திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தண்ணீர் இன்னும் வடியாத நிலை, பள்லிகளில் முகாம்கள் செயல்படுவது, பாரமரிப்பு பணிகள் போன்ற காரணங்களால் மாவட்டத்தில் உள்ள 5 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் விவரம்:
பூந்தமல்லி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பூந்தமல்லி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி
போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பூதம்பேடு பஞ்சாயத்து பள்ளி
மேற்கண்ட 5 பள்ளிகளை தவிர பிற பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment