Powered By Blogger

Friday 15 July 2016

ஆசிரியர்களுக்குப் பயிற்சி..குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி..குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு
By ஸ்ரீவில்லிபுத்தூர்

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இளைஞர் நீதிச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் 70 ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

 நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் செயல்பாடுகள், இலவச கட்டாயக் கல்வி உரிமை குறித்து ஆற்றுப்படுத்துநர் அ.ராஜேஷ் விமல்தாஸ், சமூகப் பணியாளர் பொ.கார்த்திகைராஜன் ஆகியோரும், குழந்தைத் தொழிலாளர் குறித்து பாதுகாப்பு அலுவலர் மு.முனியசாமி, புறத் தொடர்புப் பணியாளர் ரா.முத்துலட்சுமி ஆகியோரும் கருத்துரையாற்றினர்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து சமூகப் பணியாளர் ரா.ஜானகி, புறத் தொடர்புப் பணியாளர் ரா.சாந்தி ஆகியோர் பேசினர். பின்னர் குழந்தை பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

No comments:

Post a Comment