Powered By Blogger

Thursday, 10 December 2015

தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் ’சஸ்பெண்ட்’.

தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் ’சஸ்பெண்ட்’.
அரசுப்பள்ளி நிர்வாகத்தில் அலட்சியமாக இருந்த தலைமையாசிரியர், ஒழுங்கீனம் மற்றும் மாணவர்களை துாண்டிவிட்ட,இரண்டு ஆசிரியர்கள் என, மூவரையும், சஸ்பெண்ட் செய்து, சி.இ.ஓ.,உத்தரவிட்டார்.


அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை ஆசிரியராக ஜெயவேல் பணியாற்றி வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இதே பள்ளியை சேர்ந்த தொழிற்கல்வி ஆசிரியரான ராயப்பன், துாண்டுதலால், சில நாட்களுக்கு முன், ஆசிரியர் ஜெயவேலை, ஆறு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,பள்ளி தலைமையாசிரியர் சின்னதுரை, ஆசிரியரை தாக்கிய, ஆறு மாணவர்களையும் இடைநீக்கம் செய்தார்.

அதிருப்தியடைந்த மாணவர்கள், மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஜெயவேல் மீது,நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த, அனுமதி கோரி நேற்று முன்தினம் அரியலுார் போலீசில் மனு அளித்தனர். அரியலுார் மாவட்ட சி.இ.ஓ., மாரிமுத்து, பள்ளியில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஒழுங்கீன புகாரில் சிக்கிய ஆசிரியர் ஜெயவேல், மாணவர்களை துாண்டிவிட்ட ஆசிரியர் ராயப்பன் மற்றும் பள்ளி நிர்வாகத்தை முறையாக செயல்படுத்தாத தலைமை ஆசிரியர் சின்னதுரை ஆகியோரை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment