Powered By Blogger

Monday, 7 December 2015

புதிய வடிவமைப்பில் Yahoo Messenger

புதிய வடிவமைப்பில் Yahoo Messenger



பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனைப் போன்று குறுஞ்செய்திகள், படங்கள் என்பவற்றினை நண்பர்களுடன் பரிமாற்றிக் கொள்ளக்கூடிய அப்பிளிக்கேஷனை யாகூ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.

ஆனால் குறித்த அப்பிளிக்கேஷன் பாவனையில் பின்னடைவை சந்தித்து வந்ததை தொடர்ந்து சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாகவும், இடைமுகத்தில் மாற்றத்தினை மேற்கொண்டும் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட Yahoo Messenger அப்பிளிக்கேஷன் ஆனது விரைவாக செயற்படக்கூடியதாகவும், கவர்ச்சியான பயனர் இடைமுகத்தினைக் கொண்டாகவும் இருக்கின்றது.

இதில் iMessage எனப்படும் உயர் பிரிதிறன்கொண்ட புகைப்படங்களை பரிமாறிக்கொள்ளும் வதியும் தரப்பட்டுள்ளதாக இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்குவதில் பங்குபற்றிய மூத்த இயக்குனரான Austin Shoemaker என்பவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment