Powered By Blogger

Sunday, 6 December 2015

ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை ரத்து செய்து -இதற்காக செலவாகும் நிதியை நிவாரண நிதிக்கு வழங்லாம்

ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை ரத்து செய்து -இதற்காக செலவாகும் நிதியை மழை வெள்ளத்தால் "பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை பள்ளி மாணவர்களுக்கு நிதியாக" " பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்துகாக" வழங்கலாம் !!!
எஸ்எஸ்ஏ சார்பில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகளையே பயிற்சி என்ற பெயரில் திரும்ப திரும்ப பயிற்சிகளாக கட்டாயமாக கொடுக்கப்படுகின்றது இதனால்


பாதிககப்படுவது பள்ளியும் குழந்தைகளின் கல்வியும் தான்
இதற்காக செலவாகும் நிதியை மழை வெள்ளத்தால் "பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை பள்ளி மாணவர்களுக்கு நிதியாக" " பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்துகாக" வழங்கலாம் உடுத்த உடை கூட இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளி சிறார்கள் பெண் குழந்தைகள் நிலைமை நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்க்கு பரிதாபத்துகுரிய கொடுமையானது.

ஆசிரியர்கள் அனனவரும் எல்லா முழுமையான தகுதியும் பயிற்சியும் பெற்றுதான் வேலைக்கு வருகின்றார்கள்
மிக பெரிய மனிதசக்தி கொண்ட நாட்டில் மாநிலத்தில் பல மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வீடு வாசலை இழந்து மக்கள் பள்ளி குழந்தைகள் துன்ப்படும்போது ஆசிரியர்களுக்கு வழக்கப்படும் தேவையில்லாத பயிற்சி மிக அத்தியாவிசமான அவசியமான ஓன்றாக இல்லை என்றே தோன்றுகிறது.

மழை காலங்களில் ஆறு ஏரிகளில் உயிர்விட்ட குழந்தைகளின் செய்திகள் மனதை அதிர்ச்சியாகுகின்றன.

ஆறு ,ஏரி ,குளங்களை வேடிக்கை பார்க்க ஆர்வத்தில் பள்ளி மாணவர்கள் சென்றால் மழை வெள்ளம் காலங்களில் ஏரி ஆற்றுகளில் குளித்தால் தண்டனை என்ற கடுமையான சட்டமும் இருந்தால்தான் விபத்தை கட்டுப்படுத்தலாம் மற்றும் அதற்கான விழிப்புணர்வு முன் கூட்டியே ஏற்படுத்தபட வேண்டும் .இந்த விழிப்புணர்வை ஆசிரியர்களால் மட்டுமே முழுமையாக ஏற்படுத்த முடியும்

No comments:

Post a Comment