சென்னையில் பெரும்பாலான பகுதிகளை செம்பரம்பாக்கம் ஏரி நீர் மூழ்கடித்தது எப்படி?
(நன்றி: ‘தினகரன்‘ 8.12.2015 dinakaran daily newspaper )
காஞ்சிபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக பல்லவர் கால கட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி 6250 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. அதன் பிறகு பிரிட்டீஷ் காலக்கட்டத்தின் போது சென்னை குடிநீர் தேவைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலில் 5 ஆயிரம் பேருக்கு குடிநீர் வழங்கும் வகையில்தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. நாளடைவில் இந்தியா சுதந்திர பெற்ற பிறகு சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் தேவைக்கான ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி பயன்பாடு மாறியது.
3645 மில்லியன் கன அடி கொண்ட இந்த ஏரியில் 11 மதகுகள் மூலமாக 50 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் திறந்து விடலாம். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் அடையாற்றில் திருப்பி விடப்பட்டு குன்றத்தூர், திருநீர்மலை, மணப்பாக்கம், ராமாபுரம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக வங்களா விரிகுடா கடலில் கலக்கிறது.
சுமார் 42.2 கி.மீ நீளம் கொண்ட அடையாற்றின் ஆற்றுப்படுகையின் அகலம் 10.50 மீட்டராக உள்ளது. இதில், அதிகபட்சமாக 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடலாம் என்று கூறப்படுகிறது.
அடையாற்றில் பாப்பான் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்பு கால்வாய், மணப்பாக்கம் கால்வாய்களில் இருந்து வரும் உபரி நீர் அடையாற்றில்தான் திருப்பி விடப்படுகிறது.
மேலும், sriபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 96 ஏரிகளில் 50 ஏரிகள் உபரி நீர் அடையாறு ஆற்றின் வழியாக தான் கடலில் செல்கின்றன. பெரும்பாலான நீர்வழி தடங்களை கடத்தும் பணிகளை அடையாறுதான் செய்கின்றன.
இதனால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தால் கூட அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை காண முடிகிறது.
பராமரிப்பு இல்லை:
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செம்பரம்பாக்கம் ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், ஏரிகளில் பெரும்பாலான இடங்களில் கரைகள் சேதடைந்த நிலையில் காணப்படுகிறது. மதகுகள் மற்றும் உபரி நீர் போக்கிகளும் பழுதடைந்துள்ளது. ஏரிகள் அரை டிம்சி அளவுக்கு மண்படிமங்கள் தேங்கி கிடக்கிறது. ஏரிகளின் கரைகள் பலவீனமாக உள்ளது.
கணிக்கை தவறிய பொதுப்பணித்துறை:
ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 1ம் தேதி காலை நிலவரப்படி வினாடிக்கு 960 கன அடி நீர் திறக்கப்பட்டது.
பொதுவாக மழை காலகட்டங்களில் ஏரிகளின் கொள்ளளவை குறைத்து வைக்க வேண்டும். 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 2,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு என்ன காரணமென்றால் மழைக்காலங்களில் திடீரென ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் போது அதற்கேற்ப ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஏரிகளின் உபரி நீர் திறக்காமல் பொதுப்பணித்துறை அலட்சியம் காட்டியது.
சந்திக்காத அடையாறு :
கடந்த 1ம் தேதி இரவு திடீரென செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து படிபடியாக 35 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்தது. ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்ததால், 30 ஆயிரம் கன அடி உபரி நீரை திறக்க வேண்டிய கட்டாயம் பொதுப்பணித்துறைக்கு ஏற்பட்டது.
ஏற்கனவே, அடையாற்றுடன் இணைக்கப்பட்டுள்ள 50 ஏரிகள் நிரம்பியதால் அதிலிருந்து உபரி நீர் 32 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தது. இதனால், ஒரே நேரத்தில் 67 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது.
மேலும் அடையாறு கரையோர ஓட்டிய பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் கலந்தது. ஒட்டு மொத்தமாக 70 ஆயிரம் கன அடி நீர் அடையாற்றில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
ஆக்கிரமிப்பால் புகுந்த வெள்ள நீர்:
அடையாற்றில் கரையோர பகுதிகளில் ஆக்கிரமித்து குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் குடிசை வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் தற்போதைய நிலையில் 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றுவது கடினம்.
ஆனால், 70 ஆயிரம் கன அடி கொண்ட தண்ணீர் அடையாற்றில் ஓடியதால் கரைக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால், மணப்பாக்கம், ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் நூற்றுக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர்.
நீர் மேலாண்மை ஆராயாமல் திறந்து விட்டதன் விளைவாக தற்போது லட்சகணக்கானோர் நாதியற்று போய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கவே இல்லை:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 1ம் தேதி
No comments:
Post a Comment