Powered By Blogger

Wednesday, 25 May 2016

TN SSLC Exam Result - APRIL -2016

SSLC Exam Result - APRIL -2016

நடைபெற்ற  ஏப்ரல் 2016 10 வகுப்பு  பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை  வெளியிடப்படுகிறது.




All THE BEST 
ALL TRS TN.. SIVA.

Tuesday, 24 May 2016

'பள்ளிகளைதிறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!

பள்ளிகளைதிறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!

புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க தலைவர் ராஜ்குமார், முதல் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பை குறைந்தது, 15 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறும் போது, 'பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் விரும்புகின்றனர். 
எனவே, புதிய அமைச்சர் பொறுப்பேற்றதும் அளிக்கப்பட்ட இந்த முதல் மனு மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்' என்றனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை :தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிந்தது; 10.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின்றன. தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய
இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMSல் 82 மாணவர்கள் தேர்ச்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMSல் 82 மாணவர்கள் தேர்ச்சி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏


திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு  கடந்த  26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி திருப்பத்தூர் ஒன்றியத்தில்  VSV நகராட்சி பள்ளியில்  நடைபெற்றது, 
இதில் சுமார் 125 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்று தேர்வு எழுதினார்கள். 
இதில் இன்று  வெளியிட்ட தேர்ச்சி பட்டியலில் தொடக்க பள்ளியில் மட்டும்  திருப்பத்தூர் ஒன்றியத்தில் 82 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அனைத்து மாணவர்களுக்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏📖
  இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், மேலும் இப்பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க அலுவலர்கள், மற்றும் விடுமுறையையும் பாராமல் மாணவர்களுக்கு NMMS சிறப்பு  வகுப்பு எடுத்த ஆசிரியர்களையும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை
🙏🙏🏼🙏📖🙏🙏🏼🙏
 அனைத்து ஆசிரியர்களின் சார்பாக கூறிக்கொள்கிறோம்.

🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.

மற்றும் 
🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
மாநில,மாவட்ட, ஒன்றிய அமைப்பு.

CLIK HERE. NMMS RESULT 2015 VELLORE DT



Tuesday, 8 March 2016

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு.

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள்,'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இதற்கான அரசு சேவை மையங்களின் முகவரி விவரம், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற, 'ஆன்லைன்' முகவரியில் தரப்பட்டுள்ளது.மார்ச், 12ம் தேதி மாலை, 5:00 மணி வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 5 March 2016

'இ - சேவை' மையங்களில் பாட புத்தகங்களை 'ஆர்டர்' செய்யலாம்:வீட்டிற்கே 'டோர் டெலிவரி' செய்ய முடிவு

'இ - சேவை' மையங்களில் பாட புத்தகங்களை 'ஆர்டர்' செய்யலாம்:வீட்டிற்கே 'டோர் டெலிவரி' செய்ய முடிவு
தமிழக அரசின் பாடநுால் கழக புத்தகங்களை, பெற்றோர், இனி நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டியதில்லை. அரசின், 'இ - சேவை' மையங்களில், புக் செய்தால், மாணவர்களின் வீட்டிற்கே இலவச, 'டோர் டெலிவரி' செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கியுள்ளது.

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி பணிகள் கழகத்தின் சார்பில், சமச்சீர் கல்வி புத்தகங்கள், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த புத்தகங்களைத் தான், அரசு பள்ளிகள் முதல், தனியார் மெட்ரிக் பள்ளிகள் வரை, மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பாட புத்தகங்களை வாங்க, சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை மையம், பள்ளிகளில் உள்ள பாடநுால் வினியோக மையத்தில் காத்து நிற்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாடநுால் கழகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெற்றோரை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்க, அருகிலுள்ள இ - சேவை மையங்களுக்கு சென்றால், அங்கு பாடநுால் கழக புத்தக இருப்பு மற்றும் விலை விவரம் வழங்கப்படும்.
அதன்படி, புத்தக இருப்புக்கு ஏற்ப, தேவையான பாட புத்தகங்களை அதற்குரிய பணம் செலுத்தி, 'புக்' செய்யலாம். இந்த பதிவுக்கு, இ - சேவை மையத்தில் ரசீது வழங்கப்படும்; பின், வீட்டு முகவரிக்கே புத்தகம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்து பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், எந்த இ - சேவை மையத்திலும், முன்பதிவு செய்யலாம். பாடநுால் கழகம் நிர்ணயித்த விலையை மட்டுமே கொடுத்து, ரசீது பெற்றுக் கொள்ளலாம். கூரியர் மூலம் இலவச டெலிவரி கிடைக்கும். கூரியருக்கோ, பதிவு செய்வதற்கோ கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மாணவர்கள், தங்களது பள்ளி பெயரை சொல்ல வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Thanks to ALL TRS TN.. Siva

Monday, 29 February 2016

Wednesday, 24 February 2016

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு 
மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 
இதற்காக 869 வாக்குசாவடி மையங்களில் 2114 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக துறை அதிகாரிகளிடம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோரப்பட்டிருந்தது.
இதில் இது வரை 10 ஆயிரம் ஊழியர்களின் பெயர் பட்டியல் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பபட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்களின் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.மேலும் இது வரை அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலில் தேர்தல் பணியாற்ற உள்ள ஊழியரின் வாக்காளர் அடையாள அட்டை எண் பெரும்பாலான ஊழியர்கள் குறிப்பிடாமல் உள்ளதால் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிடாதவர்கள் மீண்டும் புதிய பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

ALLTRS TN... Siva

Friday, 12 February 2016

8 ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு
தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரைwww.tndge.inஎன்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.


தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் 'ஆன்லைன்' விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னையில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–


ஆண்டுமுழுவதும் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதனால் அவர்கள் மாணவர்களுக்கு நிறைவாக கல்விப்போதிக்க முடிவதில்லை. கல்விப்பணி பாதிக்கப்படுகிறது. எனவே ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்து, தேர்தல் பணிக்காக தனியாக நிரந்தர பணியாளர்கள நியமிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

அலுவலர்கள் அரசாணை ஏதும் வராது முன்பே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - ஆசிரியர்கள் தவிப்பு!

அலுவலர்கள் அரசாணை ஏதும் வராது முன்பே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - ஆசிரியர்கள் தவிப்பு!
வருமானவரி கல்வித்துறையில் எப்போதுமே மார்ச் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை மட்டுமே கணக்கிடப்படும்.ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட பகுதியிலுள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் தற்பொழுது 3 நாட்கள் (30, 31, 1) நடந்த தொடர் மறியலில் திங்கள் ( 1.2.16) கிழமை கலந்து கொண்டவர்களின் ஒரு நாள் சம்பளம்  பிடித்தம்  செய்து தான் காட்ட வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி  வருவதாகஆசிரியர்கள்  புலம்புகின்றனர்.


அரசு இதுவரை தொடர் மறியல் கலந்தவர்களது சம்பளம்  பிடித்தம் பற்றிய ஆணை பிறப்பிக்காத போது தன்னிச்சையாக இவர்கள்  பிடித்தம் செய்வது  என்ற தவறான அணுகுமுறை  ஆசிரியர்கள்  மத்தியில்  தெரிவித்துள்ளனர்.உ.தொ.கல்வி அதிகாரிகளும் அரசாணைகளை முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில் மற்ற மாவட்டம், ஒன்றியம் என அருகில் உள்ளவர்களிடமாவது கேட்டறிய வேண்டும் என ஆசிரியர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு
பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், 4ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.


இவர்களுக்கான விண்ணப்பங்களை பெற்றது முதல், பெயர் பட்டியல் திருத்தம் வரை, அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. தற்போது, மாணவர்களுக்கு தேவையான ஹால்டிக்கெட், வருகை பதிவேடு, தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம் ஆகியவற்றை, தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள், தங்களது யூசர் ஐ.டி., வழியாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பிப்ரவரி, 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை, மையம் வாரியாக தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், விடைத்தாள் முகப்பு சீட்டு ஆகியவற்றை டவுண்லோடு செய்யவும், பிப்ரவரி 17 முதல், 20 வரை வருகை பதிவேடும், பிப்ரவரி, 20 முதல், 26ம் தேதி வரை, மாணவ, மாணவியரின் ஹால் டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது.    தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள். 

குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு -அங்கன்வாடிப்  பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என்றுதொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராடுபவர்களின் நெருக்கடியான நிலைகள் குறித்து நானும்,தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளும் எடுத்துக் காட்டியும்  அவர்களை முதல்வர் அழைத்துப் பேசவில்லை.அதிமுக அரசின் வரலாற்றை  அறிந்திருக்கும்  அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சத்துணவு அங்கன்வாடி அலுவலர்களும், வணிகவரித் துறை அலுவலர்களும், வருவாய்த் துறை அலுவலர்களும்  தொடர்ந்து  போராட்டம் நடத்துவதன்  மூலம் இப்போது   எந்தப் பயனும் நேர்ந்து விடப் போவதில்லை.

எனவே  போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத்  திரும்பப் பெற்றுக் கொண்டு,  பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும்  நல்லது.காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர் என கூறியுள்ளார் கருணாநிதி.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:


எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒருசில மாவட்டங்களில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச் சிப் பெற தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டி யது ஒவ்வொரு பள்ளித் தலை மையாசிரியரின் கடமையாகும். பொதுத் தேர்வு நெருங்கும் நேரத் தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கும் தலை மையாசிரியர்கள் மீது கடுமை யான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட் டத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Flash News:1062 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Flash News:1062 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை தகவல்.

இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!


இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!

இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!

Thursday, 11 February 2016


1. PAY ORDER FOR 90 P.G COMMERCE POSTS UPTO 31.12.2016

2. PAY ORDER FOR 90 P.G COMMERCE POSTS UPTO 31.12.2016
PAY ORDER FOR ONE YEAR TO 100 HM POSTS AND 900 P.G POSTS

3. PAY ORDER FOR ONE YEAR TO 100 HM POSTS AND 900 P.G POSTS
306 TEACHING & 126 NON TEACHING POSTS PAY ORDER



1. PAY ORDER FOR 90 P.G COMMERCE POSTS UPTO 31.12.2016

2. PAY ORDER FOR ONE YEAR TO 100 HM POSTS AND 900 P.G POSTS

3. 306 TEACHING & 126 NON TEACHING POSTS PAY ORDER