Powered By Blogger

Tuesday, 1 December 2015

WiFi to LiFi முன்னேற்றம்:-


💥💥WiFi to LiFi முன்னேற்றம்:- 📲🍫🍫
WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்).இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக இருப்பதால் பல பேர் தங்கள் இல்லங்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு “WiFi” ஐ தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.


இந்த சேவையை பெற phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது.பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிமுகப்படுத்தி wifi சேவையை வழங்குவதால், இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் wifi என்பது மிக முக்கியமாக இன்றியமையாத ஒரு சாதனமாக இருந்து வருகிறது.


தற்போது ‘Wi-Fi’ வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘Li-Fi’ என்று பெயரிடப்பட்டுள்ளது.‘Wi-Fi’ இல் 1 ஜி.பி தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100 இல் 1 மடங்குதான் ‘Li-Fi’ நேரம் எடுத்துக் கொள்கிறது.தகவல் தொழில் நுட்பத்தில் ‘Li-Fi’ புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment