உலகின் மிக இளம் விமான ஓட்டுநர்
5 வயதே நிரம்பிய சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக (pilot) விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.
டுவோடுவோ என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் ஹே யிடே எனும் இச்சிறுவன் ஆகஸ்ட் 31 ஆம் திகதி பீஜிங் உயிரியல் பூங்காவிற்கு மேலாக அல்ட்ராலைட் விமானம் ஒன்றை 35 நிமிடம் ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்ததாக செவ்வாய்க்கிழமை சீன மீடியா அறிவித்துள்ளது.
டுவோடுவோ விமானம் ஓட்டுவதைக் கற்றுக் கொண்ட ஏவியேஷன் கிளப்பின் இயக்குனரான ஷாங்க் யொங்குயி இது பற்றிக் கூறுகையில் இச்சிறுவன் 30 Km தூரத்துக்கு விமானத்தை ஓட்டியிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இச்சிறுவனின் தந்தையான ஹே லியெஷெங் பேட்டியளிக்கையில் தனது மகன் வருங்காலத்தில் மிக வீரமும் திறமையும் மிக்க பைலட்டாக வர வேண்டும் எனவும் இத்துறையில் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் எதில் அதிக ஆர்வம் காட்டி விளையாடுகின்றார்களோ அதற்கேற்ப அவர்களை ஊக்குவித்து சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment