிக்கல்வித் துறை -2016-2017-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தெளிவான G.O


பள்ளிக்கல்வித் துறை -2016-2017-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -8 பக்கம் கொண்ட தெளிவான அரசாணை -258-நாள் 06.07.2016

CLICK HERE TO DOWNLOAD TRANSFER G.O 

உங்கள் மின்சார பில் மீட்டர் அளவுகள்அளவுகள் தெரிந்து கொள்ள உதவும்.

 உங்கள் மின்சார பில் மீட்டர் அளவுகள்அளவுகள் தெரிந்து கொள்ள    இங்கே

 சொடுக்கவும்.

ALL TRANSFER APPLICATION Forms

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 
மாறுதல் விண்ணப்பங்கள் 










ALL TRS TN.. Siva.

பத்தாம் வகுப்பு: ஜூலை 18-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்.

பத்தாம் வகுப்பு: ஜூலை 18-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்.  


இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த ஜூன் 1-ஆம் தேதியன்று பள்ளிகள் மூலம் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை செல்லத்தக்கதாகும்.
எனினும் மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள்

தொடக்கக்கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை  
   
*தொடக்கக் கல்வி துறை:*

3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு

6.8.16 - நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்

7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு

13.08.16 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்

14.08.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு & இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்

20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

 *பள்ளிக் கல்வித்துறை:*

6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு

7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்

20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு


23.08.16 - உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

24.08.16 - உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்

03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

------------------+++++++++++++++++----------
Teachers Transfer counselling   

*Apply for Tfr-   
 start  july 19/7/16 to 28/7/16
#August Month:
*3/8/16.....Aeeo Tfr,
*4/8/16----Mid HM to Aeeo Tfr,
*6 /8/16. -Mid HM Tfr,To Mid HM Pro & BT Deployment,BT inside union Tfr,BT Promotion,BT Tfr union to union,
*7/8/16---Pri HM Tfr,To Pri HM Pro,
*13/8/16---SGT Surplus,
*14-8-16----+SGT Tfr,
*20/8/16----BT dis to dis Tfr, 
*21/8/16----SGT Dis to Dis Tfr


Dse-Counselling Dates announced:
பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை

20.08.16 PG counselling (Same district).

21.08.16 PG counselling (other district).

22.08.16 PG promotion counselling

27.08.16 to 29.08.16 BT Surplus counselling

03.09.16 BT Counselling (Same district)

04.09.16 BT counselling (other district)


ALL TRS TN.. Siva.

23.08..2010 முதல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள TET பட்டதாரி ஆசிரியர்களின் விவரம்

23.08..2010 முதல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள TET பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் ப.க.இயக்குனர் அவர்களால் கோரப்பட்டுள்ளது. 



Friday, 15 July 2016

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்.  


ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்,
அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள், இணையதளங்கள்,ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின், 'வாட்ஸ் ஆப்'களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரே, பொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன், பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, முதலில் ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும், பின், மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும்
கண் பார்வையற்றவர், மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர்களின் துணைவியர், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோயாளி, கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன், மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால், இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன், மனைவி என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள், அதே தகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

தயக்கம் ஏன்? : ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள், கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால், கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு, அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, அதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...


*Master of Education Regular (M.Ed.) 2016-2018* TAMILUNIVERSITY

*Tamil University*

*Admission Notification*

*Master of Education Regular  (M.Ed.) 2016-2018*

* Cost of Application -Rs.600/-

*Eligibility -50% Marks in B.Ed.

*Duration -180 Days(One Academic year)

*Medium of Instruction - Tamil

*Last Date to submit the filled applications- 03.08.16 till 5.30am

*For more details contact 
04362- 227782, 226720 

Click Here
MEd 2016..18 Tamiluniversity





திறனாய்வு தேர்வு: பள்ளி மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்

திறனாய்வு தேர்வு: பள்ளி மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்


விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் அளிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு கட்டணமா ரூ. 5, சேவை கட்டணம் ரூ. 5 என மொத்தம் ரூ. 10 செலுத்த வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு (50 மாணவர், 50 மாணவியர்) ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிப்பு உதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1,000 வழங்கப்படும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கூடாது என்றார் அவர்.

ராணுவத்தில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்

ராணுவத்தில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்


ராமநாதபுரம் சீதக்காதி ஸ்டேடியத்தில் ஆக. 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது.

 தகுதியுள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜூலை 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பிரிவுகளில் ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியானவர்கள் w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌m‌y.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் ஜூலை 17 க்குள் பதிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும். இதே தேதியில் அழைப்புக் கடிதத்தை இணையதளம் வாயிலாக எடுத்து கொள்ளலாம். சான்றிதழ் சரி பார்ப்பு, உடற் தகுதி, மருத்துவ பரிசோதனை, அன்றைய முகாமில் நடைபெறும். மேலும், இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி..குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி..குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு
By ஸ்ரீவில்லிபுத்தூர்

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இளைஞர் நீதிச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் 70 ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

 நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் செயல்பாடுகள், இலவச கட்டாயக் கல்வி உரிமை குறித்து ஆற்றுப்படுத்துநர் அ.ராஜேஷ் விமல்தாஸ், சமூகப் பணியாளர் பொ.கார்த்திகைராஜன் ஆகியோரும், குழந்தைத் தொழிலாளர் குறித்து பாதுகாப்பு அலுவலர் மு.முனியசாமி, புறத் தொடர்புப் பணியாளர் ரா.முத்துலட்சுமி ஆகியோரும் கருத்துரையாற்றினர்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து சமூகப் பணியாளர் ரா.ஜானகி, புறத் தொடர்புப் பணியாளர் ரா.சாந்தி ஆகியோர் பேசினர். பின்னர் குழந்தை பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முடியாமலும், பதவி உயர்வு பெற முடியாமலும் அவதி அடைந்துள்ளனர்.

 விருதுநகர் மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 1170-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அஞ்சல் வழியில் எம்.ஃபில் படிக்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் படிக்கலாம். படிப்பை காரணம் காட்டி அடிக்கடி விடுப்பு கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இணை இயக்குநர் அலுவலகம் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டு வந்தது.   இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் எம்.ஃபில் படிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு மனு அளித்தனர். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலகம் தரப்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், எம்.ஃபில் சேர்ந்ததற்கான சேர்க்கை அட்டை (அட்மிசன் கார்டு), வழிகாட்டியின் ஒப்புதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்பதாக கூறப்படுகிறது. எம்.ஃபில் வழி காட்டி என்பது கடைசி பருவ தேர்வுக்கு முன்னர் தான் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நியமிக்கப்படுவார். எனவே, இதுபோன்ற வழிகாட்டி ஒப்புதல் சான்றிதழ் வாங்க முடியாமல் பலர் அவதி அடைந்துள்ளனர். சில ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலில் வழிகாட்டியிடம் தங்கள் நிலையை கூறி சான்றிதழும் பெற்று வந்துள்ளனர். இந்த ஆசிரியர்களது விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக சென்னையில் உள்ள பணியாளர் தொகுதி இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அலுவலகம் சார்பில், உயர்கல்வி கற்க விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எம்.ஃபில் படிப்புக்கு சேர்ந்து விட்டு, எப்படி விண்ணப்பிக்க அனுமதி கேட்கிறீர்கள் என அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு 17 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி கற்க வேண்டும் என நினைத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, மற்றும் பணப் பலன்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

   இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த 2007 வரை உயர் கல்வி கற்க விரும்பும் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை. தற்போது, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதாலும், முதுகலை ஒரு பாடப் பிரிவில் படித்து விட்டு எம்.ஃபில் வேறு ஒரு பாடப் பிரிவில் சேரக் கூடாது என்பதாலும், கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் தகுதியில்லாத ஆசிரியர்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று செய்யக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளோம். யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றார்.

Thursday, 14 July 2016

B.Ed கற்பித்தல் பயிற்சி பணிபுரியும் நடுநிலைப்பள்ளியில் முழு சம்பளத்தில் பணிபுரியலாம்.

B.Ed  கற்பித்தல் பயிற்சி பணிபுரியும் நடுநிலைப்பள்ளியில்  முழு சம்பளத்தில் பணிபுரியலாம்.